SHARE

Saturday, June 28, 2014

கடலில் தவித்த 150 இலங்கையர்கள் கிறிஸ்மஸ் தீவில்!

Sri Lankan refugees from India in trouble at sea

Posted on June 28, 2014 — No Comments ↓

A boat with 153 refugees from Sri Lanka on board is in trouble 250 km from Christmas Island, Indian media reported.

Passengers have spoken to reporters in Australia, saying the boat left from India two weeks ago and contains 32 women and 37 children and they are mostly Tamils from Sri Lanka.

“We are refugees. We come from Sri Lanka, we stayed in India and we are unable to live there. That’s why we are coming to Australia,” a man calling himself Duke told the Australian Broadcasting Corporation.

The man said the vessel was leaking and struggling in high seas and strong winds, and requested assistance.
The Australian government has vowed to stop boats carrying asylum seekers from reaching its territory, which includes Christmas Island in the Indian Ocean.

Several boats have been towed back to Indonesia in the past six months, but it was not clear whether this boat could be towed to Indonesia because it did not originate there.

Immigration Minister Scott Morrison refused to comment on the latest boat but said there was nothing to indicate an extreme risk of life at sea.

Prime Minister Tony Abbott told reporters on Saturday that the government would act in accordance with its existing policy.

People who arrive by boat without visas are taken to detention centres on Nauru and Papua New Guinea’s Manus Island. No boat carrying refugees has reached Australia since December 19, 2013.
The Sunday Times LK
==============
கடலில் தவித்த 150 இலங்கையர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு?
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 ஜூன், 2014 - 17:34 ஜிஎம்டி B.B.C Tamil

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் இரண்டு நாட்களாக தத்தளித்துவந்த படகில் இருந்த இலங்கைத் தமிழர்கள் கிறிஸ்மஸ் தீவை அடைந்துவிட்டதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் வந்துள்ள போதிலும், அதிகாரிகளிடமிருந்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில், படகில் இருந்தவர்களின் நிலை குறித்து ஆஸ்திரேலிய அகதிகளுக்கான செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அகதிகள் மீட்கப்பட்டதை அரசாங்க அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தாத நிலையிலும், கடலில் குறிப்பிடத்தக்க அசம்பாவித சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கிறிஸ்மஸ் தீவிலிருந்து பலநூறு கிலோமீட்டர்கள் தொலைவில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்தப் படகில் 150க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் இருந்ததாக அகதிகளுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றின் (Refugee Action Coalition ) இணைப்பதிகாரியான இயன் ரிண்டுல் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

'கடந்த 2 நாட்களாக நாங்கள் அந்தப் படகில் இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தோம். ஆனால் கடந்த 9 மணிநேரமாக அவர்களுடன் நாங்கள் பேசவில்லை. அவர்களின் நிலைமை தொடர்பில் எங்களுக்கு கவலைகள் இருக்கின்றன' என்று உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் இயன் ரிண்டுல் கூறினார்.

 ஆஸ்திரேலியாவில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்திருக்கின்ற முதலாவது படகு இது என்றும் அவர் கூறினார்.
இந்தோனேசியாவைக் கடந்து படகுகள் மூலம் தஞ்சம்கோரி வருபவர்களை இந்தோனேசியாவுக்கே ஆஸ்திரேலிய அரசாங்கம் திருப்பி அனுப்பி வருகின்றது.

ஆனால், இந்தியாவிலிருந்து புறப்பட்டிருக்கின்ற இந்தப் படகில் இருந்தவர்களை மனுஸ் தீவு அல்லது நவ்றூ தீவு முகாம்களுக்கு அதிகாரிகள் அனுப்பக்கூடும் என்று இயன் ரிண்டுல் நம்புகின்றார்.

இந்தப் படகில் 37 சிறார்களும் அதே அளவான பெண்களும் இருந்துள்ளனர்.
படகு மூலம் வருபவர்களை திருப்பி அனுப்பும் ஆஸ்திரேலியாவின் கொள்கையை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் விமர்சிக்கின்றன.

இலங்கையில் யுத்தம் முடிந்து 5 ஆண்டுகளாகின்ற போதிலும் அங்கு நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் இருந்து தப்பி பாதுகாப்புத் தேடுவோரே பெரும்பாலும் தமது உயிரைத் துச்சமாக மதித்து படகுப் பயணங்களில் ஆஸ்திரேலியா வருவதாக ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸை சேர்ந்த பாலா விக்னேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.


ஐ.நா விசாரணைக் குழுவில் சாட்சியமளிப்போருக்கு எதிராக பாயவுள்ள பயங்கரவாத தடைச் சட்டம்

ஐ.நா விசாரணைக் குழுவில் சாட்சியமளிப்போருக்கு எதிராக பாயவுள்ள 
பயங்கரவாத தடைச் சட்டம்

[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 11:57.35 AM GMT ]

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற
விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் இலங்கையர்களுக்கு எதிராக
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அரச இரகசிய காப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இலங்கை படையினருக்கு எதிராகவும் சாட்சியமளிக்க பல்வேறு தரப்பினர் தயாராகி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருப்பதாக நாளை வெளியாகும் ஞாயிறு திவயின பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்சியாளர்கள் விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்க செல்வதற்கான
விமானப் பயணச்சீட்டுக்கள், தங்குமிட வசதிகள் மற்றும் விசேட கொடுப்பனவுகளை வழங்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் விசாரணைக் குழுவினர் ஜெனிவா உட்பட உலகின் 8 நகரங்களில் சாட்சியங்களை பதிவு செய்ய தீர்மானித்துள்ளனர்.

இதனிடையே விசாரணைக் குழுவின் முன் பொய்ச்சாட்சி வழங்கி அரசியல்
புகலிடம் பெற சில தரப்பினர் முயற்சித்து வருவதாகவும் இவ்வாறு நாட்டை
காட்டிக் கொடுக்க நபர்களின் சொத்துக்களை கூட அரசுடமையாக்க முடியும்
எனவும் திவயின குறிப்பிட்டுள்ளது.

இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 31 பேர் விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

தகவல்:தமிழ் ஊடகங்கள்

சர்வதேச விசாரணை கோரும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பு வாபஸ்!

சிவாஜிலிங்கத்தின் பாதுகாப்பும் வாபஸ்
வியாழக்கிழமை, 26 ஜூன் 2014 18:35
-எம்.றொசாந்த்

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு வழங்கப்பட்ட
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு புதன்கிழமை (25)
நள்ளிரவுடன் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் வியாழக்கிழமை (26) தெரிவித்தார்.

இது தொடர்பாக சிவாஜிலிங்கம் மேலும் தெரிவிக்கையில்,

'பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு எனக்கு 2001 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நான் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத காலப்பகுதியிலும் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புத் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கொழும்பிலிருந்த வந்த அறிவுறுத்தலுக்கமைய அந்தப்
பாதுகாப்பு புதன்கிழமை (25) நள்ளிரவு முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளது' என அவர்; மேலும் தெரிவித்தார்.

ஏற்கனவே வடமாகாண சபை உறுப்பினர்களாக அனந்தி சசிதரன், பாலச்சந்திரன் கஜதீபன் மற்றும் சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோரின் பொலிஸ் பாதுகாப்பினை யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ் விலக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இனவாத அமைப்புக்களுக்குத் தடை, பெளத்த பல படையணிக்கு `` விடுதலை``!


தமிழ், முஸ்லிம் இனவாத அமைப்புக்களுக்கே தடை! - அரசாங்கம் 

 இலங்கையில்  இனவாத அமைப்புகள் என்ற பெயரில் செயற்பட்டுவரும் தமிழ், முஸ்லிம் அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சிறுபான்மையினருக்கெதிரான இனவாத தாக்குதல்களை மேற்கொண்டு வரும் பெளத்த பல படையணியை ( பொதுபல சேனாவை) த் தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.

மேலும் பெளத்த பல படையணியை,  அரசாங்கமே பின்னின்று இயக்கி வருவதும் அம்பலமாகி வருகின்றது.

இந்த நிலையில் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில்
இலங்கையில் இனவாத, தீவிரவாத செயற்பாடுகளை முன்னெடுப்பதாகத்
தெரிவித்து ஒன்பது முஸ்லிம் அமைப்புகள், நான்கு தமிழ் அமைப்புகள் மற்றும்  கந்துடைப்பிற்கு ஒரு சிங்கள அமைப்பைத் தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும் இதில் பெளத்த பல படையணி அடங்கவில்லை.

இது தொடர்பான அறிவித்தல் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் வெளியாக வுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

Friday, June 27, 2014

அனந்தி, சிவாஜிலிங்கம் ஆகியோரின் ஐ.நா.விசாரணைத் தீர்மானம் வடக்கு மாகாணசபையில் நிராகரிப்பு!

Ananthi and Sivajilingam wants UN investigators in Sri Lanka - TNA say NO!
FRIDAY, 27 JUNE 2014 11:16

The Chairman of the Northern Provincial Council, CVK Sivagnanam removed provincial councilor MK Sivajilingam's proposal calling for United Nations investigators to enter Sri Lanka, from the provincial councils agenda yesterday (June 26).
Sivajilingam wanted the council to pass a resolution demanding the 
Sri Lankan government to allow the investigators in. Such a proposal would have led to a direct confrontation with the central government who has refused to cooperate with the UN investigators looking into alleged war crimes in Sri Lanka.

Sivajilingam sat on the floor protesting Sivagnanam's decision to dismiss the above proposal and three other proposals of his. Sivajilingam later told media that he wanted the UN investigators looking into alleged war crimes in Sri Lanka to visit the country. In his proposals he has also called for the Tamil Nadu regional assembly to appoint a committee to investigate war crimes in Sri Lanka. "I sat on the floor as the Charmian of the council removed my proposals from the agenda", he said.

He added that the parliament of Sri Lanka, dominated by Sinhalese politicians, have passed a resolution against the UN investigations and it was the duty of Tamil politicians to pass resolutions calling for investigators to arrive in Sri Lanka. The Northern Provincial Council is dominated by Tamil National Alliance (TNA), a party Sivagnanam also belongs to. 
However the council in general has attempted to avoid unnecessary confrontation with the centre and to restrict divisive actions of Sivajilingam and Ananthi Sasitharan. 

Thursday, June 26, 2014

பாணந்துறையில் முஸ்லிம் வர்த்தகரின் ஆடைக்காட்சியறை முற்றிலும் எரிந்து நாசமாகியது




பாணந்துறையில் முஸ்லிம் வர்த்தகரின் ஆடைக்காட்சியறை முற்றிலும் எரிந்து நாசமாகியது – பெளவுத்த பல படை அணியின் மற்றொரு பாசிசத் தாக்குதல்!

[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 05:30 GMT ]

பாணந்துறையில்  முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஆடை வர்த்தக நிறுவனம் ஒன்று இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை மருத்துவமனைக்கு அண்மையாக உள்ள நோலிமிட் ஆடைக் காட்சியறையே தீக்கிரையாக்கப்பட்டது.

பெற்றோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

எனினும், இது மின்கசிவினால் ஏற்பட்டிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறை கருத்து வெளியிட்டுள்ளது,

இன்று அதிகாலை 3 மணியளவில் பற்றிய தீயை அணைக்க, 5 தீயணைப்பு வண்டிகள் முயற்சிகளை மேற்கொண்ட போதும், ஆடைக்காட்சியறை முற்றிலும் எரிந்து நாசமாகியது.

இது முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்பதும், அண்மைக்காலத்தில் நோமிலிட் காட்சியறைகளைக் குறிவைத்து பௌத்த அடிப்படைவாத பெளவுத்த பல படையணி , இராவண பலய போன்ற அமைப்புகள் தாக்குதல்களை நடத்தியிருந்தன.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வரும் நிலையில், பாணந்துறையில் ஆடை காட்சியறை தீக்கிரையாக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

தேசிய ஒற்றுமைக்காக இந்த நாட்டு மக்கள் ஒன்று படவேண்டும் : ஜே.வி.பி

சொல்லில் சோசலிசமும் செயலில் சிங்களப் பேரின பெளத்த வெறியுமான ஜே.வி.பி.சமூக பேரின வெறியர்களின் `ஒற்றுமைக் கோரிக்கை` சிங்களத்தைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் கோரிக்கையே ஆகும்.

===========================  புதிய ஈழப்புரட்சியாளர்கள்

தேசிய ஒற்றுமைக்காக இந்த நாட்டு மக்கள் ஒன்று படவேண்டும் : ஜே.வி.பி  ரில்வின் சில்வா

Submitted by Priyatharshan on Thu, 06/26/2014 - 20:45

அளுத்கம, தர்காநகர் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசாங்கமே உள்ளது. சிங்களவர்,தமிழர், முஸ்லிம்கள் என்ற வேறுபாட்டுக்கு அப்பால் தேசிய ஒற்றுமைக்காக இந்த நாட்டு மக்கள் ஒன்று படவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமுனை பிரதேசத்தில் புதன்கிழமை திறந்து வைத்த பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.ஜே.எம்.றஊப் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, இந்த நாட்டில் இனவாதத்தை உருவாக்கி இனங்களை மோத விடுகின்ற வேலையை ராஜபக்ஷவின் குடும்பம் மேற்கொண்டு வருகின்றது.

அளுத்கம தர்காநகர் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு முழுப்பொறுப்பையும் அரசாங்கமே எடுக்க வேண்டும்.

இனங்களை மோதவிட்டு அதனூடாக அரசியல் நடத்தும் வேலைகளையே இந்த அரசாங்கம் செய்து வருகின்றது. ஊழல், மோசடி, வன்முறை இவ்வாறுள்ள இந்த அரசாங்கத்திற்குத்தான் இன்று அமைச்சர்களான ஹக்கீம், றிசாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, கருணா அம்மான், ஹிஸ்புல்லாஹ், தொண்டமான் போன்றரோர் ஆதரவளிக்கின்றனர்.

இன்று மக்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் பக்கம் மக்கள் நாளர்ந்தம் வந்து கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகாணத்திலும் மக்கள் விடுதலை முன்னணி எதிர் காலத்தில் மாபெரும் எழுச்சி காணும்.

இனவாத மத வாத அடிப்படைவாதிகளால் இழைக்கப்படும் துரோகத்தை வளர்க்கும் பொறியில் சிக்கி விடக் கூடாது.
 பொறுமையாகவும் அமைதியாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற வேறுபாட்டுக்கு அப்பால் தேசிய ஒற்றுமைக்காக ஒன்றுபட வேண்டும்
 என அவர் மேலும் தெரிவித்தார்.

களுத்துறை வெறியாட்டம் `சிறு சம்பவம்` ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச!

நால்வர் பலி!
600 கோடி ரூபாய் உத்தேச சொத்திழப்பு!
களுத்துறை மேல் மாகாணத்தில் இஸ்லாமியத்தமிழர்களின் இருப்புக்கு அச்சுறுத்தல்!
நாடு தழுவி பரந்துவாழும் இஸ்லாமியத் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள்,வாழ்விடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தொடர் தாக்குதல்கள்!
மாட்சிமை தங்கிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவுக்கு இவையெல்லாம் 
`சிறு சம்பவம்`!

வடக்­கி­லி­ருந்து விடு­தலைப் புலி­கள் விரட்­டி­ய­டித்த போது காத்­தான்­குடி
பள்­ளி­வா­சலில் முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்ட போது கடை­ய­டைப்பு ஹர்த்தால் செய்­வ­தற்கு எவரும் இருக்­க­வில்லை. இன்று ஹர்த்தால் செய்­த­வர்கள் அன்று எங்­கி­ருந்­தார்கள் எனத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ.

இன்று சிறு சிறு சம்­ப­வங்­களை அடிப்­ப­டை­யாக வைத்துக் கொண்டு ஹர்த்தால் செய்­கின்­றனர். இன­வா­தத்தை தூண்­டு­கின்­றனர். இதனை இரு தரப்­பி­னரும் நிறுத்திக் கொள்ள வேண்­டு­மென்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அம்­பாந்­தோட்டை மாகாம்­புர மஹிந்த ராஜபக்ஷ துறை­மு­கத்தில் 76 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செலவில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட எரி­பொருள் தாங்­கி­களை ஆரம்­பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி இங்கு தொடர்ந்து உரை­யாற்றும் போது,

அன்று வடக்­கி­லி­ருந்து 19000 முஸ்லிம் மக்­களை உடுத்த உடுப்­போடு இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் கையில் கிடைத்­ததை எடுத்துக் கொண்டு வீடு­க­ளி­லி­ருந்தும் கிரா­மங்­க­ளி­லி­ருந்தும் விடு­த­லைப்­பு­லி­களே விரட்­டி­ய­டித்­தனர்.

அப்­போதே ஹர்த்தால் கடை­ய­டைப்பு எங்கே? இன்று ஹர்த்தால் மேற்­கொள்வோர் அன்று எங்­கி­ருந்­தார்கள்?எவரும் எதையும் செய்­ய­வில்லை.காத்­தான்­குடி பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் நடத்தி விடு­தலை புலிகள் முஸ்­லிம்­களை கொலை செய்­தனர்.யார் ஹர்த்தால் செய்­தார்கள்?ஆனால், இன்று சிறு சம்­ப­வத்­திற்­காக ஹர்த்தால் செய்­கின்­றனர்.இன­வா­தத்தை தூண்­டு­கின்­றனர். இதனை இரண்டு தரப்­பி­னரும் கைவிட வேண்டும்.

நாட்டின் சமா­தா­னத்தை அமை­தியை பாது­காக்க அர­சாங்கம் மட்­டு­மல்ல மக்­களும் பங்­க­ளிப்பு வழங்க வேண்டும்.அன்று சிங்­கள முஸ்லிம் தமிழ் மக்கள் விடு­தலைப் புலி­களால் கொலை செய்­யப்­பட்­டார்கள்.

அப்­போ­தெல்லாம் ஹர்த்தால் எங்­கி­ருந்­தன ?நாட்டில் ஆங்­காங்கே சிறு சிறு சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இது தொடர்பில் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு ஆலோ­ச­னைகள் உத்­த­ர­வுகள் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இன்று அளுத்­க­ம­விற்கு ஏன் இரா­ணு­வத்­தி­னரை அனுப்­ப­வில்லை என கேள்வி எழுப்­பு­கின்­றனர்.ரத்­துபஸ் வலைக்கு இரா­ணு­வத்தை அனுப்பி வைத்தோம். இன்று அது தொடர்பில் ஐ.நா. எம்­மிடம் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­றது.

இந்­நாட்டில் இன­வா­தத்­திற்கு தூப­மி­டு­வதை இரண்டு தரப்­பி­னரும் கைவிட வேண்டும்.சம்­பவம் இன்று முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. ஆனால் வதந்­திகள் பரப்­பப்­ப­டு­வதை இன்று நிறுத்த வேண்­டி­யுள்­ளது.

எமது நாட்டின் அபி­வி­ருத்­திக்கு சீனா மட்­டு­மல்ல இந்­தியா, கொரியா, ஜப்பான், பிரிட்டன் போன்ற பல நாடுகள் உத­வி­களை வழங்­கு­கின்­றது.ஆனால், சில அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் இவ் அபி­வி­ருத்­தி­களை தடுக்கும் கைங்­க­ரி­யங்­களில் ஈடு­ப­டு­கி­றது.இதனால் நாடும் மக்­க­ளுமே பாதிப்­ப­டை­வார்கள்.

எதிர்க்­கட்சி…

நாட்டில் எதிர்க்­கட்­சி­யொன்று இருக்க வேண்டும். ஆனால் அபி­வி­ருத்­தி­களை எல்லாம் தடுத்து நிறுத்தும் முட்­டுக்­கட்டை போடும் எதிர்க்­கட்­சி­யாக இருக்கக் கூடாது. அபி­வி­ருத்­திக்கும் நாட்டின் முன்­னேற்­றத்­திற்கும் ஒத்­து­ழைப்பு வழங்கும் எதிர்க்­கட்­சி­யாக இருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறானதொரு கொள்கை எமது நாட்டு எதிர்க்கட்சியிடம் கிடையாது.நாட்டின் அபிவிருத்திகளை மக்களே அனுபவிப்பார்கள் எதிர்கால சந்ததியினரே பயன்படுத்துவார்களென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில் அமைச்சர்களான அநுர பிரியதர்ஸன யாபா, ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் உரையாற்றினர்.

களுத்துறை வெறியாட்டம் சொத்திழப்பு 600 கோடி ரூபாய்!


இழப்புகளைக் கணக்கிட ஆணைக்குழு
[ MY ARTICLE PUBLISHED IN SUDAR OLI ON 25-06-2014]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முழுமையாக நிவாரணம் வழங்கும், பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாகப் பழைய நிலைக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், இழந்த சொத்துகள் தொடர்பான பதிவுகள் முறையானவையாக முழுமையானவையாக இருக்கவேண்டும். இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு இவ்வாறானதொரு கொடுமை இழைக்கப்பட்டது என்பதற்கு அந்தப் பதிவுகளே சான்றுகளாக அமையும். ஆகவே, ஆவணப்படுத்தல் முக்கியம். இதை நாங்கள் சரியாகச் செய்யவேண்டும். [ M.I.MUBARAK ]

நடந்து முடிந்த கறுப்பு ஜூன் கலவரத்தால் அளுத்கம, பேருவளை மற்றும் தர்ஹா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முஸ்லிம்களின் 600 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட சொத்துகள் சேதமாக்கப்பட்டுள்ளன சூறையாடப்பட்டுள்ளன.

ஆரம்பக்கட்ட கணக்கெடுப்பின் மூலமே இந்தச் சேத விவரம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு நன்கு திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவசரம் காட்டாமல் அமைதியாகக் கணக்கெடுப்பை மேற்கொண்டால் சேதமடைந்த சொத்துகள் 600 கோடி ரூபாவைத் தாண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். இதுதான் உண்மை.

அப்படியாயின், உண்மையான சேத விவரங்களைக் கண்டறிவதென்றால் அந்த சேத விவரங்களை அரசும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்வதென்றால் அரசால் ஒரு நடுநிலையான ஆணைக் குழுவொன்று நியமிக்கப்படவேண்டும். அந்தக் குழுவில் மிதவாத சிந்தனையுள்ள சிங்களவர்களும் முஸ்லிம்களும் அடங்கவேண்டும். அப்போதுதான் உண்மையான சேதவிவரங்களைத் திரட்ட முடியும்.

ஆனால், இப்போது நடப்பது என்ன? பொலிஸார்தான் இந்த சேதவிவரங்களைக் கணக்கெடுக்கத் தொடங்கியுள்ளனர் பொலிஸார் மேற்கொள்ளும் கணக்கெடுப்பு நிச்சயமாக முழுமையானதாக இருக்காது அவர்கள் சேதத்தைக் குறைத்தே கணக்கெடுப்பர் அத்தோடு,இந்தக் கணக்கெடுப்பில் மறைமுகமாகவோ நேரடியாகவோ பேரினவாதிகளின் தலையீடு இருக்கப்போவது நிச்சயம்.

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் சேதங்களைக் குறைத்து மதிப்பிடுவதன் மூலம்தான் பேரினவாதிகள் நல்ல பிள்ளைகளாகுவர். அந்த மதிப்பீடு அரசுக்கும் சாதகமாகவே அமையும். சேதங்கள் எவ்வளவு குவாக மதிப்பீடு செய்யப்படுகிறதோ அவ்வளவு தூரம் அரசுக்கு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சாதகமான நிலை ஏற்படும்.

இந்தப் பேரழிவு ஏற்படுவதற்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பக்கச்சார்பான செயற்பாடுகளே காரணம் என்று பாதிக்கப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமும் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் நடத்திய பேரினவாதிகளைக் கட்டுப்படுத்தாது அவர்களுக்கு இந்தப் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் ப+ரண பாதுகாப்பு வழங்கினர் என்று பாதிக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த முஸ்லிம்கள் கூறுகின்றனர். அதுபோக, உயிரிழந்த இரண்டு முஸ்லிம் சகோதரர்களும் விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில்தான் உயிரிழந்தனர் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதுபோக, கலவரம் தொடங்கி மறுநாள் உயிரிழந்த சகோதரர்களின் ஜனாஸாக்களை களுத்துறையிலிருந்து தர்ஹா நகருக்கு எடுத்துச்சென்ற சகோதரர்கள் மீதும் பேரினவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நிலையில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் முன்னிலையில்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், அத்தாக்குதலைத் தடுக்காது அவர்கள் பார்த்துக்கொண்டு நின்றனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரபெரும முஸ்லிம்களைக் காப்பாற்றி அழைத்து வந்துகொண்டிருந்த போது அவர் மீதும், அவர் அழைத்துவந்த முஸ்லிம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலும் பொலிஸாரும் அதிரடிப் படையினரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் இடம்பெற்றது என்று அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டாரும் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் பேரினவாதிகள், அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் சகிதம் வந்தே தமது வீடுகளையும், கடைகளையும் எரித்தனர் என்பவையாகும். இந்தப் பேரினவாதிகளும் பொலிஸாரும் தங்கள் வீட்டுக்கு வந்து தேநீர் தயாரித்துப் பருகி அங்குள்ள உணவுப்பொருட்களையெல்லாம் உண்டு, குடித்துவிட்டே வீடுகளுக்குத் தீ வைத்தனர் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
பேரினவாதிகள் வாகனங் களைக் கொண்டுவந்து ஆறுதலாக இருந்து தங்களது சாமான்களை ஏற்றிச்செல்லும் வரை பொலிஸார் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்தனர் என்று அந்த மக்களின் வாக்குமூலங்க ளிலிருந்து அறிய முடிகின்றது.

இதுபோக, பொலிஸில் முறைப்பாடுகளைச் செய்வதற்கு முஸ்லிம்கள் செல்கின்றபோது பொதுபலசேனாவுக்கு எதிராக முறைப்பாடுகளைத் தரவேண்டாம் என்று பொலிஸார் தம்மிடம் கூறுவதாகவும் முஸ்லிம்கள் கூறுகின்றனர்.

ஆகவே, இவ்வாறு அனைத்து நிகழ்வுகளையும் வைத்துப் பார்க்கும்போது பொலிஸார் முஸ்லிம்களுக்கு எதிராகவே செயற்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது. அவ்வாறானதொரு நிலையில், எவ்வாறு அவர்கள் மேற்கொள்ளும் சேத விவரக் கணக்கெடுப்பு நியாயமானதாக இருக்கப்போகின்றது? இவர்கள் நிச்சயம் குறைத்தே மதிப்பீடு செய்வர்.
அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணத்தை வழங்க இதயசுத்தியுடன் செயற்படுவது உண்மையென்றால் சிங்கள மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளைக் கொண்ட ஓர் ஆணைக்குழுவை நியமித்து அதனூடாகவே கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் இன்று வேண்டுவது இழக்கப்பட்ட சொத்துகளில் கொஞ்சமேனும் குறையாமல் அப்படியே வேண்டும் என்பதுதான். அவர்களின் கோரிக்கை நியாயமானது. அப்படியாயின், அவர்களின் சொத்துக்களின் கணக்கெடுப்பு சரியாக மேற்கொள்ளப்படவேண்டும். இந்தக் கோரிக்கையையேனும் அரசு தட்டிக்கழிக்காமல் நிவேற்ற முன்வரவேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முழுமையாக நிவாரணம் வழங்கும், பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாகப் பழைய நிலைக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், இழந்த சொத்துகள் தொடர்பான பதிவுகள் முறையானவையாக முழுமையானவையாக இருக்கவேண்டும். இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு இவ்வாறானதொரு கொடுமை இழைக்கப்பட்டது என்பதற்கு அந்தப் பதிவுகளே சான்றுகளாக அமையும். ஆகவே, ஆவணப்படுத்தல் முக்கியம். இதை நாங்கள் சரியாகச் செய்யவேண்டும்.
[ M.I.MUBARAK ]

சொல்லாத சோகம்

சொல்லாத சோகம்

"சயனைட்" நாவல் - ஒரு பார்வை

  "சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...