SHARE

Monday, December 28, 2015

விடுதலைப் புலிகளின் தர்மேந்திராக் கலையகத்தின் இன்றைய நிலை

பாழடையுமோ புலிகளின் பாசறை,
நாளடையுமோ புதிய தலைமுறை?
தோள் சுமக்குமோ புதிய தேசத்தை,
வேர் அறுக்குமோ அந்நிய பாசத்தை!
========================== ENB=========================== 


விடுதலைப் புலிகளின் 
தர்மேந்திராக் கலையகத்தின் இன்றைய நிலை
[ வெள்ளிக்கிழமை, 25 டிசெம்பர் 2015, 12:18.15 PM GMT ]

தர்மேந்திரா என்னும் ஒரு போராளிக் கலைஞனின் வீரமரணத்தை தொடர்ந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சிந்தனையில் உருவாக்கப்பட்டது தர்மேந்திரா கலையகம்.

தர்மேந்திரா கலையகம்
இக்கலையகம் பல்வேறு மூத்தகலைஞர்கள் மென்மேலும் வளர்ச்சியடைய ஒரு களமாக இருந்ததுடன், இலைமறைகாயாக இருந்ந பல தமிழீழக் கலைஞர்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.

இந்தக்கலையகத்தில் பல்வேறுபட்ட விடுதலை எழுச்சிப்பாடல்கள், தத்துவப்பாடல்கள், பக்திப்பாடல்கள் மற்றும் திரைப்படங்கள், குறும்படங்கள், தொடர் நாடகங்கள் என அனைத்திற்கும் பின்னணி இசையையும் வழங்கியிருந்தது.
தர்மேந்திரா கலையகம்
அந்தவகையில் 2004ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் மக்கள் மீளாத்துயரடைந்து இருந்தபொழுது, அவர்களை ஆற்றும் நோக்கில் சுனாமிப் பாடல்களையும் வெளியீடு செய்திருந்தது.

2009ம் ஆண்டு ஜனவரி மாதம் கிளிநொச்சி நகர் இலங்கை இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்த போது, கிளிநொச்சி திருநகரில் அமைந்திருந்த இந்தக்கலையகம் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் சிக்கிக் கொண்டது.

தர்மேந்திரா கலையகம்
2015ம் ஆண்டு இன்று வரை குறித்த கலையகம் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் சிக்கி சிதைவடைந்து காணப்படுகின்றது.

இந்தக் கலையகக் கலைஞர்கள் தற்பெழுது நிர்க்கதியான நிலையில் தமது கலைத்திறனை வெளிக்கொண்டு வரமுடியாமல் தவிக்கும் நிலை காணப்படுகின்றது.

தர்மேந்திரா கலையகம்
இன்று எமது செய்தியாளர் மேற்படி கலையகத்திற்கு நேரடியாக சென்று உடைந்திருந்த அந்த கலையகத்திற்குள் நின்று ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நன்றி செய்தி: ஊடகங்கள்

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...