Thursday, 27 October 2011

லிபியாவில் நேற்றோ படுகொலை எண்பதினாயிரம் ENB


எட்டு மாதத்தில் நேற்றோ படுகொலை செய்த லிபிய மக்கள் குறைந்த பட்சம் எண்பதினாயிரம் ENB 
ராஜபக்சவை வென்ற ராஜ ராஜ சோழன் ஒபாமா,

துனூசியாவில் ஆரம்பித்த புதிய ஆட்சிமுறைக்கான மக்கள் கலகம், பரந்து விரிந்து பரவி வியாபித்து,  லிபியாவில் 2011 மாசி மாத நடுப்பகுதியில் வெடித்தது.

அப்போது அது தேசியக் கலகமாகவே தொடங்கியது. லிபியத் தளபதி கடாபியின் 40 ஆண்டுகால ஆட்சிமுறையின் அதிர்ப்தியின் வெளியீடாக இருந்தது.இதில் ஒரு மாறுதலை வேண்டி நின்றது.லிபியாவின் கண மோதலில் வீழ்த்தப்பட்டிருந்த பெங்காசிக் கணம் திருப்போலிக் கணத்துக்கு எதிராக கலகத்தில் இறங்கியது.

இந்த மோதல் எகிப்து மாதிரியான ஒரு மக்கள் இயக்கமாக வளர்ந்து விடாது தடுக்க ஏகாதிபத்தியவாதிகள் முயன்றனர்.

இதனை மூடிமறைக்க ~ பெங்காசியைக் காப்போம் `` என முழங்கி லிபிய நவீனகாலனியாதிக்க மறுபங்கீட்டில் குதித்தனர்.

பங்குனி மாதம் 17ம் திகதி இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு ஐ,நா,சபை அங்கீகாரம் வழங்கியது. ரசியாவும், சீனாவும் இதைத் தடுக்கவில்லை.

இந்த சர்வதேச சமூக ஆதரவுடன் நேற்றோ படையின் கொலை வெறி ஆக்கிரமிப்புத் தாண்டவம் லிபியாவில் ஆரம்பமானது.

இந்த ``மனிதாபிமான நடவடிக்கை`` (முள்ளிவாய்க்காலில் ராஜபக்ச உபயோகித்த அதே பதம்) படுகொலை செய்த லிபிய மக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

சித்திரை மாத பிற்பகுதியில் - நேற்றோ தாக்குதல் தொடங்கி ஒரே மாதத்தில் லிபிய மக்களின் உயிரிழப்பு முப்பதினாயிரத்தை தாண்டும் என அமெரிக்காவின் லிபியத் தூதுவர் உத்தியோகபூர்வமாக அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பங்குனியில் தொடங்கிய நேற்றோ தாக்குதல் ஐப்பசிவரை வரை தொடர்ந்தது. அதாவது இந்த அறிக்கை வெளிவந்ததைத் தொடர்ந்த ஆறு மாதப் படுகொலைகளை இதனுடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.

கடாபியின் கடைசித் போர்க்களத்தளங்களை தகர்த்து நிர்மூலாமாக்க நேற்றோ பொழிந்த குண்டுமழையின் விளைவான படுகொலைகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

சர்வதேச சமூகம் படுகொலைகளைத் தொடர்வதில் கடைப்பிடிக்கிற தீவிரத்தின் காரணமாக சடலங்களை எண்ணி கணக்குச் சொல்ல நேர அவகாசம் இல்லாதுள்ளது!

நீதிச் சபைகளின் கணித சமன்பாடுகள் கூட வர்க்க சார்பால் பிறழ்வுண்டு கிடக்கிறது!

ஆக ஏகாதிபத்தியவாதிகள் ``மனிதாபிமான நடவடிக்கை`` என்கிற பெயரால் எட்டு மாதங்களில் படுகொலை செய்த லிபிய மக்களின் எண்ணிக்கை
எண்பதினாயிரம் என எமது மிக நியாயமான அரசியல் தர்க்கத்தின் அடிப்படையில் பிரகடனம் செய்கின்றோம்!

 ( In the mean time we have to say its not a BODY COUNT ACCOUNT) அதேவேளையில் லிபியச் சடலங்களின் துல்லியமான கணக்கெடுப்பின் அடிப்படையில் இப் பிரகடனம் அமையவில்லை என்பதையும் தெரிவிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.


இது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இரண்டு மடங்கு!!

இதனால், தேசியப் படுகொலைகளில் ராஜபக்சவை வென்ற ராஜ ராஜ சோழன் ஒபாமா என பிரகடனம் செய்கின்றோம்.

புதிய ஈழப் புரட்சியாளர்கள்

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...