SHARE

Monday, December 28, 2015

ரணிலுக்கும் சந்திரிக்காவிற்கும் இடையில் லண்டனில் சந்திப்பு

ரணிலுக்கும் சந்திரிக்காவிற்கும் இடையில் லண்டனில் சந்திப்பு
வெள்ளிக்கிழமை, 25 டிசெம்பர் 2015,

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் இடையில் லண்டனில் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 22ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க லண்டன் சென்றிருந்தார்.

அதேபோன்று தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 18ம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க லண்டன் சென்றிருந்தார்.

ஆக இந்த இரு ``தனிப்பட்ட விஜயங்களிலும்`` பின்வரும் தேசியப்  பிரச்சனைகள் விவாதத்துக்கு எடுக்கப்படுமெனவும் அதே ஊடகங்கள் தெரிவித்துள்ளன!

1) தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள், 
2) உத்தேச அரசியல் அமைப்பு திருத்தங்கள், 
3) கடந்த மஹிந்த ஆட்சிக் கால ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளின் நிலைமை, 
4) எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றங்கள் 5) உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன!

No comments:

Post a Comment

மோடி வருகை: அதிகாரபூர்வ அரசாங்க அறிவிப்பு

மோடி ஏன் வருகின்றார்?