மன்னாரில் இராணுவத்தினர் மரக்கறி வியாபாரம்!
அதிர்ச்சியில் வியாபாரிகள்!
[ வியாழக்கிழமை, 26 டிசெம்பர் 2013, 10:23.07 AM GMT ]
மன்னார் நுழைவாயிலில் படையினர் கடந்த சனிக்கிழமை மரக்கறி வியாபார நிலையம் ஒன்றை திறந்து வியாபாரம் செய்து வருவதால் தாம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அப்பகுதி வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மன்னாரிலுள்ள வர்த்தகர்கள் தம்புள்ள உள்ளிட்ட இடங்களில் மரக்கறிகளை கொள்வனவு செய்தே மன்னாரில் விற்பனை செய்து வருகின்றனர்.
குறிப்பாக இட வாடகை, வரி, செலவுகள் என்பவற்றை கருத்தில் கொண்டே விலைகளை தீர்மானித்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால் படையினர் திறந்துள்ள மரக்கறி நிலையத்தில் மிகவும் மலிவான விலையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் தமது வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதுடன் தமது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பர்மாவிலும் எகிப்திலும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் -மொத்தத் தேசிய உற்பத்தியின் GDP-பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்ட இராணுவ வர்க்கம் எவ்வாறு அரசதிகாரத்தைக் கைப்பற்றி பாசிச ஆட்சிமுறையைக் கட்டவிழ்த்து வருகின்றதோ, அவற்றை அந்நிய நிதிமூலதன நலன் எவ்வாறு பாதுகாத்து பயன் அடைந்து வருகின்றதோ அதுவே சிங்களத்தின் கதையுமாகும்!
No comments:
Post a Comment