SHARE

Wednesday, May 29, 2013

புத்தரின் பெயரால் இன, மத சண்டைகளை உருவாக்காதே! மட்டுமக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பரிப்பு!!

புத்தரின் பெயரால் இன, மத சண்டைகளை உருவாக்காதே!
 மட்டுமக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பரிப்பு!!

* இந்துக்கள் வாழும் ஊரில் புத்தர் எதற்கு?
* புத்தரின் பெயரால் இன, மத சண்டைகளை உருவாக்காதே!
*புத்த பகவானை ஆக்கிரமிப்பு சிலையாக மாற்றாதே!

மட்டக்களப்பு மாநகரசபை வரவேற்பு பகுதிக்கு அருகில் புத்தர் சிலையினை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத்
தெரிவித்தும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.

ஊறணி பிரதேச பொதுமக்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர். மட்டு.பிள்ளையாரடியில்
ஆரம்பமான ஊர்வலம் புத்தர் சிலை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு வரவேற்பு இடத்தை சென்றடைந்தது.
 
இந்த ஆப்பாட்ட பேரணியில் ஈடுபட்டோர் இந்துக்கள் வாழும் ஊரில் புத்தர் எதற்கு, புத்தரின் பெயரால் இன, மத சண்டைகளை உருவாக்காதே, புத்த
பகவானை ஆக்கிரமிப்பு சிலையாக மாற்றாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியும் புத்தர் சிலை வைப்பதற்கு எதிரான
கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட மட்டக்களப்பு மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி பிரிகேடியர் சுகத்த திலகரட்ன சிலை நிறுவ மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
 
எனினும் ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
 
May 29, 2013 

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...