Thursday, 15 May 2014

பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல்

543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று நரேந்திர மோடி அடுத்த பிரதமராக பதவியேற்பார் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல்



பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 289 இடங்கள் கிடைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே 12-ம் தேதி வரை ஒன்பது கட்டங் களாக நடத்தப்பட்டுள்ளது. இறுதி கட்ட வாக்குப் பதிவு திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட் டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

என்.டி.டி.வி.

என்.டி.டி.வி. நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 283, காங்கிரஸ் 99, இதர கட்சிகள் 161 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ்

நியூஸ் எக்ஸ்- சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 289 இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 101 இடங்களும் இதர கட்சிகளுக்கு 148 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ருடே

இந்தியா டுடே குழுமம்- சியோரோ போஸ்ட் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 261- 283 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 110-120 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக 20-24, திமுக 10-14, பாஜக கூட்டணி 2-4, இதர கட்சிகள் 1-3 இடங்களில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜீ நியூஸ்

ஜீ குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 299, காங்கிரஸ் கூட்டணி 112, இதர கட்சிகளுக்கு 132 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ்

டைம்ஸ் நவ் சேனல் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக கூட்டணி 249, காங்கிரஸ் 148, இதர கட்சிகள் 146 இடங்களில் வெற்றிபெறும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக- 31, திமுக- 7, காங்கிரஸ் -1 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.பி.பி.- ஏ.சி. நீல்சன்

ஏ.பி.பி. - ஏ.சி.நீல்சன் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 272-க்கும் அதிகமான இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 110 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

சி.என்.என்.-ஐ.பி.என்

சி.என்.என்.-ஐ.பி.என்.- சி.எஸ்.டி.எஸ்.-லோக்நிட்டி சார்பில் மாநிலவாரியாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் டெல்லி, ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று கூறப்படுள்ளது.

இந்தியா நியூஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 315 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 80 இடங்களும் பிற கட்சிகளுக்கு 148 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. தவிர, இந்தியா டிவியின் கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி - 317, காங். கூட்டணி - 104, மற்றவை - 122 இடங்களைப் பிடிக்கும் என்று கூறியுள்ளது.

தமிழகத்தில்..

தமிழகத்தில் அதிமுக 22- 28 இடங்களையும் திமுக 7-11 இடங்களையும் பாஜக கூட்டணி 4-6 இடங்களையும் கைப்பற்றும்.

கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு 12 முதல் 16 தொகுதிகளும் பாஜகவுக்கு 10-14 தொகுதிகளும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 1-3 தொகுதிகள் கிடைக்கும்.

கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு 11- 14 இடங்களும் இடதுசாரி கூட்டணிக்கு 6-9 இடங்களும் கிடைக்கக்கூடும்.

சீமாந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 11-15, பாஜக கூட்டணி 11-15, தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். 8-12, காங்கிரஸ் 3-5, பாஜக கூட்டணி 2-4 இடங்களில் வெற்றி பெறும்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் 20, இடதுசாரிகள்- 15, காங்கிரஸுக்கு 5 இடங்கள் கிடைக்கும். உத்தரப் பிரதேசத்தில் பாஜக 45-53, சமாஜ்வாதி 13- 17, பகுஜன் சமாஜ் 10-14, காங்கிரஸ் 3-5 தொகுதிகளைக் கைப்பற்றும்

543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று நரேந்திர மோடி அடுத்த பிரதமராக பதவியேற்பார் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பை புறக்கணித்த காங்கிரஸ்

பல்வேறு தொலைக்காட்சிகளில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது கூறுகையில், “வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்ற மரபையொட்டியே காங்கிரஸ் அதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் எந்தவொரு தொலைக்காட்சி யிலும் நடத்தப்படும் கருத்துக் கணிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்ப தில்லை என முடிவு செய்துள்ளது” என்றார்.
தகவல்: தமிழ் இந்து

No comments:

Post a Comment