Sunday, 26 April 2015

மு.நித்தியானந்தனின் `கூலித்தமிழ்`மலையக இலக்கிய ஆய்வு நூல் வெளியீடு

  
                                                                            



''கூலித் தமிழ்`` வெளியீட்டை ஒட்டி BBC செய்தியகத்தில் திரு.மு.நித்தியானந்தன் அவர்கள்


175 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு காலனித்துவ கூலி அடிமைகளாக கடத்திக் கொன்று வரப்பட்ட மக்கள் சந்தித்த குரூர வாழ்வை; அக்காலத்தின் தோட்டத்துறை அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை மொழியாக `கூலித்தமிழ்` பயிற்றுவிக்கப்பட்ட வரலாற்றை,
 இலக்கிய சாட்சியங்கள் ஊடாக,
கோப்பிக்காலம் முதல் தற்காலம் வரை ஆய்வு செய்துள்ளார் இந்நூலாசிரியர்.
கூலித்தமிழ் ஆய்வு நூல் வெளியீடு குறித்து BBC தமிழோசை மணிவண்ணனுடன் நூலாசிரியர் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை கீழ்க்காணும் இணைப்பில் காணக்கூடும்.
25-04-2015
http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2015/04/150425_koolithamail



நூல் அறிமுகம்
Rathina Iyer Pathmanaba Iyer 
added 3 new photos. 29 November 2014 · Edited · Face Book

நண்பர் மு.நித்தியானந்தன் அவர்களது முதலாவது நூல் சில தினங்கள் முன்னர் வெளியாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன். 'கூலித் தமிழ்' 
எனும் தலைப்பிலான இந்நூலினைத் தமிழகத்தில் 'க்ரியா' பதிப்பகம் அழகாகப் பதிப்பித்துள்ளது! 'வீரகேசரி', 'தினகரன்' பத்திரிகைகளில் நண்பர் நித்தியானந்தனது கட்டுரைகள் பல வெளியாகியுள்ளன என்பதோடு மூன்று, நான்கு நூல்களுக்குரிய விஷயங்களைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவைத்திருந்தபோதும், ஒருவித அசிரத்தை காரணமாக, நண்பர் நித்தியானந்தனது நூல் எதுவும் இன்றுவரை வெளிவராமை துரதிர்ஷ்டமே! 

இந்நிலையில், இப்போது அவரது முதலாவது நூல் வெளிவந்திருக்கின்றமை, புத்தாண்டில் மேலும் ஒருசில நூல்கள் வெளிவரும் என்கிற ஒரு நம்பிக்கையைத் தருகின்றது.
'கூலித் தமிழ்' நூலின் உள்ளடக்கம் பற்றிச் சுருங்கக்கூறின் பின்வருமாறு கூறலாம்!

* 19ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளுக்குக் 'கூலி'களாகக் கொண்டுசெல்லப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களின் மத்தியில் எழுந்த முதல் எழுத்து முயற்சிகளை இந்நூல் பதிவுசெய்கிறது.
 * நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் மலையகத் தமிழர்கள்மீது இடம்பெற்ற கொடூர துரைத்தன அடக்குமுறையையும், ஆங்கிலத் துரைமார் தமிழ் பேச உபயோகித்த 'கூலித் தமிழ்' போதினிகளில் இந்த அடக்குமுறை எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும் ஆராயும் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
 * இந்திய வம்சாவளித் தமிழர்கள் மோசமாக நடத்தப்படுவதற்கு எதிராகக் கருமுத்து தியாகராசர் எழுப்பிய கண்டனங்கள் முதல்முறையாக இந்நூலில் பதிவுபெறுகின்றன.
 * மலையகத்தில் எழுந்த முதல் இரண்டு நாவல்கள் பற்றிய ஆய்வுகள் மலையக இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பவை.
 * அஞ்சுகம் என்ற கணிகையர்குலப் பெண் ஆளுமையை மலையகத்தின் முதல் பெண் புலமையாளராக இந்நூல் அடையாளப்படுத்துகிறது.
 * ஐரோப்பிய நூலகங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவான தேடல்கள் இந்நூல் ஆய்விற்குப் பலம் சேர்த்துள்ளன.


விரைவில் லண்டனிலும், தொடர்ந்து இலங்கை, ஐரோப்பா, கனடா போன்ற இடங்களிலும் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் இடம்பெறுமென அறிகிறேன்.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...