SHARE

Sunday, January 12, 2025

இராஜதந்திர கடவுசீட்டு சிறீதரன் எம்.பி விமான நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை!

 

இராஜதந்திர கடவுசீட்டு சிறீதரன் எம்.பி விமான நிலையத்தில் தடுத்து வைப்பு!  

இந்தியப் பயணத்தின் நோக்கம் குறித்து விசாரணை!

சிறீதரன் எம்.பி விசாரணை தொடர்பில் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் கண்டனம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இந்தியாவில் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் பங்கு கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக இந்தியா செல்ல சென்றபோது அங்கே விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் பயணத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இராஜதந்திர கடவுசீட்டினை வைத்திருக்கும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவரை இவ்வாறு நடத்தியதை ஏற்று கொள்ள முடியாது.

சிவஞானம் சிறீதரன் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக இருப்பதுடன் அவர் இலங்கை பாராளுமன்றில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்குகின்றார்.

இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் தொடர்பாக அநுர அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து உரையாற்றியும் இருந்தார்.

இந்த நிலையிலேயே இவர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே இச்சம்பவம் ஒரு பழிவாங்கும் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எமக்கு தோன்றுகிறது.

எனவே இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அநுர அரசாங்கத்திற்கு உண்டு என அவர் குறிப்பிட்டார்.⍐

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...