SHARE

Tuesday, January 07, 2014

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி: சிறுவர்களின் பற்களும் மீட்பு


திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி: சிறுவர்களின் பற்களும் மீட்பு
சனிக்கிழமை, 04 ஜனவரி 2014 17:56 0 COMMENTS

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார்,திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியிலிருந்து சுமார் 70 மீற்றர் தொலைவில் உள்ள மனித புதை குழியில் இருந்து இன்று சனிக்கிழமையும் மேலும் 3 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.அத்துடன் சிறுவர்களின் பற்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியிலிருந்து  கடந்த 20 ஆம் திகதியில் இருந்து இன்று சனிக்கிழமை வரைக்கும் மனித எலும்பு கூடுகள் 18 உம், மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைய அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர்  டி.எல்.வைத்திய ரெட்ன முன்னிலையில் இன்றும் காலை 8 மணிமுதல் மாலை 2.15 மணிவரைக்கும்  மனித புதைகுழி தோண்டப்பட்ட போது 3மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
இதே வேளை குறித்த புதை குழியினுள் இருந்து மனித பற்கள் சில மீட்கப்பட்டுள்ளதோடு குறித்த பற்கள் சுமார் 6 வயதுடைய சிறுவர்களுடையதாக இருக்கலாம் என அதிகாரிகள் ஊகிக்கின்றனர்.

குறித்த மனித புதைகுழி தோண்டும் பணி மீண்டும் எதிர்வரும் 6 ஆம் திகதி திங்ழகட்கிமை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்பாட்டுக்கு இலங்கைக்குள் இடமளியோம். ஏப்ரல் 5, 2025 ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதிமேதகு பிரதமர் ஸ்ரீ நரேந்த...