Sunday, 19 February 2017

நந்தினிக்கு நீதி?

நந்தினி
இந்து முன்னணிப் -RSS - படுகொலை!
அரியலூரில் அலறுகிற சத்தம் அனைத்துலகும் கேட்க வேண்டும்.
 
 

காணாமல் போன நந்தினி RSS கிணற்றில் கண்டையப்பட்டார்!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி, 17. டிசம்பர் 29ம் தேதி 'காணாமல் போனார்`!  ஜனவரி 14ஆம் தேதி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கீழமாளிகையைச் சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி மணிகண்டன் , அவரது நண்பர் மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.நந்தினியை காதலித்து கர்ப்பமாக்கிய மணிகண்டன், நண்பர்களுடன் கூட்டாக பலாத்காரம் செய்து அவளது (அவரது) வயிற்றில் இருந்த கருவை எடுத்து எரித்துள்ளான். மணிகண்டன், நந்தினியை கிணற்றில் தள்ளி கொடூரமாக கொன்றது தெரியவந்துள்ளது.  இந்து முன்னணி தலைவர் மற்றும் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராஜசேகரை கைது செய்யக் கோரி, நந்தினியின் உறவினர்கள் கடந்த ஜனவரி 15ஆம் தேதி அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவ்வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி மாதர் சங்கத்தினர் அரியலூரில் ஜனவரி 28ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு காலதாமதமாகவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


அரியலூர் நந்தினிக்கு நீதி கேட்டு மயிலாடுதுறையில் போராட்டம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக்கழகத்தினர் நந்தினிக்கு நீதி வழங்கக்கோரி கண்டன ஆர்பாட்டத்தை நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் செந்தூறை வட்டம் சிறுகடம்பூனூரை சேர்ந்த பதீனேழு வயயதே நிறம்பிய தலித் சிறுமி நந்தினியை அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் காதலித்திருக்கிறான். இந்து முன்னணியின் செந்தூரை கிழக்கு ஒன்றியச்செயலாளரான மணிகண்டன் நந்தினியை காதலித்து கற்பமாக்கி ஏமாற்றிவிட்டு, பிறகு அவனது நன்பர்கள் மணிவண்ணன், திருமுருகன், வெற்றிச்செல்வன் ஆகியோரை சேர்த்துக்கொண்டு  நந்தினியை கூட்டுபாலியல் வன்புணர்ச்சி செய்து, படுகொலை செய்து நிர்வாணமாக கீழ்மாளிகை கிணற்றில் வீசி எறிந்துள்ளனர். நந்தினியின் பிறப்புறுப்பை கிழித்து அவர் வயிற்றில் இருந்த ஆறுமாத சிசுவை அந்த பெண்ணின் சுடிதாரைக்கொண்டு கொளுத்தினர். அந்த சம்பவம் சமுக ஆர்வளர்கள் பலரையும் உரைய வைத்தது.

அப்படிப்பட்ட கொடுஞ்செயலில் ஈடுபட்ட இந்து முன்னனியினர் சிலரை கைது செய்யவேண்டும்,  நந்தினிக்கு உரிய நீதி கிடைக்க வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும்.நந்தினி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவேண்டும். ஜாதி ஆண வக்கொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும். தலித் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

 

No comments:

Post a Comment