SHARE

Saturday, January 10, 2015

அமைச்சரவையில் த.தே.கூ பங்கேற்பது குறித்து தீர்மானிக்கவில்லை ;

அமைச்சரவையில் த.தே.கூ பங்கேற்பது குறித்து தீர்மானிக்கவில்லை ; சுரேஸ்
புதிய ஜனாதிபதியின் தலைமையில் உருவாக்கப்படவிருக்கும் அமைச்சரவையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கேற்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களாக 60 பேர் நாளையதினம்  பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற அதேநேரம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சர் ஆகின்றார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் அமைச்சரவையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அங்கத்துவம் பெறுகின்றதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,அமைச்சரவையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பது குறித்து எந்தவிதமான பேச்சுகளும் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை.

 ``தமிழர் அரசியல் வரலாற்றில் தமிழரசு கட்சியாக இருக்கட்டும், தமிழர் விடுதலை கூட்டணியாக இருக்கட்டும், பின்னர் வந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக இருக்கட்டும், அனைவருமே தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக போராடினோமே தவிர, அமைச்சுக்களுக்காக போராடவில்லை.``

நாங்கள் அவ்வாறு அமைச்சுக்களை பெற்றுக்கொண்டு நக்குண்டார் நாவிழந்தார் போல மாறினால் நாளை தமிழ் இனமே எம்மை தூற்றும் நிலை நிச்சயமாக உருவாகும்.

எனவே இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன முடிவினை எடுக்கப்போகின்றது. என்பது தொடர்பில் கூட்டமைப்பிற்குள் எவ்விதமான பேச்சுக்களும் நடத்தப்படவில்லை.

அவ்வாறு பேச்சுக்கள் நடத்தப்பட்டதன் பின்னர் அது குறித்து உண்மையான நிலைப்பாடு தொடர்பில் தெரியப்படுத்துவோம் என்றார்.

இதேவேளை, நாளை மறுதினம் திங்கட்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...