Wednesday, 29 May 2013

வடக்கு, கிழக்கு தமிழரின் தாயகம் என்பது தவறான கோட்பாடு - அத்துரலிய ரத்தின தேரர்


வடக்கு, கிழக்கு தமிழரின் தாயகம் என்பது தவறான கோட்பாடு - அத்துரலிய ரத்தின தேரர்

[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 09:43 GMT ] [ கார்வண்ணன் ]

வடக்கு,கிழக்கு தமிழரின் தாயகம் என்பது தவறான கோட்பாடு, அதற்கு வரலாற்று ரீதியான எந்த ஆதாரங்களும் கிடையாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.

“வடக்கு கிழக்கு பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன.

ஆனால், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மாகாணசபைகள் தோல்வியடைந்து விட்டன.

அத்துடன், இந்த மாகாணசபைகள் சட்டத்துக்குப் புறம்பான வழிமுறையில் செய்யப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமே உருவாக்கப்பட்டன.
எனவே தான், இந்த சட்டத் திருத்தத்தை ஒழிப்பதற்கு ஜாதிக ஹெல உறுமய நடவடிக்கை எடுத்து வருகிறது.

வடக்கு,கிழக்கு பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 5000 இந்தியப்படையினர் உயிரைக் கொடுத்தனர்.

ஆனால் தீவிரவாதிகள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு இது தீர்வாகவும் அமையவில்லை.

தமிழரின் பாரம்பரிய தாயகம் என்ற அடிப்படையிலேயே வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன.

ஆனால், இது தவறான கோட்டபாடு, இதற்கு வரலாற்று ரீதியான எந்த ஆதாரமும் கிடையாது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...