SHARE

Friday, December 11, 2020

சென்னைபஞ்சாப்பில் இருந்து 1,200 டிராக்டர்களில் மேலும் 50,000 விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டனர்:

 


போராட்டத்தை தீவிரப்படுத்த நடவடிக்கை: 

இன்று முதல் சுங்கச் சாவடிகள் முற்றுகை

தினகரன்  2020-12-12 

புதுடெல்லி: மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் 16வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1200 டிராக்டர்களில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளனர்.  மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் முகாமிட்டு 16வது நாளாக நேற்றும் தங்களின் போராட்டத்தை தொடர்ந்தனர். மத்திய அரசு நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்த நிலையில், இனி பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என விவசாயிகள் திட்டவட்டமாக கூறி உள்ளனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்வதை தவிர வேறெந்த நிபந்தனையையும் ஏற்கப் போவதில்லை என்ற உறுதியுடன் விவசாயிகள் போராடி வருகின்றனர். மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் செய்ய தயாராக உள்ளதே தவிர, எக்காரணம் கொண்டும் சட்டத்தை ரத்து செய்யக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இதனால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தமுடிவு செய்துள்ளனர்.

டெல்லிக்குள் நுழையும் அனைத்து சாலைகளையும் முடக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். இந்நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் கரங்களை பலப்படுத்தும் வகையில் பஞ்சாப்பின் பெரோசிபூர், பெசில்கா, அபோகர் பரித்கோட் மற்றும் மோகா ஆகிய பகுதிகளில் இருந்து மேலும் 50 ஆயிரம் விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டுள்ளனர். இது குறித்து மஸ்தூர் சங்கராஸ் கமிட்டி என்ற விவசாய அமைப்பின் தலைவர் சத்னம் சிங் கூறுகையில், ‘‘இனி எங்கள் போராட்டம் சாகும் வரை நடக்கும். எந்த சூழலிலும் எங்கள் நிலத்தை விட்டு வெளியேற மாட்டோம். எங்களுக்கு ஆதரவாக 1200 டிராக்டர்களில் மேலும் 50 ஆயிரம்  விவசாயிகள் பஞ்சாப்பில் இருந்து புறப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை (இன்று) டெல்லி சிங்கு எல்லையை வந்தடைவார்கள்,’’ என்றார்.

ஏற்கனவே அறிவித்தபடி, விவசாயிகள் இன்று நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை முடக்கும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். பாரதிய கிஷான் சங்க தலைவர் ராகேஷ் திகைத் கூறுகையில், ‘‘மோடி அரசையும், கார்ப்பரேட் நிறுவனங்களையும் எதிர்த்து இன்று சுங்கச்சாவடிகளை முடக்கும் போராட்டத்தை நடத்துவோம். அதைத் தொடர்ந்து வரும் 14ம் தேதி அனைத்து மாவட்ட முக்கிய நகரங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடைபெறும்,’’ என்றார். விவசாயிகள் மேலும் அதிகளவில் கூடுவதால் மத்திய அரசும் பாதுகாப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக விரோதிகளை அனுமதிக்காதீர்கள்

டெல்லி திக்ரி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஒரு பிரிவினர், பல்வேறு குற்றச்சாட்டின் கீழ் கைதானவர்களை விடுவிக்க கோரி கோஷமிடுவதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை தனது டிவிட்டரில் பதிவிட்ட மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ‘‘விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைக்க சமூக விரோதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளனர். எனவே விவசாய நண்பர்களே விழிப்புடன் இருங்கள். உங்கள் போராட்டத்தை சமூக விரோத சக்திகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காதீர்கள்’’ என கூறி உள்ளார்.

நாடு முழுக்க பாஜ ஆதரவு பிரசாரம்

விவசாயிகள் போராட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், 3 வேளாண் சட்டங்களால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாக நாடு தழுவிய பிரசாரத்தை முன்னெடுக்க பாஜ திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் 700 மாவட்ட கிராமங்களில் செய்தியாளர்கள் சந்திப்பு, பொது நிகழ்ச்சிகள் நடத்திய விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறி உள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் பாரத் கிசான் வழக்கு

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் விவசாய சங்கங்கள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ‘பாரத் கிசான் சங்கம்,’ உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், ‘வேளாண் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி மாற்று சந்தைகள் உருவாக்கப்பட்டால், அது விவசாய துறைகளை கண்டிப்பாக முழுமையாக சிதைத்து விடும். அதனால், இச்சட்டத்தை ரத்து செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Tuesday, December 08, 2020

அகில இந்திய விவசாயிகள் பொது முடக்கத்தை ஆதரித்து கழகம் மறியல் போராட்டம்!

 மக்கள் ஜனநாய இளைஞர் கழகம் தருமபுரியில் விவசாயிகளின் அகில இந்திய பந்த-ஐ ஆதரித்து மறியல் போராட்டம் நடைபெற்றது. அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்காக போராடியவர்கள் மீது அடக்குமுறையை தமிழகம் முழுவதும் மோடியின் எடுபிடி எடப்பாடி அரசு தொடுத்துள்ளது. இந்த அடக்குமுறையை மஜஇக வன்மையாக கண்டிக்கிறது. விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் இந்த மத்திய, மாநில அரசுகள் ஆட்சியிலிருக்க தகுதியில்லாத அரசுகள். இந்த மக்கள் விரோத அரசை தூக்கியெறிய அனைவரும் கிளர்ந்தெழ வேண்டும் என மஜஇக அனைவரையும் அறைகூவி அழைக்கிறது.







Monday, October 19, 2020

மலையக முரளியின் கிரிக்கெற் உலக சாதனை திரைப்படத்தை முடக்கிய தமிழக இனமான ஈழத் துரோகிகள்!



``தமிழகத்தின் தலை சிறந்த திரைப்படக் கலைஞனின் கலைப் பயணத்துக்கு என்னால் தீங்கு நேர்ந்து விடக்கூடாது, தயவு செய்து 800 இலிருந்து விலகுங்கள்``
முரளி (!9-10-2020)

``நன்றி வணக்கம்``.
சேதுபதி.(!9-10-2020)







Thursday, October 01, 2020

இந்திய விவசாய கிளர்ச்சி ஆர்ப்பாட்டம் வெல்க!


செப்டம்பர் 25 அகில இந்திய விவசாயிகள் போராட்டம் வெல்க!

* உற்பத்தி முதல் விலை நிர்ணயம் வரை அனைத்தையும் ஏகாதிபத்தியங்களுக்கும் - அம்பானி, அதானி கார்ப்பரேட்டுகளுக்கும் தாரை வார்க்கும் வேளாண் மசோதாக்களை முறியடிப்போம்!
* புதிய காலனிய வேளாண் மசோதாக்களை பாசிச முறையில் நிறைவேற்றிய அமெரிக்க அடிவருடி மோடி கும்பலை கருவறுப்போம்!
* உணவு தானிய கிடங்குகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் பொது விநியோக திட்டத்திற்கு மூடு விழா நடத்தும் வேளாண் மசோதாக்களை கிழித்தெறிவோம்!



* விவசாயத்துறை மீதான மாநில உரிமைகளை பறிக்கின்ற, விவசாயத்தையும் விவசாயிகளையும் முற்றாக அழிக்கின்ற சட்டங்களை ஆதரிக்கும் எடப்பாடி கும்பலே! ஆட்சியை விட்டு வெளியேறு!!
* விவசாயத்தை கார்ப்பரேட்மயம் - தாராளமயம் - வணிகமயமாக்கும் உலக வர்த்தக கழகம் உள்ளிட்ட புதிய காலனிய நிறுவனங்களிலிருந்து வெளியேறு!
* வேளாண்மையை வணிகமயம் - தாராளமயமாக்கி 5 லட்சம் விவசாயிகளை படுகொலை செய்த துரோகத்தை துவக்கி வைத்த காங்கிரசு கும்பலின் நாடகங்களை அம்பலப்படுத்துவோம்!
* சிறப்பு பொருளாதார மண்டலங்கள், கார்ப்பரேட்டுகள், பெரும் நிலவுடமையாளர்கள் - கோவில் மற்றும் மடங்களுக்கு சொந்தமான அனைத்து நிலங்களையும் தேசவுடமையாக்க புதிய ஜனநாயக விவசாயப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

* விவசாயிகள் போராட்டத்தை, (புதிய ஜனநாயக அரசியல்)* கிளர்ச்சிப் போராட்டங்களாக வளர்த்தெடுப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

What Trump’s National Security Strategy Gets Right

  What Trump’s National Security Strategy Gets Right Despite the Bombastic Rhetoric, America Isn’t Retreating Rebeccah Heinrichs December 15...