தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி! முன்னாள் இந்நாள் பா.உ.கள் கைது!
தடையை மீறி இதயத்தால் அஞ்சலி செலுத்தினர் ஜனநாயகப் போராளிகள் கட்சியினர்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
தியாக தீபம் திலீபனுக்கு சுடரேற்ற முற்பட்ட நிலையிலேயே அவர் கைதாகியுள்ளதாக தெரியவருகிறது.
யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் எந்தவொரு நபரையும் கைது செய்யும் வகையில் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் மட்டக்களப்பில் அறுவர் கைதாகி விடுதலை ஆகியுள்ளனர். சாணக்கியன், முன்னாள் பா.உ.கள்,மற்றும் மாநகர பிதாவும் அடங்குவர். இவர்கள் மீது ``போரில் இறந்த தீலிபனுக்கு`` அஞ்சலி செலுத்தியாக பொலிசார் குற்றம் சாட்டியுள்ளதாகவும், திலீபன் உண்ணாவிரதமிருந்து இறந்தவர் என்பதை நீதிபதிக்கு விளக்கி அவர்களை விடுதலை செய்ததாகவும் சட்டத்தரணி சுமந்திரன் பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
ENB
யாழைத் தொடர்ந்து முல்லையிலும் தடை!
திலீபனிற்கான நினைவேந்தலிற்கு முல்லைதீவிலும் இலங்கை காவல்துறை தடை உத்தரவு பெற்றுள்ளது.
முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பெயர் குறிப்பிடப்பட்டு தடை பெறப்பட்டுள்ளது.
இதனிடையே எத்தனை கெடுபிடிகள், எத்தனை நீதிமன்றத் தடையுத்தரவுகள் வந்தாலும் எமது இதயத்தால் அனுஸ்டிக்கும் அஞ்சலியை எதுவும் தடுக்க முடியாது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்துள்ளார்.
திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டிப்பது தொடர்பில் வெல்லாவெளிப் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலுக்கமைவாக களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பதிவு இணையம் Saturday, September 25, 2021
No comments:
Post a Comment