Monday 17 June 2024

IMF ஆட்சிக்கு ஆயர் ஆசீர்வாதம்!

 


President meets Mannar Bishop; discuss Indo-Lanka land connectivity; energy exports

President Ranil Wickremesinghe yesterday met with Most Rev. Dr. Fidelis Lionel Emmanuel Fernando, the Bishop of Mannar, Diocese of Mannar at the Mannar Bishops House.

The Bishop of Mannar commended President Ranil Wickremesinghe for his economic reform efforts aimed at rescuing the country from its financial crisis. During their meeting, they also discussed future development plans for the Mannar district.

Key topics included the development of Point Pedro and Mullaitivu as renewable energy hubs. Emphasis was placed on ensuring that these development activities are carried out in an environmentally friendly manner.
The Bishop of Mannar commended President Ranil Wickremesinghe for his economic reform efforts aimed at rescuing the country from its financial crisis.
During their discussion it was noted that negotiations are underway regarding the sale of surplus renewable energy to India. A feasibility study is currently being conducted on establishing a power line connection between Sri Lanka and India, with further discussions expected during the upcoming visit of the Indian Foreign Minister to Sri Lanka.

President Wickremesinghe also mentioned that a pre-feasibility study for a land connection between Sri Lanka and India has been completed, and a full feasibility study will be conducted in the near future.

Additionally, plans to develop Mannar as a tourist hub were discussed, including the potential development of Mannar Fort to attract cruise tourists.

President Ranil Wickremesinghe further remarked that these initiatives would lead to extensive development across all sectors in the Mannar district in the future. The Bishop of Mannar also urged the President to address the issues faced by the fishermen of Mannar.

The meeting was attended by Vicar General of the Mannar Diocese, Father P. Christunayagam; Reverend Father Gnanpragasam of Madu Church; Father Peppi Sosei; former Vicar General of the Mannar Diocese; and other clergy members.

Daily FT: Monday, 17 June 2024


இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கப் போகும் மன்னார்: 

ரணில் பெருமிதம்

மூன்று தசாப்த கால யுத்தத்திற்கு முகம் கொடுத்த மன்னார் மாவட்டம் இன்று புனரமைக்கப்படுவது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். 

மன்னார் (Mannar) மாவட்ட செயலகத்தில் இன்று (16.06.2024) நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 


இதன்போது அவர் மேலும் கூறுகையில், 

"இம்மாவட்டத்தின் விரிவான அபிவிருத்தி மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்க முடியும். இங்கு சுற்றுலாத் தொழில், கடற்றொழில் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

இலங்கையின் பொருளாதாரம் 

மேலும், இப்பகுதிகளில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். காற்றலை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு விற்கும் முறை குறித்து இந்திய அரசுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

வடமாகாணமானது பசுமை ஆற்றலை உற்பத்தி செய்வதில் விசேட ஆற்றலைக் கொண்டுள்ளது. ஏரிகள் மற்றும் காற்றாலைகளில் சோலார் பேனல் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதன் மூலம் அதிகளவில் மின் உற்பத்தி செய்ய முடியும். அந்த சக்தியை இந்தியாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் விற்பனை செய்வதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்க முடியும்.

பசுமை ஆற்றல் மற்றும் பச்சை ஹைட்ரஜன் ஆகியவை பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

மன்னாரில் நிர்மாணிக்கப்படும் புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தேவையான நிதி எதிர்வரும் காலங்களில் வழங்கப்படும். புத்தளம் ஊடாக மன்னாருக்கான வீதி திறப்பது தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடி பதில் வழங்க முடியும்.


அதேவேளை, மன்னார் வைத்தியசாலைக்கு CT ஸ்கேன் இயந்திரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நவீன விவசாயத்தை உருவாக்குவதற்கான முறையான திட்டத்தை முன்வைத்துள்ளோம்.அதற்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு அபிவிருத்திக் குழுவைக் கூட்டி கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்குமாறு தெரிவிக்க விரும்புகிறேன்.

அபிவிருத்திக் குழு

இந்தப் பிரதேசத்தில் உள்ள ஏரிகளை பாதுகாப்பதற்கும் மல்வத்து ஓயா திட்டத்தில் இருந்து மன்னாருக்கு வரும் நீரைப் பாதுகாப்பதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை.

அது மாத்திரமன்றி, அடுத்த ஐந்து தசாப்தங்களுக்கு, ஈரமான பிரதேசங்களில் மழை அதிகரிப்பு மற்றும் வறண்ட பகுதிகளில் மழை பற்றாக்குறை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த நிலைமைக்கு தீர்வு காண இப்போதிலிருந்தே செயல்பட வேண்டும்.


மடு தேவாலயத்திற்கு செல்லும் பாதை அந்த யாத்திரிகர்களுக்கானது. ஸ்ரீ பாதத்திற்கு செல்லும் பாதை ஸ்ரீ பாதஸ்தானத்திற்கு வரும் யாத்திரிகர்களுக்கானது.எனவே, யாத்திரிகர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி முப்பது இலட்சம் அபராதம் விதித்தால், அதை நான் நியாயமான விடயமாக பார்க்கவில்லை.

எனவே, மன்னார் மறைமாவட்ட பிரதிநிதி, வனப் பாதுகாப்புத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கைப் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த வீதியைச் சுத்தப்படுத்தி அபிவிருத்தி செய்ய வேண்டும்.

அடிப்படை அடித்தளம்


[Auxiliary Bishop Fidelis Lionel Emmanuel 
Fernando of Colombo has been appointed 
as the Bishop of Mannar]



இந்த நடவடிக்கைகள் மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு முன்னதாக நிறைவு பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள காவலரண்களை ஒரே நேரத்தில் அகற்ற முடியாது. பாதுகாப்புப் படையினருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பேன் என நம்புகிறேன்.

மன்னார் மாவட்டத்திற்கு தேவையான அபிவிருத்திகளை வழங்குவோம். இந்த ஆண்டு அதற்கான அடிப்படை அடித்தளம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மன்னாரைச் சுற்றி நடைபெறும் இந்த விரிவான அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்பினேன். அதனால் யாரிடமும் சிக்கிக் கொள்ள வேண்டியதில்லை.

இப்பிரதேசத்தில் விரிவான அபிவிருத்திகளை மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கும் மாவட்டமாக மன்னார் மாவட்டத்தை உருவாக்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

நிதி ஒதுக்கீடு 

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில், 

"ஜனாதிபதி மன்னாருக்கு வந்து அங்குள்ள மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி மன்னார் மாவட்டத்தை முழுமையான அபிவிருத்தியாக மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை வகுத்துள்ளார்.

அதற்காக மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவர் சார்பாக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நல்லாட்சி அரசாங்கத்தின் போது மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பணம் ஒதுக்கப்பட்டது.

ஆனால், வளர்ச்சி பணிகள் செயற்படுத்தப்படாமல் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது. மேலும், கடந்த 4 ஆண்டுகளாக மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எந்த பணமும் ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில், மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்தி இவ்வருடம் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பெருமளவு நிதியை ஒதுக்கியமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்” என கூறியுள்ளார்⍐. 

News: Tamilwin Pic: ENB 

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...