SHARE

Tuesday, January 07, 2014

பள்ளித் தாக்குதல்கள்!


பள்ளிவாயல்கள் சம்மேளனத்திற்குரிய காணியின் வேலி இனம்தெரியாதோரால் சேதமாக்கல்
Submitted by ceditor on Wed, 01/01/2014 - 16:46(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவின் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள சிகரம் கிராமத்தில் பள்ளிவாயல்கள் சம்மேளனத்திற்கு சொந்தமான காணியின் சுற்று வேலி மற்றும் தற்காலிக வீடு என்பன இன்று புதன்கிழமை அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.


மேற்படி கிராமத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கு சொந்தமான காணிக்குள் இன்று அதிகாலை நுழைந்த சிலர் அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த தற்காலிக வீடு மற்றும் அக் காணியின் சுற்று வேலி என்பவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதன்போது அங்கு தங்கியிருந்தவர்கள் பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து பொலிசார் அங்கு விரைந்து நிலைமைகளை பார்வையிட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் சேதப்படுத்தப்பட்ட பகுதியினை  பார்வையிட்டதுடன் சிகரம் கிராம மக்களுடனும் கலந்துரையாடினார்.

இது தொடர்பாக சட்ட நடவடிக்கையினை எடுக்குமாறு பொலிசாருடன் பேசியுள்ளதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
==================
அக்குறணை பள்ளிவாசல் மீது செவ்வாய் இரவு தாக்குதல்
2014-01-01 15:16:48 | General
கலஹா நிருபர்

அக்குறணை வெலேகட மஸ்ஜிதுல் பலாஸ் பள்ளிவாசல் மீது நேற்று இரவு இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் பள்ளிவாசல் கண்ணாடிகள் பலத்த சேதமடைந்துள்ளன. முச்சக்கரவண்டிகள் மற்றும் வான்களில் வந்திறங்கிய சுமார் 20 இற்கும் மேற்பட்ட நபர்களே  பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதால் அவர்களை கைது செய்ய முடியாமல்  போய்விட்டதாக பொலிஸார்   தெரிவித்தனர்.

பிரதியமைச்சர் அப்துல்  காதர்,  ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலாளர் மற்றும் பௌத்த  பிக்குகள் சம்பவ இடத்திற்கு  நேற்று  வருகைதந்து பார்வையிட்டனர்.

இத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கட்டுகஸ்தோட்டை  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

- See more at: http://www.thinakkural.lk/article.php?local/euvwqyumkz9220e4d09d3f57210560gikxc2c971c8b2bf8efb416a0awbnaq#sthash.rGIWAbKD.dpuf
================
பேரினவாதக் கும்பலால் புத்தாண்டில் பள்ளிவாசல் மீது தாக்குதல்கள்!

இலங்கையின் கண்டி மாவட்டத்தின் பூஜாப்பிட்டிய என்ற ஊரிலுள்ள மஸ்ஜிதுல் பலாஹ் என்ற பள்ளிவாசலை, 2014ம் ஆண்டு புதுவருடம் பிறப்பதற்கு ஓரிரு மணித்தியாலங்கள் முன்பு பேரினவாதக் கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. கடந்த 31ம் திகதி இரவு 10 மணியளவில் குறிப்பிட்ட பள்ளிவாசலின் ஜன்னல்களுக்குக் கல்லெறிந்து அவற்றைச் சேதப்படுத்தியதோடு, கதவை உடைத்து, பள்ளிவாசலினுட் புகுந்து இந்த இனத் துவேஷ காடையர் கூட்டம் வெறியாட்டம் ஆடியிருக்கிறது.

அண்மைக் காலங்களில் பௌத்தமல்லாத மதஸ்தலங்களின்  மீதான தாக்குதல்கள் இலங்கையில் மிகவும் திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருப்பது கவலை தருகிறது. மேலும், உள்ளூர் மற்றும் சர்வதேசத்தின் கண்டனங்களைக் கிஞ்சித்தேனும் பொருட்படுத்தாது நிகழ்த்தப்படும் இத்தகைய மிலேச்சத்தனமான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்தவொரு ஆக்கபூர்வ நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் எடுக்கப்படாமல் இருப்பதானது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

சமீப காலத்தில் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட 27 வது பள்ளிவாசல் இதுவாகும். தலைநகரம் தொடக்கம் கிராமங்கள் வரையிலான இத்தனை பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டும், அதற்குக் காரணமானவர்களென இதுவரை எவருமே கைது செய்யப்படவில்லை என்பது, இவ்வாறான சம்பவங்களின் பின்னால் அரசாங்கத்தின் உயர்மட்டத்திலுள்ள சிலருக்கு இருப்பதாகக் கூறப்படும் தொடர்பு பற்றிய சந்தேகங்களையும் ஊகங்களையும் மேலும் வலுவாக்குகிறது.

இனங்களுக்கிடையிலான உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்துவதன் மூலம் தமது அரசியல் வியாபாரத்தை இலாபகரமாக நீண்ட காலங்களுக்கு நடத்த முடியுமென்ற கேவலமான எண்ணங்களில் மூழ்கிக் கிடப்போர், தமது எண்ணங்களை மறு பரிசீலனைக்குட்படுத்துவது அவசியமென இன உறவையும் சகோதர சக வாழ்வையும் விரும்பி நிற்கும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...