SHARE
Sunday, March 20, 2016
Friday, March 18, 2016
இந்திய மக்களுக்கு காங்கிரசின் நற்செய்தி!
பசுவை தேசத் தாயாக அறிவித்தால் ஆதரிப்போம்: காங்கிரஸ்
By காந்திநகர்
First Published : 19 March 2016 03:35 AM IST
குஜராத் மாநிலத்தில், பசுவை தேசத் தாயாக அறிவிக்கும் முடிவை பாஜக தலைமையிலான மாநில அரசு எடுத்தால் ஆதரிப்போம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. எனினும், இதுதொடர்பாக பாஜக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, பசுவை தேசத் தாயாக அறிவிக்கக் கோரி, விவசாயிகள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அங்கிருந்த 8 விவசாயிகள் பசுவை தேசத் தாயாக அறிவிக்கக் கோரி பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தினர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டனர். அதில், ஹிந்தாபாய் வம்பாடியா என்ற விவசாயி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம், குஜராத் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை எதிரொலித்தது. அவையில் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சங்கர்சிங் வகேலா வலியுறுத்தினார். ஆனால், அதற்கு பேரவைத் தலைவர் கண்பத் வசாவா அனுமதி மறுத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்எம்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நிதீஷ் படேல் கூறுகையில், ""மாட்டிறைச்சியை உண்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் மேலிடம் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், கேரளத்தில் காங்கிரஸ் எம்எம்ஏ ஒருவர் கடந்த காலத்தில் மாட்டிறைச்சி விருந்து அளித்துள்ளார். எனவே, பசுவதை பற்றி பேசுவதற்கு காங்கிரஸýக்கு உரிமை இல்லை'' என்றார்.
சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் சங்கர்சிங் வகேலா கூறுகையில், ""பசுவை தேசத் தாயாக பாஜக அறிவித்தால், அதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும். வாக்குகளைக் கவர்வதற்காக மட்டுமே பசுப் பாதுகாப்பு பற்றி பாஜக பேசுகிறது'' என்றார்.
கடையடைப்புப் போராட்டம்: இதனிடையே, பசுவை தேசத் தாயாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, "பசு பாதுகாப்பு சமிதி' என்ற அமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, ராஜ்கோட் மாவட்டத்திலும், செளராஷ்டிரம் பகுதியிலும் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இந்தப் போராட்டத்துக்கு, விஹெச்பி, பஜ்ரங் தள், படேல் இடஒதுக்கீட்டுப் போராட்டக் குழு ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
Thursday, March 17, 2016
'பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்`- தமிழ் Mirror
குறிப்பு: தமிழ் மிரர் சிறிலங்காவில் வெளிவரும் Daily Mirror ஆங்கிலப் பத்திரிகையின் சகோதர நாளாந்த தமிழ்பத்திரிகை ஆகும்.(ENB)
தமிழக ஊடகப் பிரச்சாரம்
நக்கீரன்
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார் ;
தமிழ்நாட்டில் வாழ்கிறார் - பரபரப்பு தகவல்
இலங்கையில் தமிழர்கள் வாழும் வட கிழக்கு பகுதிகளை ஒருங்கிணைத்து ஈழம் நாட்டை உருவாக்க ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பில் உளவுப் பிரிவுத் தலைவராக இருந்தவர் பொட்டு அம்மான். இவரது உண்மையான பெயர் சண்முகலிங்கம் சிவசங்கர்.
புலிகள் இயக்கத்தில் பிரபாகரனின் வலதுகரமாக பொட்டு அம்மான் திகழ்ந்தார். 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி கட்ட போர் நடந்த போது பிரபாகரனுடன் பொட்டுஅம்மானும் கொல்லப்பட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே 2014-ம் ஆண்டு அளித்த பேட்டியின் போது பொட்டு அம்மான் கொல்லப்பட்டு விட்டதாக கூறினார். என்றாலும் பொட்டு அம்மான் கொல்லப் பட்டாரா? என்பதில் சர்ச்சை நீடித்தது.
பொட்டுஅம்மான் உடலை காட்ட இயலவில்லை. பொட்டுஅம்மான் உடல் கிடைக்கவில்லை என்றனர். நந்தி கடல் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியும் பொட்டுஅம்மான் உடலை காண இயலவில்லை என்று ராணுவத்தினர் தெரிவித்தனர். இதன் காரணமாகவே பொட்டுஅம்மான் இறந்து விட்டார் என்பதற்கான சான்றிதழ்களை இந்தியா பல தடவை கேட்டும் இலங்கை அரசால் கொடுக்க இயலவில்லை.
இந்த நிலையில் பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள நாளி தழில் இன்று பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.
அந்த பத்திரிகை செய்தியில், பொட்டு அம்மான் உயிரோடுதான் உள்ளார். அவர் தமிழ்நாட்டில் மறைந்து வாழ்ந்து வருகிறார். ’குருடீ’ என்ற பெயரில் அவர் வாழ்ந்து வருகிறார். அவருடன் அவரது மனைவி மற்றும் உறவினர்களும் உள்ளனர். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அவர்கள் வசித்து வருகிறார்கள்.
இவ்வாறு அந்த சிங்கள பத்திரிகையில் கூறப்பட்டுள்ள தகவலால் ஈழத்தமிழர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினத்தந்தி
விடுதலைபுலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார் இலங்கை பத்திரிகை தகவல்
இலங்கையில் தமிழர்கள் வாழும் வட கிழக்கு பகுதிகளை ஒருங்கிணைத்து ஈழம் நாட்டை உருவாக்க ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பில் உளவுப் பிரிவுத் தலைவராக இருந்தவர் பொட்டு அம்மான். இவரது உண்மையான பெயர் சண்முகலிங்கம் சிவசங்கர்.
விடுதலைப்புலிகளின் உள் கட்டமைப்பு வலுவாக இருந்ததற்கு இவரது உளவுப் பிரிவு தகவல்கள் முக்கிய பங்கு வகித்தது. சிங்கள படை நகர்வுகளை மிகத் துல்லியமாக பிரபாகரனுக்கு பொட்டுஅம்மான்தான் வழங்கினார்.புலிகள் இயக்கத்தில் பிரபாகரனின் வலதுகரமாக பொட்டு அம்மான் திகழ்ந்தார். 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி கட்ட போர் நடந்த போது பிரபாகரனுடன் பொட்டுஅம்மானும் கொல்லப்பட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே 2014-ம் ஆண்டு அளித்த பேட்டியின் போது பொட்டு அம்மான் கொல்லப்பட்டு விட்டதாக கூறினார்.
என்றாலும் பொட்டு அம்மான் கொல்லப்பட்டாரா? என்பதில் சர்ச்சை நீடித்தது. பிரபாகரன் உடலை இந்த உலகுக்கு காட்டிய சிங்கள ராணுவத்தால் பொட்டுஅம்மான் உடலை காட்ட இயலவில்லை. பொட்டுஅம்மான் உடல் கிடைக்கவில்லை என்றனர்.நந்தி கடல் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியும் பொட்டுஅம்மான் உடலை காண இயலவில்லை என்று ராணுவத்தினர் தெரிவித்தனர். இதன் காரணமாகவே பொட்டுஅம்மான் இறந்து விட்டார் என்பதற்கான சான்றிதழ்களை இந்தியா பல தடவை கேட்டும் இலங்கை அரசால் கொடுக்க இயலவில்லை.
இந்த நிலையில் பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள நாளிதழில் இன்று பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ளார்
அந்த பத்திரிகை செய்தியில், பொட்டு அம்மான் உயிரோடுதான் உள்ளார். அவர் தமிழ்நாட்டில் மறைந்து வாழ்ந்து வருகிறார். ’குருடீ’ என்ற பெயரில் அவர் வாழ்ந்து வருகிறார். அவருடன் அவரது மனைவி மற்றும் உறவினர் களும் உள்ளனர். தமிழ்நாட் டின் பல பகுதிகளில் அவர்கள் வசித்து வருகிறார்கள்.பொட்டு அம்மான் உயிரிழந்துள்ளார் என்பது பற்றிய உறுதியான தகவல்களை கடந்த அரசாங்கம் இந்தியாவிற்கு வழங்கவில்லை இவ்வாறு அந்த சிங்கள பத்திரிகையில் கூறப்பட்டுள்ள தகவலால் ஈழத்தமிழர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Wednesday, March 16, 2016
வெற்றிச் செல்வி: மரணம் தாண்டியும் மறக்க முடியாது.
மனதின் மடல்
Posted on December 2, 2013
பிரியமானவனே,
கனவுகளோடும் கேள்விகளோடும்
கழிகிறது வாழ்நாள்.
நீயும் நானுமாய்
கண்ட கனவுகள்
கட்டிய கோட்டைகள்
மண்ணோடு மண்ணாகிப்போனது
உண்மைதான்.
என்றாலும்
உன்னோடு வாழ்ந்த
காலங்கள் போதுமென்று
எப்படி நான் ஆறிக்கொள்ள?
என்னவனே,
உன்னைப்போல்
நம் உறவுகளும்
ஊரவரும்
கண்ட கனவுகள் கொஞ்சமல்ல.
கிழக்கிலே உதயமும்
வடக்கிலே வசந்தமும்
வீசத் தொடங்கியபோதுதான்
நம் கனவுகள் கலைந்தன.
அட, அதுவரையும்
நாம் கனவிலேதான் வாழ்ந்தோமா?
நம்பத்தான் முடியுதில்லை.
இப்போதும்
எல்லாம் கனவுபோலத்தான் இருக்கிறது.
நல்லவனே,
உன் மௌனங்களை
எவரும் எனக்கு
மொழி பெயர்த்துச் சொல்லவில்லை.
அதை புரிந்து கொள்ளாதது
என் மடத்தனமா?
புரிய வைக்காதது
உன் மடத்தனமா?
புரியவே இல்லை.
உன்னோடு வாழ்ந்த
காலங்கள் கொஞ்சமே
என்றாலும் சுகமே.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
என்பதைப்போல,
உனது அருமையும் பெருமையும்
இப்போது புரிகிறது.
இருந்துமென்ன
நீயில்லாத வாழ்வை
வாழப்பிடிக்குதில்லை.
உன்னோடு பழகிய
அழகிய ஞாபகங்கள்
குடையென விரிந்து
நிழல்களை நினைவுபடுத்துகின்றன.
நம்வீட்டு ரோஜாக்களும்
மல்லிகைகளும்
உதிர்ந்து போனாலும்
அவைதந்த நறுமணங்கள்
மனசைவிட்டு அகலுதில்லை.
தோழனே,
நீ சொல்லித் தந்த தோழமையை
பற்றுப் பாசத்தை
தன்னம்பிக்கையை
மரணம் தாண்டியும்
மறக்க முடியாது.
என் ஆன்மா
அவற்றின் பதிவுகளோடேயே
அடுத்த பிறவி எடுக்கும்.
நெஞ்சம் நிறைந்தவனே,
உன்னை
காதலித்த காலங்களை
பவுத்திரப்படுத்துகிறது மனசு.
நீ இருக்கிறாயா?
இல்லையா?
என் குங்குமத்தை அழித்துக்கொள்ள
எனக்கு விருப்பமில்லை.
அதனால்
நீ இல்லை என்பதை
நான்
ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
நீ தந்த
நம்பிக்கைளோடேயே
காத்திருப்பேன்.
— வெற்றிச்செல்வி
வெற்றிச் செல்வி: போராளியின் காதலி
நாவல் குறித்து DJThamilan குறிப்பு:
இறுதி ஆயுதப்போராட்டம் வன்னிக்குள் உக்கிரமாகின்ற காலத்தில் (முதல் ஈழப்போரின் இறுதி நாட்களில் ENB), வைத்தியசாலையில் வேலை செய்கின்றவர்களின் மிகவும் துயராந்த வாழ்வு முறையும், காயப்பட்டும், இனித் தப்பவேமுடியாதென குற்றுயிராய் வருகின்ற உடல்களோடும் போராடுகின்ற -நாம் நம் கற்பனைகளில் வரைந்து பார்க்கவே முடியாத- பல இடங்கள் இந்நாவலில் வருகின்றன. 2009ல் யுத்தம் முடிந்து தடுப்பு முகாமில் இருந்தபோது எழுதப்பட்ட நாவல் இதென நினைக்கின்றேன். எனவே அதற்குரிய பலவீனங்கள் பல இருந்தாலும், நாம் கடந்து செல்ல முடியாத ஒரு புதினமாகவே கொள்கின்றேன்.
முக்கியமான வைத்தியசாலைகளில் கொண்டுவரப்படும் காயப் பட்டவர்களைப் பற்றிய சித்தரிப்புக்களை அவ்வளவு எளிதில் எவராலும் கடந்துவரமுடியாது.
வாசித்துக்கொண்டிருந்த ஒருகட்டத்தில் உடல் முழுதும் வியர்த்து, வயிறெல்லாம் பிரட்டுகின்ற நிலைமையில், இந்நூலை வாசிக்காது இரண்டு நாட்களுக்கு தவிர்த்துமிருந்தேன். பிறகு தொடர்ந்த வாசிப்பிலும் இவ்வாறான சம்பவங்கள் எழுதப்பட்ட இடங்களை மேலோட்டமாய் வாசித்து தாண்டிச் சென்றிருக்கின்றேன்.அந்தளவிற்கு கோராமான, எழுத்தில் வைக்கப்பட்டபோதுகூட மிக உக்கிரமான பகுதிகள் அவை.
இந்நாவலின் ஆசிரியரான வெற்றிச்செல்வி, 90களில் புலிகளோடு இணைந்து அவரது 19வது வயதில் வெடிவிபத்தொன்றில் வலது கையையும், கண்களில் ஒன்றையும் இழந்தவர். முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற ஆயுதப் போராட்டத்தின் இறுதிநாட்கள் வரை இருந்து, ஒன்றரை வருடத்திற்கு மேலாய் இலங்கையரசின் 'புனர்வாழ்வு' மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர். இன்று தனது சொந்த ஊரான மன்னாரில்(?) (மன்னார் நகரின் அடம்பன் கிராமத்தில் ENB) வசித்துக்கொண்டு மாற்றுத் திறனாளிகளோடு இணைந்து பணியாற்றுவதும், எழுதுவதுமாய் இருப்பதாய் அவரைப் பற்றிய குறிப்புகள் கூறுகின்றன.
இன்று ஈழத்திலும் புலம்பெயர்ந்தும் எழுதப்பட்ட புதினங்களின் பெரும்பாலானவற்றை வாசித்தவன் என்ற அடிப்படையில் ஒன்றையே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.(ஆடி 27, 2015)
இவ்வளவு மிகக்கொடுரமான காலத்தின் நேரடியாகவோ/நேரடியற்றோ சாட்சியங்களாக இருக்கும் நாம் எந்தவகையான அரசியலைப் பேசுவதாயினும் மிகநிதானமாவும், மிகுந்த பொறுப்புணர்வுடன் நம் ஒவ்வொரு வார்த்தைகளையும் பேசவேண்டும் என்பதையே.
http://djthamilan.blogspot.co.uk/2015/09/blog-post.html
Tuesday, March 15, 2016
Subscribe to:
Posts (Atom)
Sri Lanka and India on a transformative path: President
Sri Lanka and India on a transformative path: President AKD FT lk Monday, 7 April 2025 President Anura Kumara Disanayake Statement by the...

-
தமிழகம் வாழ் ஈழத்தமிழர்களை கழகக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக் கோருகின்றோம்!
-
சமரன்: தோழர்கள் மீது எடப்பாடி கொலை வெறித்தாக்குதல், கழகம்...