Thursday 20 August 2015

சமஸ்டிக் கட்சிக்குள் `அதிகாரப் பகிர்வு` ச் சண்டை!

சுரேஸா,விலகிப்போவேன்சிறீதரன்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் போனஸ் ஆசனங்களினில் ஒன்றினை சுரேஸ்பிறேமச்சந்திரனிற்கு வழங்குவதற்கு கூடிய விருப்பு வாக்கு பெற்றிருந்த சிவஞானம் சிறீதரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மீறி வழங்கப்பட்டால் தனது உறுப்புரிமையிலிருந்து ராஜினாமா செய்யப்போவதாகவும் கட்சி ஆதரவாளர்களிடையே உரையாற்றுகையினில் தெரிவித்துள்ளார். இதே கருத்தினை சுமந்திரனும் கொண்டுள்ளதாகவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே  போனஸ் ஆசனங்களில் ஒன்றினை சுரேஸிற்கு வழங்க கோரும் வகையினில் பங்காளி கட்சி தலைவர்கள் இன்று சம்பந்தனை திருமலையினில் சந்தித்துள்ளனர்.எனினும் இவ்விடயத்தினில் சம்பந்தன் திருப்திகரமான பதிலை தரவில்லையெனவும் மாவையுடன் உரையாடுவதாகவும் தெரிவித்து திருப்பி அனுப்பியுள்ளார்.

ரெலோ சார்பினில் செல்வம் அடைக்கலநாதன்,கோடீஸ்வரன்,பிரசன்னா ஆகியோரும் ஈபிஆர்எல்எவ் சார்பினில் சிவசக்தி ஆனந்தன்,இந்திரராசா புளொட் சார்பினில் சித்தார்த்தன்,``மாமனிதர்`` சிவராம் கொலையாளி ஆர்.ஆர் எனப்படும் இராகவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

பங்காளி கட்சிக்கென ஒரு போனஸ் ஆசனத்தை தரக்கோரிய அவர்கள் அதனை சுரேஸ் மற்றும் விநோகரதலிங்கம் அல்லது சிறீகாந்தாவென பங்கிடப்போவதாக தெரிவித்திருந்தனர்.எனினும் இவ்விடயத்தினில் சம்பந்தன் கூடிய ஆர்வம் காட்டவில்லையென கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...