File Photos |
Submitted by MD.Lucias on Fri, 10/10/2014 - 18:55
ஜனநாயக கட்சி தலைவர் சரத் பொன்சேகா, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இடையில் இன்று மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனநாயக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில், மனோ கணேசனுடன், கட்சியின் அரசியல்குழு உறுப்பினர்களான எஸ். ராஜேந்திரன், சண். குகவரதன், பிரியாணி குணரத்ன ஆகியோரும் இடம் பெற்றனர்.
இந்த சந்திப்பின் போது, உத்தேச ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
பொது எதிரணியின் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் போட்டியிடுவதையும், அதேவேளை இந்த பொது எதிர்கட்சி கூட்டணி ஒரு பொது சின்னத்தில் களமிறங்க வேண்டும் என்பதையும் தான் வலியுறுத்தி வருவதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த காலங்களை போல், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மீதும், பொது எதிர்கட்சி கூட்டணியின் மீதும், புலி முத்திரை குத்தி இனவாத பிரசாரத்தை முன்னெடுக்க இந்த அரசுக்கு தான் இடமளிக்க போவதில்லை என்றும், இது தொடர்பான இறுதி நிலைபாட்டை உரிய வேளையில் அறிவிப்பதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளதாகவும், ஜனநாயக கட்சியும், ஜனநாயக மக்கள் முன்னணியும், பொது எதிரணியில் காத்திரமான பங்கை கூட்டாக வகிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment