SHARE

Thursday, March 31, 2016

மறவன் புலவு ``தற்கொலை அங்கி`` யும், ஈழம் மீது இராணுவ ஆக்கிரமிப்பும்!

முப்பது ஆண்டுகால நீண்டயுத்தத்தின் இராணுவ உபகரணப் புதையல்களின் மீட்பை, தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பை நியாயம் செய்ய, சம கால அச்சுறுத்தலாக சித்தரிக்கும்,சிங்களத்தின்
சதிகார பிரச்சார மோசடியை முறியடிப்போம்!


ஈழத்தை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவமே வெளியேறு!

==============================================================

Recovery Of Arms Cache May Impair De-Militarization Of North Lanka
By PK Balachandran | ENS Published: 30th March 2016 04:49 PM Last Updated: 30th March 2016 04:49 PM

COLOMBO: The accidental discovery of an arms cache, including three parcels of TNT and a suicide jacket, in a house at Chavakachcheri in Jaffna District on Wednesday, may hinder the demilitarization of the Northern Province which is one of the major post-war demands of Sri Lankan Tamils and which was promised to the UN Human Rights Council (UNHRC) by the Lankan government headed by President Maithripala Sirisena.

Opponents of demilitarization like MP Namal Rajapaksa have already tweeted that the cache is a sign of the resurgence of the LTTE and that there is no case for lowering vigil.

Recently, President Sirisena himself said that the separatist "Eelam" mindset is still prevelant among the Tamils, but he was quick to add that the only way to neutralize it is the promotion of reconciliation.

The Sirisena-Wickremesinghe government is keen on demilitarization to the maximum extent, and has got the army, navy and air force to vacate hundreds of acres of land in favor of their former civilian owners.

But observers say that the military may not be entirely with the government in this.In fact, Maj Gen.Chaggi Gallage had an open spat with Foreign Minister Mangala Samaraweera at a meeting he had with troops at the army base in Palaly. He was transferred for "insubordination".

After the war ended in 2009, and especially after the exit of President Mahinda Rajapaksa in January 2015, the military has lost much of its power and influence.Despite assurances by Sirisena and Wickremesinghe, the military top brass are not convinced that they will not be tried for war crimes by an international judicial mechanism set up by the UN.

In this context, incidents and discoveries showing resurgence of the LTTE, are expected to restore the relevance of the military in the affairs of the nation and prevent the government from bowing to the diktats of the West and the UNHRC.
             ==============================================================
மீட்கப்பட்ட தற்கொலை அங்கி, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதிக்குரிய சிங்கள பத்திரிகையின் தாளொன்றிலேயே சுற்றப்பட்டிருந்தது. 
மீன்பிடிக்கவே வெடிபொருட்களை கொண்டுவந்தேன்!
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களை என்ன காரணத்துக்காக எங்கிருந்து கொண்டுவந்ததான தகவல்களை, அவ்வீட்டின் உரிமையாளரான சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் பழைய வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்த வாகனத்துக்குள்ளேயே, மேற்படி அங்கி மற்றும் வெடிபொருட்கள் காணப்பட்டதாகவும் அவற்றிலிருக்கும் வெடிபொருட்களை மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்தவே எடுத்து வந்ததாகவும் அச் சந்தேகநபர் தெரிவித்துள்ளார். 
================================

தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது - கூட்டு எதிர்க்கட்சி
30 மார்ச் 2016

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் உண்மைகளை மக்களிடமிருந்து மூடி மறைக்க முயற்சிப்பதாகவும்,தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் கூடுதல் கரிசனை காட்ட வேண்டுமெனவும், அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

வெள்ளவத்தையில் உள்ள இடமொன்றுக்கு அனுப்பி வைக்க, இந்த வெடிபொருட்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவே தகவல்கள் கிடைத்துள்ளன எனக் குறிப்பிட்ட அவர்,இந்த சம்பவத்தை உதாசீனம் செய்து விட முடியாது எனவும், உண்மையாக மீட்கப்பட்ட பொருட்களின் விபரங்களையும் என்ன நோக்கத்திற்காக இந்த வெடிபொருட்கள் ஆயத்தப்படுத்தப்பட்டன என்பது பற்றியும் அரசாங்கம் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
=========================
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்
MAR 30, 2016 | 11:36by கார்வண்ணனின் செய்திகள் Karunasena Hettiarachchi

சாவகச்சேரியில், வெடிபொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து, விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைய முனைவதாக எதிர்க்கட்சிகள் கூச்சலிடத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.


விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையத் தொடங்கியுள்ளதாகவும், தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சிக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும் வெடிபொருட்கள், வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்பட இருந்தவை என்றால், அது தொடர்பான உண்மைத் தன்மையை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

இந்தநிலையில், சீன செய்தி நிறுவனமான சின்ஹுவாவுக்கு பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, அளித்துள்ள செவ்வியில், வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை ஒன்றும் அதிமுக்கியமான விடயமல்ல என்றும், அது போர்க்காலத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளார்.

போர்க்காலத்தில், விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு வெடிபொருட்களை நாம் அடிக்கடி மீட்கிறோம். இதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற கேள்விக்கே இடமில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
=============================

மீட்கப்பட்ட தற்கொலை அங்கி, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதிக்குரிய சிங்கள பத்திரிகையின் தாளொன்றிலேயே சுற்றப்பட்டிருந்தது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை படையணி பயன்படுத்தும் தற்கொலை அங்கி உட்பட, வெடிப்பொருட்கள் பல, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன.

வெடிபொருட்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர், அவ்வீட்டுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அறியமுடிகின்றது. சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றின் அறையில், சிங்கள மொழிப் பத்திரிகை மற்றும் உரப்பையில் சுற்றப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தத் தற்கொலை அங்கியும் இதர வெடிபொருட்களும் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட வெடிபொருட்களில், தற்கொலை அங்கி, 4 கிளைமோர் குண்டுகள், 12 கிலோ கிராம் நிறைகொண்ட வெடிபொருட்கள் அடங்கிய மூன்று பொதிகள், 9 மில்லிமீற்றர் ரவைகள் அடங்கிய இரண்டு பொதிகள் (அந்தப் பொதிகளில் 100 ரவைகள் இருந்துள்ளன),  கிளைமோர் குண்டை வெடிக்க வைப்பதற்கான மின்கலப் பொதிகள் இரண்டு, சிம் அட்டைகள் ஐந்தும் அடங்குகின்றன.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஆயுதங்கள் மீட்கப்பட்ட, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் உள்ள வீட்டைச் சேர்ந்தவர் ஒரு வர்த்தகர் என்றும் அவரிடம், சிறிய ரக லொறியொன்று இருப்பதாகவும், அதிலேயே அவர், பொருட்களை ஏற்றியிறக்கி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அறியமுடிகின்றது.

இவ்வாறான நிலையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களையும் அவர், கடத்தி விற்பனை செய்வதாகவும் இரகசியப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில், குறித்த நபர் வீட்டுக்கு வருவதாக, பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உஷாரடைந்த பொலிஸார், அவரை மடக்கிப் பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சந்தேகநபர், இரவு 9 மணியாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனையடுத்தே அப்பகுதியை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து,  பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். அதன் பின்னர், குறிப்பிட்ட வீட்டுக்குள் அதிரடியாய் நுழைந்துள்ளனர். அப்போது வீட்டில், சந்தேகநபரின் மனைவி மற்றும் அவர்களுடைய பிள்ளை மற்றும் சந்தேகநபரின் தந்தை ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். வீட்டில், கஞ்சா போதைப்பொருளைத் தேடி, தேடுதல் வேட்டை  நடத்திய பொலிஸார், படுக்கையறையின் தட்டிலிருந்தே இந்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து அவருடைய மனைவி,  அவ்விடத்திலேயே விழுந்துவிட்டார். இதனையடுத்து சந்தேகநபர் தொடர்பிலான விவரம் அடங்கிய தகவல், சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டது. மயங்கி விழுந்த அப்பெண், பொலிஸ் பாதுகாப்புடன் சாவக்கச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பொலிஸார், அவர்களுடைய பிள்ளையையும் கூடவே வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

சந்தேகநபரின் தந்தையை பொலிஸார், தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மயக்கம் தெளிந்ததும், பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் அப்பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். அவர், கிளிநொச்சி அக்கராயன் பகுதிக்கு அடிக்கடி சென்றுவருவதாக தெரிவித்ததையடுத்து, அப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதே, அக்கராயன் பகுதியில் மறைந்திருந்த நிலையில் சந்தேகநபர், நேற்றுப் பிற்பகல் 2 மணியளில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு, பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர், அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது. அதன் பின்னர் சாவகச்சேரிக்கு, மாலையில் அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து கொழும்புக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக, உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவித்தது.

சந்தேகநபர், மன்னார் முருங்கன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு இரண்டு மனைவிகள் என்றும், முதல் மனைவி இறந்துவிட்டதாகவும், அவர்களுக்குப் பிறந்த பிள்ளையே தற்போது உள்ள பிள்ளையென்றும் அறியமுடிகின்றது. இந்நிலையிலேயே, சாவகச்சேரி மறவன்புலவில் இரண்டாவது தடவையாக திருமணம் செய்துள்ளார்.

அவருக்கும், அவரது இரண்டாவது மனைவிக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுவதாவும், அச்சண்டைகளின் போதெல்லாம், மனைவி கோபித்துக்கொண்டு, வீட்டைவிட்டு வெளியேறி விடுவதாகவும் தெரியவருகின்றது.

மீட்கப்பட்ட தற்கொலை அங்கி, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதிக்குரிய சிங்கள பத்திரிகையின் தாளொன்றிலேயே சுற்றப்பட்டிருந்தது. இவ்வாறு மீட்கப்பட்ட இந்தத் தற்கொலை அங்கியும் வெடிபொருட்களும், அவ்வளவு பழையன இல்லை என்றும் வடக்கு பாதுகாப்புப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

இவை, ஏதாவது பிரதேசத்திலிருந்து இங்கு அனுப்பி வைக்கப்பட்டனவா, சந்தேகநபருக்கு இப்பொருட்கள் எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில் சந்தேகநபர், தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்றும் அவர், புனர்வாழ்வு பெற்றிருக்கவில்லை என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் ரமேஷ் என்றழைக்கப்படும் எட்வட் ஜூலின் (வயது 32) என்றும் அவர்,  தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தில், 13 வயதில் இணைந்து கொண்டார் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நன்றி: தமிழ் மிரர்/ யாழ் உதயன்
==============
சாவகச்சேரி விவகாரம்: பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை
31-03-2016 10:18 AM Comments - 0       Views - 25

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பிலான விசாரணைகள், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க, மேற்படி பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில், பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


மூலம்: http://www.tamilmirror.lk/
=======================

புனர்வாழ்வு அளிக்கப்படாதவர்களால் அச்சுறுத்தல் – கோத்தா எச்சரிக்கை
MAR 31, 2016 | 1:07by கி.தவசீலன்in செய்திகள்
gota-udaya (1)சாவகச்சேரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய 

ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2009ஆமே் ஆண்டு மே மாதம், போரின் முடிவில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையாதவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவில்லை.

இவர்கள், மோசமான அச்சுறுத்தலாக உருவாகக் கூடும்”  என்றும் கோத்தாபய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

================
Sri Lanka recovers second stock of explosives from former war zone
Source: Xinhua   2016-03-31 01:01:36   More

COLOMBO, March 30 (Xinhua) -- Sri Lankan police on Wednesday recovered a stock of explosives in the north of the country hours after a suicide jacket had been discovered at another location.

Police Spokesperson Ruwan Gunesekara said that several explosives including small bombs and a rocket-propelled grenade (RPG) launcher had been discovered from an abandoned well in Mannar in the north after police had conducted a search operation in the area.

Gunesekara said that the explosives are believed to have been hidden by the Tamil Tiger rebels during the war period and after obtaining a court order, the army had destroyed it.

Police had earlier on Wednesday recovered a suicide jacket and explosives from a house in Chavakachcheri, also in the north, sparking concerns from opposition parliamentarians that the Tamil Tiger rebels may try to regroup.

Sri Lankan armed forces militarily defeated the rebels in May 2009, ending 30 years of a civil conflict.

The suicide jacket and explosives were recovered from a house based on information received by police.

The police said that three parcels found in the house contained 12kg of TNT explosives. They also recovered 100 bullets and batteries used to trigger explosives.

Soon after the recovery, Defence Secretary Karunasena Hettiarachchi dismissed concerns, stating that there was no threat to the country's national security as these were weapons hidden by the rebels during the war.
==============================
எதையும் எதிர்கொள்ள சிறிலங்காப் படையினர் தயார் – யாழ். படைகளின் தளபதி
MAR 31, 2016 | 1:15by கார்வண்ணனின் செய்திகள்
Major General Mahesh Senanayaka

வடக்கில் எந்த அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் சிறிலங்கா படையினர் தயார் நிலையில் இருப்பதாக, யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
 சாவகச்சேரியில், வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் கருத்து வெளியிடுகையில்,
“ முழுமையான விசாரணைகளின் பின்னரே, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளியின் நோக்கங்கள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
 ஆனாால், எந்த அவசர நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், சிறிலங்கா படையினர் தொடர்ந்து மூலோபாய ரீதியாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
==========================================
வெடிபொருள் மீட்கப்பட்ட வீட்டில் இருந்து தப்பிச்சென்ற இளைஞர் கிளிநொச்சியில் கைது
MAR 30, 2016 | 11:19by கி.தவசீலனின் செய்திகள்

சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில், தற்கொலைத் தாக்குதல் அங்கி, கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட, வீட்டில் இருந்து தப்பிச் சென்ற இளைஞர் இன்று கிளிநொச்சிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அக்கராயன் பகுதியில் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

31 வயதுடைய இந்த இளைஞரின் பெயர் எட்வின் என்றும் கூறப்படுகிறது. இவரே அந்த வீட்டின் உரிமையாளர் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...