SHARE

Saturday, June 28, 2014

ஐ.நா விசாரணைக் குழுவில் சாட்சியமளிப்போருக்கு எதிராக பாயவுள்ள பயங்கரவாத தடைச் சட்டம்

ஐ.நா விசாரணைக் குழுவில் சாட்சியமளிப்போருக்கு எதிராக பாயவுள்ள 
பயங்கரவாத தடைச் சட்டம்

[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 11:57.35 AM GMT ]

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற
விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் இலங்கையர்களுக்கு எதிராக
பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அரச இரகசிய காப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இலங்கை படையினருக்கு எதிராகவும் சாட்சியமளிக்க பல்வேறு தரப்பினர் தயாராகி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருப்பதாக நாளை வெளியாகும் ஞாயிறு திவயின பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்சியாளர்கள் விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்க செல்வதற்கான
விமானப் பயணச்சீட்டுக்கள், தங்குமிட வசதிகள் மற்றும் விசேட கொடுப்பனவுகளை வழங்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் விசாரணைக் குழுவினர் ஜெனிவா உட்பட உலகின் 8 நகரங்களில் சாட்சியங்களை பதிவு செய்ய தீர்மானித்துள்ளனர்.

இதனிடையே விசாரணைக் குழுவின் முன் பொய்ச்சாட்சி வழங்கி அரசியல்
புகலிடம் பெற சில தரப்பினர் முயற்சித்து வருவதாகவும் இவ்வாறு நாட்டை
காட்டிக் கொடுக்க நபர்களின் சொத்துக்களை கூட அரசுடமையாக்க முடியும்
எனவும் திவயின குறிப்பிட்டுள்ளது.

இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 31 பேர் விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

தகவல்:தமிழ் ஊடகங்கள்

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...