SHARE

Saturday, January 10, 2015

யுத்தத்தை முடித்த கௌரவம் மகிந்தவுக்கு என்றும் இருக்கும்; ரணில்

யுத்தத்தை முடித்த கௌரவம் 
மகிந்தவுக்கு  என்றும் இருக்கும்; ரணில்  

30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவுக்கான கௌரவம் என்றும் இருக்கும் என புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டதையடுத்து கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மைத்திரிபால சிறிசேனவை  ஜனாதிபதியாக்கிய அனைவருக்கும் எமது நன்றிகள். மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் நிச்சயமாக ஏற்படும்.

தேர்தலுக்குப் பின்னரான காலங்களில் மக்கள் அமைதியாக செயற்பட வேண்டும் . அவற்றை  மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் .

 அத்துடன் மகிந்த ராஜபக்சவை நான் சந்தித்து கலந்துரையாடினேன். அப்போது அவர், மக்களின் தீர்ப்புக்கு தான் தலைவணங்குவதாக   என்னிடம் தெரிவித்தார்.

எனினும் கடந்த 30 வருடகாலமாக இருந்துவந்த யுத்தத்தை இல்லாதொழித்த மகிந்த ராஜபக்‌சவுக்கு என்றுமே எமது கெளரவம் இருக்கும்.

எனினும், மக்கள் தற்போது மாற்றம் ஒன்றையே எதிர்பபார்க்கின்றனர். புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாக வேண்டும் என்று நினைக்கின்றனர்.

எனவே அதற்கிணங்க, நாம் அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிச்சயமாக பூர்த்தி செய்வோம். அதேநேரம், எந்தவொரு பிரஜையும் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்றும் நாம் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் வெற்றி தோல்வியை அமைதியான முறையிலேயே எதிர்கொள்ளவேண்டும். இதனை மீறுவோருக்கு எதிராக பொலிஸார் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...