Monday 2 June 2014

`கொள்ளை போகும்` ஈழ தேசம்!


படையினரால் நிலஅபகரிப்பு : அச்சுவேலியில் போராட்டம்  

இராணுவத்தினர் முன்னெடுக்கும்  நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக அச்சுவேலி பொதுமக்கள் இன்று காலை   எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்.குடாநாட்டினை படையினர் கைப்பற்றிய காலம் முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு தலைமை அலுவலக கட்டிடத்தொகுதி மற்றும் அதனை அண்டியுள்ள சுமார் பத்து ஏக்கர் வரையிலான நிலப்பரப்பினை நிரந்தரமாக சுவீகரிக்க தற்போது இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

குறித்த காணியில் பெருமளவிலான நிலப்பரப்பு படையினரது விளையாட்டு மைதானமாகவே அமைந்துள்ளதுடன் யாழ்ப்பாணம்- அச்சுவேலி வீதி மற்றும் நிலாவரை வீதிகளை உள்ளடக்கியதாக இத்தளம் அமைந்துள்ளது.

குறித்த காணிகளை சுவீகரிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று நில அளவை பணிகள் நடைபெற்றவேளை அங்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை அவைத்தலைவர், அமைச்சர், உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் மற்றும்  பொதுமக்களும் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து நிலஅளவை பணிகள் நிறுத்தப்பட்டதுடன் இராணுவ அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்.

இதேவேளை வடக்கில் தொடரும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோதும் அதனை தாண்டி தொடர்ந்தும் நில ஆக்கிரமிப்பு தொடர்வது குறிப்பிடத்தக்கது.

காணி சுவீகரிப்பிற்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
------------------
புதன், மே 28, 2014 - 13:02 மணி தமிழீழம் | தவராசா, கிளிநொச்சி

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மற்றும் ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டம் உட்பட பல பகுதிகள் இன்னமும்இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த காணிகள் வீடுகளுக்குச் சொந்தமான மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனார்.

அந்த மக்களுக்குச் சொந்தமான காணகள் வீடுகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதுடன் அவை உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்படல்  வேண்டும் எனவும்  வலியுறுத்தியும்,

மேற்படி மக்களுக்குகாக நீதி கேட்டுப் போராட முற்பட்ட கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் அவர்கள் விடுவிக்கப்படல் வேண்டும் என வலியுத்தியும்,

கிழக்கு மாகாணத்தில் சம்புர் கிராமம், முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு கிராமம், யாழ் மாவட்டத்தில் வலி வடக்கு, வளலாய், கிளிநொச்சி மாவட்டத்தில் பரவிப்பாஞ்சான், மருதநகர், பாரதிபுரம், இரணைதீவு உள்ளிட்ட பகுதிகளில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள வீடுகள் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோாிக்கைகளை வைத்தே மேற்படி போராட்டம் இடம்பெற்றது.

இன்று காலை 11.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை கிளிநொச்சி கச்சோிக்கும் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
கடுமையான இராணுவ அச்சுறுத்தல்கள் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.

இப்போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளார் விசுவலிங்கம் மணிவண்ணன் உட்பட மாவட்ட கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனார்.

பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவ ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களும், ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்ட உரிமையாளார்கள் போன்றோரும் கலந்து கொண்டனா்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சுரேஸ்பிறேமச்சந்திரன், மாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, ரவிகரன், சிவாசிலிங்கம், ஐங்கரநேரசன், குருகுலராசா, பிரதேச சபை உறுப்பினர்களான சஜீவன், சதீஸ், கிளி பிரதேச சபைத் தலைவர் குகராஜா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் அவர்களை கைது செய்து பொய்க்குற்றச் சாட்டுக்களை சுமத்தி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அடைப்பதன் மூலம் இப் போராட்டத்தினை குழப்பிவிடலாம் என்று அரசு செயற்பட்டது.

எனினும் கைது அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெற்றிகரமாக மேற்படி போராட்டத்தினை நடாத்தி சர்வதேச சமூகத்திற்கு கிளிநொச்சி மக்களின் நில ஆக்கிரமிப்பு பிரச்சினையை வெளிப்படுத்தியுள்ளது.
===================
 சாவகச்சேரி நுணாவில் மத்தி பொதுமக்கள் நில அபகரிப்பு எதிர்ப்புப் போராட்டம்

காணிகளை படையினருக்கு தாரைவார்க்க உரிமையாளர்களுக்கு அழைப்பு
இராணுவத்தினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பிற்கு எதிராக சாவகச்சேரி நுணாவில் மத்தி பொதுமக்கள் இன்று காலை 10 மணியளவில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சாவகச்சேரி, நுணாவில் வைரவர் கோவிலுக்கு அருகாமையில் J/312 கிராமசேவகர் எல்லைக்குற்பட்ட 11 தனி காணி உறுதிகள் கொண்ட 7 ஏக்கர் காணிகளை கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் படையினர் ஆக்கிரமித்து முகாம் அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த காணி உரிமையாளர்களுக்கு திருநெல்வேலி பிரதேச நிலஅளவை காரியாலயத்தால் அறிவித்தல் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது அதில்:-

குறித்த காணிகளை சுவீகரிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று நில அளவை பணிகளை மேற்கொள்ள வந்த திணைக்கள அதிகாரிகளை அங்கு கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை அவைத்தலைவர், அமைச்சர்,உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் மற்றும்  பொதுமக்களும் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தினர்.

இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பதற்றம் நிலவியது அதனைத் தொடர்ந்து நிலஅளவை பணிகளை நிறுத்திவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர்.

முல்லைத்தீவில் விவசாய, மீனவர்கள் பிரச்சனை.

விவசாய நிலங்கள் சிங்களவர்களால் பறிமுதல்.
கடற்தொழிலில் சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பு.
அனைத்துக்கும் இராணுவம் பக்க பலம்.
வடக்கு முதலமைச்சர் விக்கிக்கு முல்லை மக்கள் முறையீடு.
அதிகாரம் இல்லையென்று அரசர் அலறல்!
BBC Tamil


No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...