SHARE

Tuesday, November 23, 2021

கிண்ணியாவில் படகுப் படுகொலை!

  • 45 ஆண்டுகளாக பராமரிக்கப்படாத பாலம்;
  • 6 வருடங்களாக ஆபத்தான தற்காலிக பாதை 
  • அடிக்கல் நாட்டி 8 மாதங்களாக மீளக் கட்டியமைக்காத அரசு
  • சட்டவிரோத படகுச் சேவையை கண்டு கொள்ளாத முஸ்லிம் நாடாளமன்ற உறுப்பினர்;

இது விபத்தல்ல படுகொலை!

திருகோணமலை -கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு கவிழ்ந்து பலர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து பால விவகாரத்தில் தீர்வில்லை எனக் கூறி வெகுண்டெழுந்த பிரதேச மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இடம்பெற்ற இக்கோரச் சம்பவத்தில் இதுவரை மாணவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு.தோள் பையுடன் பாடசாலைக்குச் சென்ற சிறு வயது மாணவர்களே இவர்களாவர்.


குறித்த ஆற்றுப் பகுதி ஆற்று நீரை கடலுடன் கலக்கும் பகுதி என்பதால் குறித்த பகுதியில் நீரோட்டம் அதிகமாகக் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது மக்களின் முன்முயற்சியில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை இந்த விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, சகு சஹீ (மூன்றரை வயது), சஹிலா (6 வயது), பரீஸ் பகி (6 வயது), சப்ரியா (30 வயது), ஷேஹப்துல் சாகர், எவ்.சரீன் (8 வயது) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

Gallery Gallery

படகுப் பாதை விபத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு சஜித் வலியுறுத்தல்

கிண்ணியாவில் இடம்பெற்ற ‘படகுப் பாதை’ விபத்து சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

இதேவேளை, இந்த விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி, நிமல் லன்சா அந்தப் பகுதியில் பாலத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டிய போதும், அது தொடர்பான வேலைத்திட்டம் ஸ்தம்பிதமடைந்திருந்தது என்றும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.

கிண்ணியா படகு விபத்து - ஆளுநர் பிறப்பித்துள்ள உத்தரவு

திருகோணமலை, கிண்ணியா குருஞ்சாங்கேணி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளார்.

ஆணையர் என்.மணிவண்ணனுக்கு அவர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

மேலும், இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, குறித்த ஆற்றில் படகு இயக்கவும், பராமரிக்கவும் அனுமதி வழங்கியது, யார் நடத்தி சென்றது என்ற விடயங்கள் உள்ளிட்ட விவரங்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விசாரணைகளை மேற்கொள்வதற்காக மாகாண நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக விசேட பொலிஸ் பரிசோதனை மேற்கொள்ளுமாறு ஆளுநர், திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20 பேர் வரையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆளுநர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் அமைதியாக செயற்படுமாறு ஆளுநர் பிரதேச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிண்ணியாவில் நடந்தது ஒரு படுகொலை

கிண்ணியாவில் நடந்தது ஒரு படுகொலை என்பது சில நிகழ்வுகளின் மூலம் தெளிவாகிறது. கிண்ணியாவில் உள்ள காட்சிகள் மிகவும் கொடூரமானவை, அவற்றைப் பார்ப்பது கடினம்.

ஆறு ஆண்டுகள் ஆகியும் பாலம் கட்டி முடிக்கப்படவில்லை. தமது பிரச்சினைகளை தீர்க்க முடியாத அரசியல் தலைவர்களை தெரிவு செய்வதன் குற்ற உணர்வை மக்கள் உணர்கிறார்கள். இதற்கு தாம் பொறுப்பல்ல என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 கிண்ணியாவில் மட்டுமன்றி இலங்கையிலும் பல அபிவிருத்தித் திட்டங்கள் அரசியல்வாதிகள் தமது நிதி ஆதாரத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் பெரும் முதலீட்டுத் திட்டங்களாகும்.. 

கிராம சேவகர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள், அவரை வெளியே வருமாறு ஆர்ப்பரித்தனர்.பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய நபர் சம்பந்தப்படவர்களைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

மக்கள் கடைகளை மூடி துக்க தினமாக அனுஷ்டிகின்றனர்.

பலி எண்ணிக்கை உயர்ந்ததைத் தொடர்ந்து கிண்ணியா மக்கள் வீதியில் டயர்களை எரித்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதன் விளைவாக வீதிகள் எங்கும் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பிரதேச மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


கிண்ணியா படகு விபத்து!- உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

23 நவம்பர், 2021

இந்த விபத்தை அடுத்து கிண்ணியாவில் மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டங்களை மேற்கொண்டனர்.

படகுப்பாதை ஆற்றில் கவிழ்ந்தபோது அதில் 17 மாணவர்கள் உட்பட சுமார் 30 பேர் பயணித்தனர் என்று நம்பப்படுகின்றது. படகுப் பாதை கவிழ்ந்தவுடன் பலர் நீரில் மூழ்க, சிலர் நீந்திக் கரை சேர்ந்தனர்.

பிந்திய தகவல்களின்படி சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.

ஆற்றில் பொலிஸார், கடற்படையினர் இணைந்து தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். படகில் பயணித்தவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியாததால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.


அதேவேளை, இந்தப் படகுப் பாதைச் சேவை ஊடாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இந்தப் படகுப் பாதைச் சேவை பாதுகாப்பற்றது என்று பொதுமக்களால் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்று தெரிய வருகின்றது.

அது தொடர்பாகக் கரிசனை காட்டப்படாத நிலையில், இன்று நடந்த விபத்து மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. கிண்ணியாவில் வீதியில் இறங்கிய மக்கள் ரயர்களை எரித்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

அதேநேரம், அந்தப் பகுதியில் உள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீடும் பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. அதையடுத்துத் தற்போது வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த ஆளும் கட்சி பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ, சிறுவர்களை அழைத்துச் செல்லும்போது உயிர் பாதுகாப்பு கவசங்கள் பயன்படுத்தப்படவில்லை. நாட்டின் சட்டத்துக்கு அமைய இது கொலை என்று கூறினார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் இம்ரான் மஹ்ரூப், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுதியின்றி படகுப் பாதைச் சேவைக்கு அனுமதி வழங்கியது யார்? என்று கேள்வி எழுப்பினர்.

குறிஞ்சாகேணி பாலத்தைத் திருத்தித் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோது, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் கேலித்தனமாக, கேவலமாகச் சிரித்தார்.

அந்தச் சிரிப்பின் விளைவாகப் பல உயிர்களைக் காவு கொடுத்து விட்டோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

ஊடக்செய்திகளின் தொகுப்பு இடுகை ENB

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...