ENB Poster-Anura's State visit to India |
The Indian government described Sri Lanka as the country’s closest maritime neighbour in the Indian Ocean Region (IOR) and said it holds a central place in Prime Minister Modi’s vision of ‘SAGAR’ (Security and Growth for All in the Region) and India’s ‘Neighbourhood First’ policy
அண்டை அயல் நாடுகளுடனான தனது வெளி விவகாரக் கொள்கையை இவ்வாறு தான் இந்திய அரசு விளக்கம் செய்கின்றது. இந்த தங்கமுலாம் எல்லாவற்றையும் அடியோடு அகற்றி விட்டால் அதன் உண்மை முகம் தெரியும்.
இந்தியாவின் பாதுகாப்பே இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பு!
இந்தியாவின் வளர்ச்சியே இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் வளர்ச்சி!!
என்றே இந்தியா அதை ஆங்கிலேயன் உருவாக்கிய காலம் முதல் கூறி வருகின்றது.
அண்மைய கால் நூற்றாண்டில் குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் Make In India உலகமய பொருளாதாரப் பாதையில் இந்தியா கணிசமான வளர்ச்சி கண்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய உலக ஒழுங்கமைப்பு தகர்ந்து ஒரு மாற்று அமைப்பை நோக்கி நகரும் சர்வதேச அரசியல் போக்கில் இந்தியா தன்னை ஒரு சர்வதேச சமூக சக்தியாக கட்டியமைக்கும் பாதையில் நகர்ந்துவருகின்றது.
அதாவது இந்திய பிராந்திய விரிவாதிக்கம் சர்வதேச உலகமேலாதிக்கத்துடன் அணிசேருகின்றது.
இந்தச் சூழலில்;
இந்தியாவின் பாதுகாப்பே இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பு!
இந்தியாவின் வளர்ச்சியே இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் வளர்ச்சி!!
என்பது இந்தியா அணிசேரும் சர்வதேச ஏகாதிபத்திய முகாமின் குடையின் கீழ் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளை அடக்குவது தவிர வேறெதுவுமில்லை.
இலங்கை ஒரு சிறிய நாடு.இந்தியா தனக்கு விரும்பியபடியெல்லாம் `அந்தக் களி மண்ணில் உருவம் செய்து வருகின்றது.இதன் ஒரு பகுதி தான் இலங்கையின் புதிய ஜனாதிபதி அரசும், 70 % நாடாளமன்ற பெரும்பான்மை கொண்ட அரசாங்கமும்!
துல்லியமாக ஆராய்ந்தால் நாடளாவிய வகையில் இது 50 வீத வாக்காளர்களின் வாக்குகளையும், ஈழத்தில் 25% வாக்காளர்களின் வாக்குகளையும் கொண்டு அமையப் பெற்ற அதிகாரக் கைமாற்றமே ஆகும்.இதனால் எல்லாவற்றுக்கும் மேலாக தனது சுய பாதுகாப்புக்கு இந்தியாவுடனான நேச உறவு அவசியமாகும்.
இவ்வாறு இந்தியா சார்ந்த ஒரு ஏகாதிபத்திய-அமெரிக்க முகாமுடன் அணி சேர்ந்து கொண்டு, அனுரா அரசு அணி சேராக் கொள்கை என்று பிதற்றுகின்றது.
அணி சேராக் கொள்கை
1917 ஒக்ரோபர் சோசலிசப் புரட்சியைத் தொடர்ந்து உலகம் சித்தாந்த ரீதியாக பிளவுபட்ட இரு துருவ உலகங்களாக பிளவுண்டன.சோசலிச சோவியத் முகாமும், ஏகாதிபத்திய அமெரிக்க முகாமுமாக இவை அமைந்தன. சோசலிச முகாமின் வளர்ச்சி மற்றும் தாக்கம் காரணமாக தமது காலனியாதிக்கத்தை தொடர இயலாத நெருக்கடிக்கு காலனியாதிக்கவாதிகள் உள்ளாகினர்.
இதன் விளைவாக குறிப்பாக `சூரியன் அஸ்தமிக்காத` பெரும் காலனியாதிக்க வாதிகளான ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகள் தமது காலனிய ஆதிக்கத்தில் தளர்வை ஏற்படுத்தத் தள்ளப்பட்டனர்.
காலனி ஆதிக்கத்தத்தை தொடரவும் அதேவேளை அது அகன்று விட்டது போலக் காட்டவும் ஆன வடிவமாக `சுதந்திரம்` என்பதைக் கண்டு பிடித்தனர். இந்த ஏற்பாட்டில் அதிகாரம் பகுதியாக, உள்ளூரில் தத்தெடுத்து தாம் பாலூட்டி வளர்த்த தரகர்களின் நம்பிக்கையான கைகளுக்கு மாற்றப்பட்டன.
40 களின் பிற்பகுதியில் இருந்து 70பது 80பதுகள் வரை இந்தக் கைமாற்றம் உலகக் காலனிகள் எங்கிலும் நடந்தேறின.
புதிதாக அதிகாரத்தை பெற்றுக் கொண்ட உள்ளூர் தரகு வர்க்கங்களுக்கு தாம் `சுதந்திரமானவர்கள்` என்று காட்டவேண்டிய தேவை இயல்பாகவே எழுந்தது. அதே வேளை அன்றைய சூழலைச் சார்ந்து `சோசலிசம்`,ஜனநாயகம்` குடியரசு` என்று பேசவேண்டிய தேவையும் இருந்தது.
கொம்ஜூனிச அகிலத்தின் வழிகாட்டுதலுக்கு மாறாக இக் காலனியத் தரகர்களால் முன்னெடுக்கப்பட்ட கிளர்சிகளும் அவை கடைப்பிடித்த கொள்கை கோட்பாடுகளும் அந்நாடுகளின் இலட்சோபம் அடிமை மக்களுக்கு சுதந்திரத்தையோ விடுதலையையோ வழங்கவில்லை.
இந்தக் கைமாற்ற அரை நூற்றாண்டு காலத்தில் தான் இந் நாடுகளில் அந்தந்த நாடுகளின் வரலாற்று ரீதியான வளர்ச்சி மட்டத்துக்கு இயைந்த `நாடாளமன்ற` ஆட்சிவடிவமும் தேர்தல் முறையும் கொண்டுவரப்பட்டன.
மத்திய ஆசியாவில் `பாத் இயக்கம்`, ஆபிரிக்காவில் கிறீஸ்தவ தேசியம், லத்தீன் அமெரிக்காவில் `விடுதலை இறையியல்`, ஆசியாவில் `காந்தியம்` எல்லாம் இந்த இனக் குழுமங்கள் தான்.
இதை எழுதிக் கொண்டிருக்கும்போது ஆட்சிக் கவிழ்ப்புக்கு உள்ளாகி அல்கைடா அரசாங்கம் அமைக்கும் சிரியாவும், 1946-1961 சுதந்திரக் கட்டங்களுக்கூடாக இறுதியில் 1970இல் அசாத் வம்ச ஆட்சிக்குள்ளான நாடுதான். சிரியாவில் அல்கைடா கிளர்ச்சியின் விளைவாக, 54 ஆண்டுகள் அசாத் வம்சம் ஒரு அரக்க ஆட்சி நடத்தியிருப்பதாக கண்டுபிடித்துள்ளார்கள்!
இவ்வாறாகத்தானே ``சுதந்திரம்`` பெற்ற தொடர்காலனிய நாடுகள் 1950 களில் ஜூக்கோசிலாவியாவினதும்,இந்தியாவினதும் முன் முயற்சியில் உருவாகியது அணிசேரா இயக்கம்.நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள் இதில் அங்கம் வகிப்பதாகக் கூறப்பட்டது.
எனினும் நடைமுறையில் இந்த நாடுகள் ஏதோ ஒரு முகாமைச் சார்ந்துதான் அப்போதுகூட இயங்கி வந்தன.இந்தியா 1991 இல் ரசிய சமூக ஏகாதிபத்தியம் தகரும் வரை அரசியல் ரீதியாக ரசியாவையே சார்ந்திருந்தது.இப்போது அமெரிக்காவின் யுத்த தந்திரக் கூட்டாளியாக இருந்த வண்ணம் சீனாவோடும்,ரசியாவோடும் பேரம் பேசி வருகின்றாது.
அணிசேரா இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட உலகச் சூழல் அல்ல இன்று நிலவுவது. அந்த இயக்கக் கோட்பாடுகளை இன்று கடைப்பிடிக்க முடியாது. அல்லாமல் செய்வதானால் முதலில் இன்றைய உலக மறுபங்கீட்டு-மூன்றாம் உலகப் போர் சூழல் பற்றிய ஒரு சர்வதேச மதிப்பீட்டை முன் வைக்க வேண்டும். அதிலிருந்து புதிய அணிசேராக் கொள்கையை வகுக்கவேண்டும்.
அல்லாமால் அணிசேராக் கொள்கை பேசுவது அப்பட்டமான ஏமாற்றே ஆகும்.இந்தியச் சார்பு நிலைக்கு போடும் திரையே ஆகும். இதையே அனுரா ஆட்சி செய்ய முற்படுகின்றது.
பல தேர்தல் வாக்குறுதிகளில் தன் ஆரம்ப நாட்களிலேயே அடி சறுக்கி நிற்கின்றது அனுரா ஆட்சி.விளையும் பயிரை முளையில் தெரியும். எனினும் 100 நாட்கள் பொறுமை காப்போம்!
இலங்கை- ஈழ மீனவர் பிரச்சனை
ஆனால் இலங்கை- ஈழ மீனவர் பிரச்சனை 2009 இல் ஆரம்பித்து 15 வருடங்களாகத் தொடர்கின்றது. எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.அதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.
அனுராவின் இந்தியப் பயணம் குறித்த அதிகார பூர்வத் தகவல்களில் இப்பிரச்சனை நிகழ்ச்சி நிரலில் இருப்பது போலவும் தெரியவில்லை.
இலங்கையரின் அரசுத் தலைவராக, முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக இந்தியா செல்லும் அநுரா புத்த கஜா செல்வது ஏன்?
இதற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கூட கடற் தொழிலாளர் பிரச்சனைக்கு கொடுக்கப்படவில்லை!
இலங்கையில் இந்தியக் கடற்கொள்ளை தொடர்வதற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு.
இலங்கை ஈழக் கடற்பரப்பின் மீது இந்தியா எழுதப்படாத உரிமையை நிலைநாட்டுகின்றது. அத்துமீறி ஆதிக்கம் செலுத்துகின்றது. தன் நாட்டு தொழிலாளர்களை கடற் கொள்ளைக்குத் தூண்டுகின்றது.அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை அரசுக்கு உரிமை இல்லை என்று கருதுகின்றது.
Security and Growth for All in the Region என்று பசப்பிக் கொண்டு இலங்கையின் இறையாண்மையை மீறுகின்றது.
இது தொழில் தகராறு அல்ல அரசியல் முரண்பாடு. இதை அரசுகள் தான் தீர்க்க வேண்டும்.
அதனால் இந்தத் தடவை அநுரா தனது இந்தியப் பயணத்தில் இதற்கு தீர்வு காண வேண்டும். அத்தகைய ஒரு தீர்வோடு மட்டுமே நாடு திரும்ப வேண்டும்.
நாடாளமன்றத்துக்கு Vacuum பிடிப்பது, பன்றித் தொழுவம் மேய்ப்பதற்கு படிப்புத் தகுதி பற்றிய சர்ச்சைகளை கிளப்புவது போன்ற அதே நாடாளமன்ற அசுத்த தந்திரங்களைக் கைவிட்டு, தனது 100 நாள் ஆட்சியின் சாதனையாக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும்.
இல்லையேல் அவர் புத்த காயாவின் ஒரு மரக்கிளையின் கீழ் அமர்ந்து `இந்திய புத்தே` ஆக ஞானம் பெறுவதுதான் அவருக்கும் நல்லது, நாட்டின் மறுமலர்ச்சிக்கும் நல்லது .
புதிய ஈழப் புரட்சியாளர்கள்.
ஈழம் 15-12-2024
Sri Lanka’s President Anura Kumara Dissanayake will arrive in India on December 15, marking his maiden visit to the neighbouring country after winning the polls a few months ago.
The Sri Lankan leader will be visiting India from December 15 to 17.
“This will be the first bilateral visit of President Disanayaka to India after the recently concluded presidential and parliamentary elections in Sri Lanka,” read a statement issued by the Ministry of External Affairs.
The Sri Lankan President will meet his Indian counterpart Droupadi Murmu, and Prime Minister Narendra Modi, and discuss bilateral issues of mutual interest.
“President Disanayaka will also participate in a business event in Delhi to promote investment and commercial linkages between India and Sri Lanka. Further, he will visit Bodh Gaya as part of the visit,” read the MEA statement.
The Indian government described Sri Lanka as the country’s closest maritime neighbour in the Indian Ocean Region (IOR) and said it holds a central place in Prime Minister Modi’s vision of ‘SAGAR’ (Security and Growth for All in the Region) and India’s ‘Neighbourhood First’ policy.
During India’s External Affairs Minister S Jaishankar’s visit to Sri Lanka in October, he invited President Dissanayake to India.
Jaishankar also met Prime Minister Dr. Harini Amarasuriya during his trip to the Island Nation.
The EAM also met former President Ranil Wickremesinghe and Leader of SJB, Sajith Premadasa.⍐
No comments:
Post a Comment