Tuesday, 4 December 2012

அபாசுக்கு ஐ.நா.சூடிய `அரசுப் பட்டம்`, பாலஸ்தீனப் போராளிகளைப் பிரித்தழிக்கும் திட்டமே!


Cartoon | Mother Palestine gives Israel agent Mahmoud Abbas a lesson on the Right of Return
 ~ by @CarlosLatuff
அபாசுக்கு ஐ.நா.சூடிய `அரசுப் பட்டம்`, பாலஸ்தீனப் போராளிகளைப் பிரித்தழிக்கும் திட்டமே!

ஐ.நா.சபையில் பாலஸ்தீனத்துக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் `உறுப்புரிமையற்ற அரசுப் பட்டம்` வெறும் தம்பட்டமே.அது பாலஸ்தீனத்தின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது ஏனெனில் பாலஸ்தீனர்களுக்கு அரசியல் அதிகாரம் இல்லை, அவர்களிடம் அரசும் இல்லை. காசாப் பகுதியில் ஹமாஸ் இயக்கமும், West Bank பகுதியில் PFLP மற்றும் குழுக்களும் பகுதியான அதிகாரத்தைக் கொண்டுள்ளன.எனினும் இதை அழிப்பதற்காக இஸ்ரேல் தொடர்ந்து வலிந்து யுத்தம் தொடுத்து அந்த அதிகாரத்துக்கான அடித்தளங்களை அழித்துவருகின்றது. இவையெதையும் தடுக்க வல்லமையில்லாத இந்த அரசுப்பட்டம் அபாசின் தம்பட்டமே! ``இப்போது எமக்கு அரசு இருக்கிறது`` என்கிறார் அபாஸ், அப்படியானால், முடிசூட்டு விழாவின் மறு நாளே ஜெருசலேமில் இஸ்ரேல் ஆரம்பித்துள்ள பாலஸ்தீன நில ஆக்கிரமிப்புத் திட்டத்தைத் தடுக்கட்டும் பார்ப்போம்! இந்த மோசடியின் ஈழத்து வடிவம் தான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்! பாலஸ்தீனப் போராளிகளைத் தனிமைப்படுத்தி இஸ்ரேலின் நம்பகமான நண்பனும், அமெரிக்கத் தரகனும், சமரசவாத சந்தர்ப்பவாத, சரணாகதியாளனும் அரபாத்தின் முதுகில் குத்திய கயவனும், பாலஸ்தீனத்தின் பாலசிங்கமுமான அபாஸுக்கு வழங்கும் சர்வதேச அங்கீகாரமே இந்தப் பட்டம்.

இதுகுறித்து லண்டன் நகரில் வெளிவரும்  Times பத்திரிகையின் இணையப் பதிப்பின் ஆசிரியர் தலையங்கத் தலைப்பு வருமாறு,

The State of Palestine
The UN has given Abbas a chance to start marginalising Hamas
Published at 12:01AM, November 30 2012 The Times UK

When Mahmoud Abbas returned to Ramallah after launching Palestine’s bid for statehood at the United Nations last year, he was given a hero’s welcome. When he returns after yesterday’s vote in New York to make Palestine a non-member observer state of the UN, the reception will be even rowdier. For this reason, among others, this step towards full statehood is constructive.
 

No comments:

Post a Comment

பத்தாவது பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை-தமிழ்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை. இன்று எமது பாராளுமன்றத...