Thursday 26 June 2014

களுத்துறை வெறியாட்டம் `சிறு சம்பவம்` ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச!

நால்வர் பலி!
600 கோடி ரூபாய் உத்தேச சொத்திழப்பு!
களுத்துறை மேல் மாகாணத்தில் இஸ்லாமியத்தமிழர்களின் இருப்புக்கு அச்சுறுத்தல்!
நாடு தழுவி பரந்துவாழும் இஸ்லாமியத் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள்,வாழ்விடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தொடர் தாக்குதல்கள்!
மாட்சிமை தங்கிய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவுக்கு இவையெல்லாம் 
`சிறு சம்பவம்`!

வடக்­கி­லி­ருந்து விடு­தலைப் புலி­கள் விரட்­டி­ய­டித்த போது காத்­தான்­குடி
பள்­ளி­வா­சலில் முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்ட போது கடை­ய­டைப்பு ஹர்த்தால் செய்­வ­தற்கு எவரும் இருக்­க­வில்லை. இன்று ஹர்த்தால் செய்­த­வர்கள் அன்று எங்­கி­ருந்­தார்கள் எனத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ.

இன்று சிறு சிறு சம்­ப­வங்­களை அடிப்­ப­டை­யாக வைத்துக் கொண்டு ஹர்த்தால் செய்­கின்­றனர். இன­வா­தத்தை தூண்­டு­கின்­றனர். இதனை இரு தரப்­பி­னரும் நிறுத்திக் கொள்ள வேண்­டு­மென்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அம்­பாந்­தோட்டை மாகாம்­புர மஹிந்த ராஜபக்ஷ துறை­மு­கத்தில் 76 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செலவில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட எரி­பொருள் தாங்­கி­களை ஆரம்­பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி இங்கு தொடர்ந்து உரை­யாற்றும் போது,

அன்று வடக்­கி­லி­ருந்து 19000 முஸ்லிம் மக்­களை உடுத்த உடுப்­போடு இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் கையில் கிடைத்­ததை எடுத்துக் கொண்டு வீடு­க­ளி­லி­ருந்தும் கிரா­மங்­க­ளி­லி­ருந்தும் விடு­த­லைப்­பு­லி­களே விரட்­டி­ய­டித்­தனர்.

அப்­போதே ஹர்த்தால் கடை­ய­டைப்பு எங்கே? இன்று ஹர்த்தால் மேற்­கொள்வோர் அன்று எங்­கி­ருந்­தார்கள்?எவரும் எதையும் செய்­ய­வில்லை.காத்­தான்­குடி பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் நடத்தி விடு­தலை புலிகள் முஸ்­லிம்­களை கொலை செய்­தனர்.யார் ஹர்த்தால் செய்­தார்கள்?ஆனால், இன்று சிறு சம்­ப­வத்­திற்­காக ஹர்த்தால் செய்­கின்­றனர்.இன­வா­தத்தை தூண்­டு­கின்­றனர். இதனை இரண்டு தரப்­பி­னரும் கைவிட வேண்டும்.

நாட்டின் சமா­தா­னத்தை அமை­தியை பாது­காக்க அர­சாங்கம் மட்­டு­மல்ல மக்­களும் பங்­க­ளிப்பு வழங்க வேண்டும்.அன்று சிங்­கள முஸ்லிம் தமிழ் மக்கள் விடு­தலைப் புலி­களால் கொலை செய்­யப்­பட்­டார்கள்.

அப்­போ­தெல்லாம் ஹர்த்தால் எங்­கி­ருந்­தன ?நாட்டில் ஆங்­காங்கே சிறு சிறு சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இது தொடர்பில் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு ஆலோ­ச­னைகள் உத்­த­ர­வுகள் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இன்று அளுத்­க­ம­விற்கு ஏன் இரா­ணு­வத்­தி­னரை அனுப்­ப­வில்லை என கேள்வி எழுப்­பு­கின்­றனர்.ரத்­துபஸ் வலைக்கு இரா­ணு­வத்தை அனுப்பி வைத்தோம். இன்று அது தொடர்பில் ஐ.நா. எம்­மிடம் கேள்­வி­யெ­ழுப்­பு­கின்­றது.

இந்­நாட்டில் இன­வா­தத்­திற்கு தூப­மி­டு­வதை இரண்டு தரப்­பி­னரும் கைவிட வேண்டும்.சம்­பவம் இன்று முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. ஆனால் வதந்­திகள் பரப்­பப்­ப­டு­வதை இன்று நிறுத்த வேண்­டி­யுள்­ளது.

எமது நாட்டின் அபி­வி­ருத்­திக்கு சீனா மட்­டு­மல்ல இந்­தியா, கொரியா, ஜப்பான், பிரிட்டன் போன்ற பல நாடுகள் உத­வி­களை வழங்­கு­கின்­றது.ஆனால், சில அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் இவ் அபி­வி­ருத்­தி­களை தடுக்கும் கைங்­க­ரி­யங்­களில் ஈடு­ப­டு­கி­றது.இதனால் நாடும் மக்­க­ளுமே பாதிப்­ப­டை­வார்கள்.

எதிர்க்­கட்சி…

நாட்டில் எதிர்க்­கட்­சி­யொன்று இருக்க வேண்டும். ஆனால் அபி­வி­ருத்­தி­களை எல்லாம் தடுத்து நிறுத்தும் முட்­டுக்­கட்டை போடும் எதிர்க்­கட்­சி­யாக இருக்கக் கூடாது. அபி­வி­ருத்­திக்கும் நாட்டின் முன்­னேற்­றத்­திற்கும் ஒத்­து­ழைப்பு வழங்கும் எதிர்க்­கட்­சி­யாக இருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறானதொரு கொள்கை எமது நாட்டு எதிர்க்கட்சியிடம் கிடையாது.நாட்டின் அபிவிருத்திகளை மக்களே அனுபவிப்பார்கள் எதிர்கால சந்ததியினரே பயன்படுத்துவார்களென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில் அமைச்சர்களான அநுர பிரியதர்ஸன யாபா, ரோஹித அபேகுணவர்தன ஆகியோரும் உரையாற்றினர்.

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...