Friday, 10 October 2014

சந்திரிக்காவின் ஆதரவை பெற பொதுச் சின்னத்திற்கு இணங்கிய ரணில்?


சந்திரிக்காவின் ஆதரவை பெற பொதுச் சின்னத்திற்கு இணங்கிய ரணில்?
[ வெள்ளிக்கிழமை, 10 ஒக்ரோபர் 2014, 11:46.47 AM GMT ]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவை பெற்றுக்கொள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க பொதுச் சின்னத்தில் போட்டியிட இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பலரின் ஆதரவை பெற்று தருவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்கவிடம் கொள்கை ரீதியான வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளார்.

அத்துடன் பதிவு செய்யப்பட்ட ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது கட்டாயம் என்ற நிபந்தனையையும் அவர் முன்வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையக தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் சுதந்திரக் கட்சியின் 40 அமைச்சர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தம்முடன் இணைந்து கொள்ள இருப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவிற்கு திஸ்ஸ அத்தநாயக்கவே தலைமை தாங்குகிறார்.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...