Sunday, 19 February 2017

சசிகலாவின் எடப்பாடி தமிழக முதலமைச்சர் ஆனார்


நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி வென்றார்

 தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

ஆனால் இதற்கு திமுக, காங்கிரஸ் மற்றும் ஓபிஎஸ் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூவத்தூர் சிறையில் இருந்து எம்.எல்.ஏக்களை கைதிகளைப் போல நேரே சட்டசபைக்கு அழைத்து வந்து வாக்கெடுப்பு நடத்துவது சரியல்ல; அவர்களை தொகுதிகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு ஒருவாரம் கழித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தினர்.

 நேற்று சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து இன்று ஆளுநரை முதல்வர் சந்தித்து அதுகுறித்து முறைப்படி தெரிவித்தார் .தமிழக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்டு, கடும் அமளிக்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பழனிசாமி வெற்றி பெற்றார்.

No comments:

Post a Comment