மக்கள் தமக்காக மாண்டவர்களை மறப்பதில்லை!
வைத்தியசாலை வளாகத்துக்குள் 68 பேர் படுகொலை!
இந்தியப்படையின் யாழ் வைத்தியசாலை படுகொலைப் போர்க்குற்ற நினைவு
செவ்வாய்க்கிழமை, 21 ஒக்டோபர் 2014 11:44
இந்திய ஆக்கிரமிப்புப் படையால் 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கடமையிலிருக்கும் போது சுட்டுக்கொலை செய்யப்பட்ட வைத்தியசாலை பணியாளர்களின் 27ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்திற்குள் அத்து மீறி நுழைந்த இந்திய ஆக்கிரமிப்புப் படையினர் வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் நோயாளிகள் அடங்கலாக 68பேரை சுட்டுப் படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்தனர்.
இன்றைய அனுஷ்டிப்பு நிகழ்வில் வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஓய்வுபெற்ற வைத்தியசாலை பணியாளர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment