Thursday, 17 March 2016

'பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்`- தமிழ் Mirror


குறிப்பு: தமிழ் மிரர் சிறிலங்காவில் வெளிவரும் Daily Mirror ஆங்கிலப் பத்திரிகையின் சகோதர நாளாந்த தமிழ்பத்திரிகை ஆகும்.(ENB)

தமிழக ஊடகப் பிரச்சாரம்
நக்கீரன்
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார் ; 
தமிழ்நாட்டில் வாழ்கிறார் - பரபரப்பு தகவல்

இலங்கையில் தமிழர்கள் வாழும் வட கிழக்கு பகுதிகளை ஒருங்கிணைத்து ஈழம் நாட்டை உருவாக்க ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பில் உளவுப் பிரிவுத் தலைவராக இருந்தவர் பொட்டு அம்மான். இவரது உண்மையான பெயர் சண்முகலிங்கம் சிவசங்கர்.

புலிகள் இயக்கத்தில் பிரபாகரனின் வலதுகரமாக பொட்டு அம்மான் திகழ்ந்தார். 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி கட்ட போர் நடந்த போது பிரபாகரனுடன் பொட்டுஅம்மானும் கொல்லப்பட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே 2014-ம் ஆண்டு அளித்த பேட்டியின் போது பொட்டு அம்மான் கொல்லப்பட்டு விட்டதாக கூறினார்.  என்றாலும் பொட்டு அம்மான் கொல்லப் பட்டாரா? என்பதில் சர்ச்சை நீடித்தது. 

பொட்டுஅம்மான் உடலை காட்ட இயலவில்லை. பொட்டுஅம்மான் உடல் கிடைக்கவில்லை என்றனர். நந்தி கடல் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியும் பொட்டுஅம்மான் உடலை காண இயலவில்லை என்று ராணுவத்தினர் தெரிவித்தனர். இதன் காரணமாகவே பொட்டுஅம்மான் இறந்து விட்டார் என்பதற்கான சான்றிதழ்களை இந்தியா பல தடவை கேட்டும் இலங்கை அரசால் கொடுக்க இயலவில்லை.

இந்த நிலையில் பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள நாளி தழில் இன்று பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.

 அந்த பத்திரிகை செய்தியில், பொட்டு அம்மான் உயிரோடுதான் உள்ளார். அவர் தமிழ்நாட்டில் மறைந்து வாழ்ந்து வருகிறார். ’குருடீ’ என்ற பெயரில் அவர் வாழ்ந்து வருகிறார். அவருடன் அவரது மனைவி மற்றும் உறவினர்களும் உள்ளனர். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அவர்கள் வசித்து வருகிறார்கள்.

 இவ்வாறு அந்த சிங்கள பத்திரிகையில் கூறப்பட்டுள்ள தகவலால் ஈழத்தமிழர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினத்தந்தி

விடுதலைபுலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார் இலங்கை பத்திரிகை தகவல்

இலங்கையில் தமிழர்கள் வாழும் வட கிழக்கு பகுதிகளை ஒருங்கிணைத்து ஈழம் நாட்டை உருவாக்க ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பில் உளவுப் பிரிவுத் தலைவராக இருந்தவர் பொட்டு அம்மான். இவரது உண்மையான பெயர் சண்முகலிங்கம் சிவசங்கர்.

விடுதலைப்புலிகளின் உள் கட்டமைப்பு வலுவாக இருந்ததற்கு இவரது உளவுப் பிரிவு தகவல்கள் முக்கிய பங்கு வகித்தது. சிங்கள படை நகர்வுகளை மிகத் துல்லியமாக பிரபாகரனுக்கு பொட்டுஅம்மான்தான் வழங்கினார்.புலிகள் இயக்கத்தில் பிரபாகரனின் வலதுகரமாக பொட்டு அம்மான் திகழ்ந்தார். 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி கட்ட போர் நடந்த போது பிரபாகரனுடன் பொட்டுஅம்மானும் கொல்லப்பட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்தது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே 2014-ம் ஆண்டு அளித்த பேட்டியின் போது பொட்டு அம்மான் கொல்லப்பட்டு விட்டதாக கூறினார்.

என்றாலும் பொட்டு அம்மான் கொல்லப்பட்டாரா? என்பதில் சர்ச்சை நீடித்தது. பிரபாகரன் உடலை இந்த உலகுக்கு காட்டிய சிங்கள ராணுவத்தால் பொட்டுஅம்மான் உடலை காட்ட இயலவில்லை. பொட்டுஅம்மான் உடல் கிடைக்கவில்லை என்றனர்.நந்தி கடல் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியும் பொட்டுஅம்மான் உடலை காண இயலவில்லை என்று ராணுவத்தினர் தெரிவித்தனர். இதன் காரணமாகவே பொட்டுஅம்மான் இறந்து விட்டார் என்பதற்கான சான்றிதழ்களை இந்தியா பல தடவை கேட்டும் இலங்கை அரசால் கொடுக்க இயலவில்லை.

இந்த நிலையில் பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள நாளிதழில் இன்று பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ளார் 

அந்த பத்திரிகை செய்தியில், பொட்டு அம்மான் உயிரோடுதான் உள்ளார். அவர் தமிழ்நாட்டில் மறைந்து வாழ்ந்து வருகிறார். ’குருடீ’ என்ற பெயரில் அவர் வாழ்ந்து வருகிறார். அவருடன் அவரது மனைவி மற்றும் உறவினர் களும் உள்ளனர். தமிழ்நாட் டின் பல பகுதிகளில் அவர்கள் வசித்து வருகிறார்கள்.பொட்டு அம்மான் உயிரிழந்துள்ளார் என்பது பற்றிய உறுதியான தகவல்களை  கடந்த அரசாங்கம் இந்தியாவிற்கு வழங்கவில்லை இவ்வாறு அந்த சிங்கள பத்திரிகையில் கூறப்பட்டுள்ள தகவலால் ஈழத்தமிழர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...