SHARE

Monday, April 27, 2015

புதிய ஈழப்புரட்சியாளர்களின் மே நாள் முழக்கங்கள்

மே1-மே18
புரட்சித்திருநாள் சூளுரைகள்:

* அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய 
மைத்திரி-ரணில்-பொன்சேகா கும்பலின் அரசாங்கம் தேசத்துரோக அரசாங்கமே!

* ஏகாதிபத்திய உலக மறுபங்கீட்டில் ரசிய-சீன முகாமுக்கு எதிராக அமெரிக்க இந்திய முகாமுடன் அணி சேரும் வெளிவிவகாரக் கொள்கை, `அணி சேராக் கொள்கை`யைக் கைவிடும் விதேசியப் பாதையே!

* உலக மறுபங்கீட்டுப் போரில் இந்த முகாம்களில் எந்த ஒன்றைச் சார்பவர்களும் ஏகாதிபத்திய தாசர்களே!

* பக்ச பாசிஸ்டுக்களுக்கு மாற்று மைத்திரி ரணில் பாசிஸ்டுக்கள் அல்ல!

* சரிந்து வரும் அமெரிக்காவின் உலக மேலாதிக்க சாகச வெறியாட்டங்களை எதிர்ப்போம்!

* முண்டு கொடுக்கும் இந்திய அரசின் ஆசிய விரிவாதிக்க கனவை தகர்ப்போம்!

* அண்டிப் பிழைக்கும் மைத்திரி - ரணில் கும்பலின் தேசத்துரோக அரசாங்கத்தை தூக்கியெறிவோம்!

* அதிகாரப்பரவலாக்கல் பாதையை நிராகரித்து, ஈழச்சமரசவாதிகளை, நாடுகடந்த-புலம் பெயர்ந்த தமிழீழ ஏகாதிபத்திய தாசர்களை, தமிழக- இந்திய விரிவாதிக்க நீசர்களை தனிமைப்படுத்துவோம்!

* சிங்கள, தமிழ் - இரு தேச உழைக்கும் மக்களையும் ஒன்றிணைக்க ஈழப்பிரிவினையை உயர்த்திப்பிடிப்போம்!

* மலையக முஸ்லிம் ஈழத்தமிழ் மக்களின் ஐக்கியத்தைக் கட்டியமைக்க போராடுவோம்!

* ஏகாதிபத்திய உலகமய, உலக மறுபங்கீட்டு கொடுங்கோன்மையை எதிர்த்து அலைகடலென ஆர்ப்பரிக்கும் உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்றுசேருவோம்!

* இனப்படுகொலையாளரை கூண்டிலேற்ற ஐ.நா.பாதையை நிராகரிப்போம்!

*பாராளமன்ற தேர்தல் பாதையைப் புறக்கணிப்போம், புரட்சிப்பாதையில் அணிதிரள்வோம்!

மே நாள் தியாகம் - முள்ளிவாய்க்கால் தியாகம் நீடூழி வாழ்க! 
மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வெல்க!
புதிய ஈழம் மலர்க!
இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

புதிய ஈழப்புரட்சியாளார்கள்



No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...