Tuesday, 12 June 2012

அமெரிக்காவே ஈழதேசத்தின் உள்விவகாரத்தில் தலையிடாதே!

ஒபாமாவுக்கான புலம்பெயர் தமிழா, தலையீட்டிற்கு களம் அமைக்காதே!!

ஓடுகாலித் தமிழ்க் கூட்டமைப்பே, `தாயகக் கோட்பாட்டைத்` தாரைவார்க்காதே!!!


Hilary stress to hold Northern Provincial council [ Tuesday, 12 June 2012, 02:28.34 AM GMT +05:30 ]
US Secretary of Stated Hilary Clinton stress Lankan government to hold election for Northern provincial council.
Colombo base US embassy media spokesman made this announcement yesterday.During the meeting with the Minister of External Affairs at Washington last month Hilary Clinton brief the importance of holding election for Northern Provincial council.US embassy spokesman stated US government much more interested on this issue.


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் .

Wednesday, 30 May 2012 15:18 நாகலிங்கம்
 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்ளையிலருந்து விலகுமெனக் கருத
தேவையில்லையெனக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளதுடன் இது காலத்தில் தேவையெனவும்
தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;தற்போது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்துப் பேசப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும்எனினும் தேர்தல் குறித்த முடிவுகளை கட்சி கூடித் தீர்மானிக்கும். இது காலத்தின் தேவையாகும்.

தமிழ் மக்களின் அரசியல் பலத்தை தக்கவைப்பதற்கும், தமிழ் மக்கள் கூட்டமைப்புடன் தான் உள்ளனர் என்பதை சர்வதேசத்துக்கு காண்பித்து
அரசியல்தீர்வுக்கு வலுச் சேர்ப்பதற்கும் கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தைக் கைப்பற்றுவதன் மூலம் திட்டமிட்ட குடியேற்றம் காணி அபகரிப்பு
ஆகியவற்றை  தடுப்பதற்கும் ஒரு மார்க்கமாகவும் கூட்டமைப்பு இத் தேர்தலில் போட்டியிடுகின்றது.
இத்தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடுவதன் மூலம் கட்சி தனது கொள்கையிலிருந்து விலகியுள்ளதாக யாரும் கருதக் கூடாது. எம்மை பொறுத்த வரையில் வடக்கு, கிழக்கு இணைந்த தீர்வு என்பதே எமது கொள்கையாகும். யாரும் அதைக் கைவிட்டதாக கருதக்கூடாது.

வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பூர்வீகத் தாயகமாகும். கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட குடிசன புள்ளிவிபரத் தகவலின் அடிப்படையில் இதனைக் கண்டு கொள்ள முடியும்.உதாரணமாக 1960 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு கிழக்கிலிருந்த எந்தவொரு பெரும்பான்மையினரும் பாராளுமன்றம் சென்றதில்லை. இதன் மூலம் சிங்கள குடியேற்றம் தொடர்பில் தெரிந்து கொள்ள முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...