SHARE

Tuesday, January 07, 2014

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும்: ராம்

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும்: ராம்
சனிக்கிழமை, 04 ஜனவரி 2014 18:54 0 COMMENTS

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் நாடளாவிய ரீதியாக தொடர்ந்த வண்ணமேயுள்ளன . 

இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது . எனவே இதனை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மேல் மாகாணசபையின் ஐக்கிய தேசியக் கட்சியின உறுப்பினர் சி.வை.எம். ராம் தெரிவித்துள்ளார்.

கண்டி பூஜாபிட்டி பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட முல்லேகம பிரதேசத்தில் உள்ள மஸ்ஜிதுல் பள்ளிவாசலானது  இனந்தெரியாத சிலரால் தாக்குதலுக்கு ள்ளாக்கப்பட்டுள்ளது . இந்த சம்பவம் தெடர்பில் எவ்வித பாரபட்சமுமின்றி உறிய விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்க வேண்டுமெனவும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் . அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது .

சிறுபான்மையினரின் வணக்கஸ்தளங்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமேயுள்ளன இதனால் சிறுபான்மையினர் மிகுந்த வேதனைக்கும் விரக்திக்கும் ஆளாகியுள்ளனர் .இவ்வாறான செயற்பாடுகள் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் .

மதங்களுக்கிடையே  ஒற்றுமையினை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கமும்  ஒற்றுமையும் ஏற்படும் .அல்லாமல்ஒருபோதும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

நாட்டில் ஜனநாயகத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி அனைத்து மக்களும் சமாதானத்துடன் ஒன்றுபட்டு வாழ்வதற்கு இவ்வாறான சம்பவங்கள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...