SHARE

Sunday, May 25, 2014

ராஜபக்சே அழைப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு!


இந்தியாவின் 15வது பிரதமர் பாசிச மோடியின் பதவியேற்பு இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சிக்கு சார்க் நாடுகளோடு சகோதரத்துவம் என்கிற பெயரில் ஈழதேசிய தமிழின அழிப்புப் போர்க்
குற்றவாளி ராஜபட்சேவுக்கும் மோடி ஆட்சி அழைப்பு அனுப்பியுள்ளது.


இதை எதிர்த்து கழகம் கண்டனச் சுவரொட்டி வெளியிட்டது.


குஜராத் படுகொலையையும்,ஈழப்படுகொலையையும் கண்டித்து தமிழகமெங்கும் இனப்படுகொலை எதிர்ப்பு ,ஈழ ஆதரவு, இந்திய ஜனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களும், பொதுக்கூட்டங்களும்,மறியல் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

மே 17 இயக்கம்

ரஜனி இல்ல முற்றுகை

இந்நிகழ்வில் திரைப்பட நடிகர் ரஜனி மற்றும் விஜய் கலந்து கொள்வதை எதிர்த்து ரஜனியின் இல்லத்தை முற்றுகையிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு

ஈரோடு,புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிற்கும் இவ் எதிர்ப்பியக்கம் பரவிவருகின்றது.

மாணவர்கள் டெல்கியிலும், இதர பல்கலைக் கழகங்களிலும் போராட்டத்தில் குதித்தனர்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் திருவூரில் ரெயில் மறிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.



சாதி வெறியன் ராமதாசின் பா.ம.க.வும், ``கெப்ரன்`` விஜய்காந்தின் தே.மு.தி.க பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளன.ஜெயா அரசு பங்குகொள்வதில்லை அறிவித்து வாழ்த்து மட்டும் தெரிவித்துள்ளது. வருத்தம் தெரிவித்த கலைஞர் கருணாநிதி  எனினும் ராஜபக்ச வருகையை எதிர்க்க இது சரியான தருணம் அல்ல எனக்கூறியுள்ளார்.


மக்களின் இந்த உணர்வுக்கு அஞ்சி சமரசவாத,அதிகார பூர்வக் கட்சிகளும் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

26-05-2014 03.41

நன்றி: தகவல் ஊடகங்கள் - Face Book

போர்க்குற்றவாளி இராஜபட்சே அழைப்பை எதிர்த்து கழகம் முழக்கம்!

ஈழத் தமிழின அழிப்புப் போர்க் குற்றவாளி இராஜபட்சேவை, மோடி அழைப்பது தமிழ் மக்களுக்கும் தேசிய இனங்களுக்கும் செய்யும் துரோகமே!


Saturday, May 24, 2014

`மோடிக்கு அமோக வெற்றி` என்கிற ஊடக மோசடி!




நடந்து முடிந்த இந்தியாவின் 16வது மைய அதிகாரத்துக்கான லோக் சபா பொதுத் தேர்தலில் பாசிச மோடியின்  பா.ஜ.க.கட்சி அமோக வெற்றிபெற்று,
தனிப்பெரும்பான்மை கொண்டு அரசாங்கம்-ஆட்சி அமைக்க இந்திய ஜனநாயகம் முடிவு செய்து விட்டதாக ஒரு ஊடகப் புனைவும், பொய்யும், புரட்டும்,மோசடியும் உலக மக்களின் கண்களை மூடி மறைத்து வருகின்றது.

இந்திய தேர்தல் திணைக்கள இணைய தளம், 2014 பொதுத் தேர்தல் குறித்து வெளியிட்ட புள்ளிவிபரங்கள் வருமாறு.

வாக்களித்தோர் விகிதாசாரம் 75%, அதாவது 25% வாக்குரிமை பெற்ற இந்தியக்குடிமக்கள் வாக்களிக்கவில்லை.

வாக்களித்தோரில் பா.ஜ.க.31% மும், காங்கிரஸ் 19%மும் பெற்றன. ஆக மொத்தம் இந்த இரு பெரும் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகள் ஆக 50 % தான்.

ஆக 75% வீத இந்திய வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளே பா.ஜ.க வும்.காங்கிரசும்.

இவர்களுக்கு தேசியக் கட்சி என்று உரிமை கொண்டாட எந்த யோக்கியதையும் கிடையாது.

இதனால் இந்த தேர்தலை காங்கிரஸ் மீது மோடி கொண்ட வெற்றியாகக் கொள்வதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை.

மாறாக, அதிக பட்சம் இரண்டு கட்சிகளையும் பெரும்பான்மை இந்திய வாக்காளர் நிராகரித்த தேர்தல் என்றே கொள்ள முடியும்.

மேலும் 19% வாக்குப்பெற்ற காங்கிரஸ் 44 பன்றி இருக்கைகளைப் பெற்றிருக்கின்றது, தோராயமாக இதனை 1% வாக்குக்கு 2 இருக்கைகள் என எடுத்துக்கொள்ளலாம்.அப்படியாயின் 31% வாக்குப்பெற்ற பா.ஜ.க.அதிகபட்சம் 65 இருக்கைகளையே பெற்றிருக்க வேண்டும்.ஆனால் பா.ஜ.க.பெற்றதோ 282!!
இந்த 31% வாக்குகளின் மொத்தத் தொகை 171657549 (பதினேழேகால் கோடியாகும்). 19% காங்கிரஸ் வாக்குகள் 106938242 (பத்தரைக்கோடியாகும்). வாக்கு வேறு பாடு 64719307 (ஆறரைக் கோடியாகும்.)  பா.ஜ.க.வின் சராசரி இருக்கை வாக்கு 608714 .இதன்படி காங்கிரசுக்கு 175 இருக்கைகள் கிடைத்திருக்கவேண்டும். கிடைத்ததோ ஆக 44!

இது இந்தியத் தேர்தல் வரலாற்றில்இதற்கு முன் என்றும் நடந்திராத நிகழ்வு என Times of India பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. மேலும் அது கூறுகையில்
 இந்த இருக்கைகளில் பாதியைக்கூட இதற்கு முந்திய தேர்தல்களில் 31% வாக்குகளைக் கொண்டு எந்தக்கட்சியும் பெற்றதாக தேர்தல் குறிப்புகளில் ஆதாரம் இல்லை என்று ஆணையிடுகின்றது..

மாபெரும் இந்திய ஜனநாயகத்தில்விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மோசடியான தேர்தல் முறை இந்தத் தடவை மோடிக்கு துணைபோயிருக்கின்றது.

இது தான் மோடிப் பாசிசம் ஆட்சி பீடம் ஏறிய யோக்கியம்!

ஈழதேசிய இனப்படுகொலைக்கு மோடிப் பாசிசம் வழங்கும் அங்கீகாரத்தை அநுமதியாதீர்!


Friday, May 23, 2014

Toronto Sun வாக்கெடுப்பில் தமிழீழக் கொடி அமோக வெற்றி!

கனடா நாட்டில் ஒரு மாணவர் கலாச்சார நிகழ்வில் புலம்பெயர் தமிழீழ மாணவர் ஒருவர் தன் நாட்டு தேசியக் கொடி போர்த்திச் சென்றார். இதற்காக அவர் அந்நிகழ்வில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கனடா நாட்டில் இன்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக இருப்பதன் விளைவாக, அதிகாரம் தமிழீழக் கொடியையே தடை செய்தது.

இது குறித்து Toronto Sun பத்திரிகை ஒரு வாக்கெடுப்பை நடத்தியது.

இவரை இந்தக் கொடி ஏந்த அநுமதிக்கலாமா? என்பதே வாக்கெடுப்புக்கான கேள்வியாகும்.

இதை ஒரு விஞ்ஞானபூர்வ வாக்கெடுப்பாக கொள்ள முடியாதெனினும், வெகுஜனவிருப்பின் அடையாள வாக்காக நிச்சயம் கொள்ளமுடியும்.

அந்த வாக்கெடுப்பில் தமிழீழத் தேசியக் கொடி  அமோக வெற்றி ஈட்டியுள்ளது.
இதில் வெற்றி பெற அயராது உழைத்த ஈழ நெஞ்சங்களுக்கு இது மகிழ்சிக்குரிய வெற்றி விளைவாகும்! இத் தருணத்தில் Toronto Sun பத்திரிகை யின்  வாக்கெடுப்பு முடிவுக்கும்,முயற்சிக்கும் நன்றி கூறுகின்றோம்.







முள்ளிவாய்க்கால் மே 18: இசைப்பிரியா: சிங்களத்தின் கையில் பெண்வதைக்கு உள்ளா...

முள்ளிவாய்க்கால் மே 18: இசைப்பிரியா: சிங்களத்தின் கையில் பெண்வதைக்கு உள்ளா...: இசைப்பிரியா: சிங்களத்தின் கையில் பெண்வதைக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட யுத்தக் கைதி. இசைப்பிரியா என்கிற 27 வயதேயான எமது ஈழத்திரும...

Tuesday, May 20, 2014

சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் 6ம் ஆண்டு நினைவு



போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கிய பிரிகேடியர் பால்ராஜ்.
[ செவ்வாய்க்கிழமை, 20 மே 2014, 08:36.26 AM GMT ]

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

தமிழீழத்தின் இதய பூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர்
பால்ராஜ், 1983ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து
கொண்டார்.

வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார். இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.

இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

1990 ஆம் ஆண்டில் கொக்காவில் மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின்
நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல்
நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன. முல்லைத்தீவை விரிவாக்கும்
சிறிலங்காப் படையினரின் கடற்காற்று எதிர் நடவடிக்கையையும்
தலைமையேற்று வழிநடத்தினார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப்
படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.

வவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட வன்னிவிக்கிரம
நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி
எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின்
தாக்குதல்களை வழிநடத்தினார்.

1991 ம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான ஆகாய- கடல்வெளிச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.

மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட மின்னல் நடவடிக்கை
முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார். இதன் பின்னர் தமிழீழ
விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட யாழ்தேவி நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.

1995 ம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட
முன்னேறிப் பாய்தல் முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.




யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த சூரியக்கதிர்
நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.

வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த ஜெயசிக்குறு நடவடிக்கை
எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர்
கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட ஓயாத
அலைகள்- 02″ நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத்
தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.

தொடர்ந்து ஓயாத அலைகள் -03″ நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும்
தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான
குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று
தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள்
நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.

அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக்
கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும்,
ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.

2001 ம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.

போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார். பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார்.

போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக
எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத் தமிழினம் துயருற்று இருக்கின்றது.

- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFRULZnw3.html#sthash.FVhN9tSy.dpuf






Thursday, May 15, 2014

பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல்

543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று நரேந்திர மோடி அடுத்த பிரதமராக பதவியேற்பார் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல்



பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 289 இடங்கள் கிடைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 12-ம் தேதி வரை ஒன்பது கட்டங் களாக நடத்தப்பட்டுள்ளது. இறுதி கட்ட வாக்குப் பதிவு திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட் டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

என்.டி.டி.வி.

என்.டி.டி.வி. நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 283, காங்கிரஸ் 99, இதர கட்சிகள் 161 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ்

நியூஸ் எக்ஸ்- சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 289 இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 101 இடங்களும் இதர கட்சிகளுக்கு 148 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ருடே

இந்தியா டுடே குழுமம்- சியோரோ போஸ்ட் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 261- 283 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 110-120 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக 20-24, திமுக 10-14, பாஜக கூட்டணி 2-4, இதர கட்சிகள் 1-3 இடங்களில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜீ நியூஸ்

ஜீ குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 299, காங்கிரஸ் கூட்டணி 112, இதர கட்சிகளுக்கு 132 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ்

டைம்ஸ் நவ் சேனல் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக கூட்டணி 249, காங்கிரஸ் 148, இதர கட்சிகள் 146 இடங்களில் வெற்றிபெறும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக- 31, திமுக- 7, காங்கிரஸ் -1 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.பி.பி.- ஏ.சி. நீல்சன்

ஏ.பி.பி. - ஏ.சி.நீல்சன் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 272-க்கும் அதிகமான இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 110 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

சி.என்.என்.-ஐ.பி.என்

சி.என்.என்.-ஐ.பி.என்.- சி.எஸ்.டி.எஸ்.-லோக்நிட்டி சார்பில் மாநிலவாரியாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் டெல்லி, ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று கூறப்படுள்ளது.

இந்தியா நியூஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 315 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 80 இடங்களும் பிற கட்சிகளுக்கு 148 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. தவிர, இந்தியா டிவியின் கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி - 317, காங். கூட்டணி - 104, மற்றவை - 122 இடங்களைப் பிடிக்கும் என்று கூறியுள்ளது.

தமிழகத்தில்..

தமிழகத்தில் அதிமுக 22- 28 இடங்களையும் திமுக 7-11 இடங்களையும் பாஜக கூட்டணி 4-6 இடங்களையும் கைப்பற்றும்.

கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு 12 முதல் 16 தொகுதிகளும் பாஜகவுக்கு 10-14 தொகுதிகளும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 1-3 தொகுதிகள் கிடைக்கும்.

கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு 11- 14 இடங்களும் இடதுசாரி கூட்டணிக்கு 6-9 இடங்களும் கிடைக்கக்கூடும்.

சீமாந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 11-15, பாஜக கூட்டணி 11-15, தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். 8-12, காங்கிரஸ் 3-5, பாஜக கூட்டணி 2-4 இடங்களில் வெற்றி பெறும்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் 20, இடதுசாரிகள்- 15, காங்கிரஸுக்கு 5 இடங்கள் கிடைக்கும். உத்தரப் பிரதேசத்தில் பாஜக 45-53, சமாஜ்வாதி 13- 17, பகுஜன் சமாஜ் 10-14, காங்கிரஸ் 3-5 தொகுதிகளைக் கைப்பற்றும்

543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று நரேந்திர மோடி அடுத்த பிரதமராக பதவியேற்பார் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பை புறக்கணித்த காங்கிரஸ்

பல்வேறு தொலைக்காட்சிகளில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது கூறுகையில், “வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்ற மரபையொட்டியே காங்கிரஸ் அதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் எந்தவொரு தொலைக்காட்சி யிலும் நடத்தப்படும் கருத்துக் கணிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்ப தில்லை என முடிவு செய்துள்ளது” என்றார்.
தகவல்: தமிழ் இந்து

"சயனைட்" நாவல் - ஒரு பார்வை

  "சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...