SHARE

Wednesday, May 29, 2013

பௌத்த விழுமியங்களுக்கு அமைவாகவே இலங்கையின் அரசியல் யாப்பு - பொதுபல சேனா

May 29, 2013

பௌத்த விழுமியங்களுக்கு அமைவாகவே இலங்கையின் அரசியல் யாப்பு  அமைய வேண்டும் - பொதுபல சேனா

இலங்கையின் அரசியல் அமைப்பு பௌத்த விழுமியங்களுக்கு அமைவாகவே  உருவாக்கப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு
தெரிவித்துள்ளது. மாடுகள் கொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு தீக்குளித்த போவத்தே இந்திரரட்ன தேரரின் மறைவை  சிலர்
இழிவுபடுத்துகின்றனர் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

மிருக வதை மற்றும் மதமாற்றத்திற்கு எதிராக நாடாளுமன்றில் சட்டம் இயற்றப்பட வேண்டும். மிருக வதைக்கு எதிராக பல்வேறு வழிகளில்
போராட்டங்கள் நடத்தப்பட்டன.நாட்டின் அரசியலமைப்பு பௌத்த மத தர்மத்திற்கு அமைவான வகையில் உருவாக்கப்பட வேண்டும் என அவர்
தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...