Monday 6 October 2014

ஜெயக்குமாரியைக் விடுவிக்கக் கோரி வவுனியாவில் போராட்டம்

ஜெயக்குமாரியைக் விடுவிக்கக் கோரி வவுனியாவில் போராட்டம்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 09:53.01 AM GMT ]

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்ய வலியுறுத்தியும் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் எதிர்வரும் 10ஆம் திகதி வவுனியா நீதிமன்றம் முன்பாக அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளனர் என்று வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவைச் சேர்ந்த கி.தேவராசா தெரிவிக்கையில்,

கிளிநொச்சி தர்மபுரப்பகுதியில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பிரயோகித்து ஜெயக்குமாரிக்கும் விடுதலை புலிகளுக்கும் தொடர்பு உண்டு என்பதை வலியுறுத்தி இராணுவத்தினரால் கைது செய்பட்ட ஜெயக்குமாரி 200 நாட்களுக்கு மேலான நிலையில் இன்னமும் விடுதலை சைய்யப்படவில்லை.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைதுசெய்யப்பட்ட ஜெயக்குமாரியின் விடுதலையை வலியுறுத்தியும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 10 திகதி காலை 9.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இந்தப் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் உள்ள சகல பிரஜைகள் குழுக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள், முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், கல்விச்சமூகத்தினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை சார்ந்தோர், ஊடகவியலாளர்கள் என அனைவரையும் ஒன்றிணைந்து குரல் கொடுக்குமாறு கோருகிறோம் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...