SHARE

Tuesday, December 04, 2012

“மாவீரர் தினத்தை அனுஸ்டிப்போம்”, “மாணவர்கள் மீது வன்முறை புரியாதே”கண்டன ஆர்ப்பாட்டத்தில் யாழ் மக்கள் முழக்கம்!


“மாவீரர் தினத்தை அனுஸ்டிப்போம்”, ''மாணவர்கள் மீது வன்முறை புரியாதே''!

கண்டன ஆர்ப்பாட்டத்தில் யாழ் மக்கள் முழக்கம்!

மாவீரர்களை நினைவு கூர்ந்ததற்காக சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், `மாவீரர் தினத்தை
அநுஸ்டிப்போம்` என சிங்களத்தை எச்சரித்தும் யாழ். பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

* அரசே தமிழர்களின் கல்வி வளத்தை அழிக்காதே!
* கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்!
* அரச பயங்கரவாதம் எமக்கு வேண்டாம்!
* கல்வியைத் தொடர பல்கலை மாணவர்களை உடனே விடுதலை செய்!
* இனப்படுகொலை இராணுவமே உன் அராஜகத்தை உடனே நிறுத்து!
* இராணுவமே எமது மண்னை விட்டு வெளியேறு!
* சர்வதேசமே தமிழர்களின் சுயநிர்ணய உரிமையினை அங்கிகரி!
* மாணவர்களின் ஜனநாயக உரிமையினை பறிக்காதே!
* தாக்காதே தாக்காதே மாணவர்களை தாக்காதே!
* பல்கலைக் கழக விடுதிக்குள் உனக்கு என்ன வேலை!
* “மாவீரர் தினத்தை அனுஸ்டிப்போம்”!
* “மாணவர்கள் மீது வன்முறை புரியாதே”!
* “கைது செய்த மாணவர்களை விடுதலை செய்“!
* “சர்வதேசமே இனியும் மௌனம் காக்காதே” !
* “தாக்காதே தாக்காதே... ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தாக்காதே”!
* “ஜனநாயக உரிமைகளை மிதிக்காதே”!


இவ்வாறு முழக்கங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கி, கண்டன முழக்கமிட்டவாறு   மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டனர்!
இவ் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், ஈ.சரவணபவன், மாவை சேனாதிராஜா, மற்றும் நவ சம சமாஜ கட்சியின் உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர், தொழிற்சங்கப் பிரதிநிதிகள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம், பல்கலைக்கழக போராசிரியர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

நன்றி: தகவல் உதயன்

No comments:

Post a Comment

Modi meets Yunus in Bangkok

PM Modi meets Bangladesh Chief Adviser Yunus, raises India’s concerns over safety of Hindus External Affairs Minister S Jaishankar and Natio...