Thursday, 26 June 2014

தேசிய ஒற்றுமைக்காக இந்த நாட்டு மக்கள் ஒன்று படவேண்டும் : ஜே.வி.பி

சொல்லில் சோசலிசமும் செயலில் சிங்களப் பேரின பெளத்த வெறியுமான ஜே.வி.பி.சமூக பேரின வெறியர்களின் `ஒற்றுமைக் கோரிக்கை` சிங்களத்தைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் கோரிக்கையே ஆகும்.

===========================  புதிய ஈழப்புரட்சியாளர்கள்

தேசிய ஒற்றுமைக்காக இந்த நாட்டு மக்கள் ஒன்று படவேண்டும் : ஜே.வி.பி  ரில்வின் சில்வா

Submitted by Priyatharshan on Thu, 06/26/2014 - 20:45

அளுத்கம, தர்காநகர் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரசாங்கமே உள்ளது. சிங்களவர்,தமிழர், முஸ்லிம்கள் என்ற வேறுபாட்டுக்கு அப்பால் தேசிய ஒற்றுமைக்காக இந்த நாட்டு மக்கள் ஒன்று படவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமுனை பிரதேசத்தில் புதன்கிழமை திறந்து வைத்த பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எம்.ஜே.எம்.றஊப் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, இந்த நாட்டில் இனவாதத்தை உருவாக்கி இனங்களை மோத விடுகின்ற வேலையை ராஜபக்ஷவின் குடும்பம் மேற்கொண்டு வருகின்றது.

அளுத்கம தர்காநகர் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு முழுப்பொறுப்பையும் அரசாங்கமே எடுக்க வேண்டும்.

இனங்களை மோதவிட்டு அதனூடாக அரசியல் நடத்தும் வேலைகளையே இந்த அரசாங்கம் செய்து வருகின்றது. ஊழல், மோசடி, வன்முறை இவ்வாறுள்ள இந்த அரசாங்கத்திற்குத்தான் இன்று அமைச்சர்களான ஹக்கீம், றிசாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, கருணா அம்மான், ஹிஸ்புல்லாஹ், தொண்டமான் போன்றரோர் ஆதரவளிக்கின்றனர்.

இன்று மக்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் பக்கம் மக்கள் நாளர்ந்தம் வந்து கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகாணத்திலும் மக்கள் விடுதலை முன்னணி எதிர் காலத்தில் மாபெரும் எழுச்சி காணும்.

இனவாத மத வாத அடிப்படைவாதிகளால் இழைக்கப்படும் துரோகத்தை வளர்க்கும் பொறியில் சிக்கி விடக் கூடாது.
 பொறுமையாகவும் அமைதியாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற வேறுபாட்டுக்கு அப்பால் தேசிய ஒற்றுமைக்காக ஒன்றுபட வேண்டும்
 என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment