மன்னார்: மரக்கறி வியாபாரத்தில் மிலிற்ரறி |
மன்னார் நுழைவாயிலில் படையினர் கடந்த டிசம்பர் மாதம் மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றை திறந்து குறைந்த விலையில் மரக்கறிவகைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் மன்னார் மரக்கறி விற்பனையாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
மன்னாரிலுள்ள வர்த்தகர்கள் தம்புள்ள உள்ளிட்ட இடங்களில் மரக்கறிகளை கொள்வனவு செய்தே மன்னாரில் விற்பனை செய்து வருகின்றனர்,
குறிப்பாக இடவாடகை,வரி,செலவுகள் என்பவற்றை கருத்தில் கொண்டே விலைகளை தீர்மானித்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால் படையினர் திறந்துள்ள மரக்கறி நிலையத்தில் மிகவும் மலிவான விலையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் தமது வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதுடன் தமது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தற்போது இராணுவத்தினர் உற்பத்தி செய்கின்ற மரக்கறி வகைகளை கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாகவும்,இராணுவம் விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளுக்கு ஒருவகை மருந்து தெளிக்கப்படுவதாகவும் தெரிய வருகின்றது.
No comments:
Post a Comment