SHARE

Thursday, September 11, 2014

யாழ் பாதிரிகளின் பாலியல் படுகொலை வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா (வயது 22) சடலமாக மீட்கப்படுவதற்கு முன்னர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டாரா என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு5 மாத காலம் போதாமையால் மேலதிக கால அவகாசம் வழங்கி கொன்சலிற்றா வழக்கு ஒத்திவைப்பு
================================================
கொன்சலிற்றா வழக்கு ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 09 செப்டெம்பர் 2014 19:05 0 COMMENTS

-யோ.வித்தியா

யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா (வயது 22) சடலமாக மீட்கப்படுவதற்கு முன்னர் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டாரா என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார், நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) காலஅவகாசம் கோரியிருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், இந்த சம்பவம் தொடர்பான வழக்கை நவம்பர் 11ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

கொன்சலிற்றா வழக்கு தொடர்பான இறுதி அறிக்கை வாசிக்கப்படுவதற்காக இன்று செவ்வாய்க்கிழமை (09) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொன்சலிற்றாவின் மரணத்திற்கு ஆயர் இல்லத்து பாதிரியார்கள் இருவரே காரணம் என்பதற்குரிய ஆதாரம் நிரூபிக்கப்படாத நிலையில், பொலிஸாரின் மேலதிக விசாரணை அறிக்கை மன்றில் சமர்பிக்கப்படுவதாக இருந்தது.

இருந்தும், தமது விசாரணைகள் முடிவடையவில்லையெனவும், அதற்கு காலஅவகாசம் வழங்கவேண்டும் எனவும் பொலிஸார் இன்று, மன்றில் கேட்டதிற்கிணங்க நீதவான் காலஅவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தார்.

யாழ்.குருநகர்ப் பகுதியை சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (வயது - 22) கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

தொடர்ந்து இவருடைய மரணத்திற்கு ஆயர் இல்லத்தில் இருக்கும் இரண்டு பாதிரியார்கள் தான் காரணம் என கொன்சலிற்றாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டது.

இருந்தும், நீதிமன்ற விசாரணைகளின் போது, பாதிரியார்கள் தான் காரணம் என்பது நிரூபிக்கப்படவில்லை.

கொன்சலிற்றா, யாழ்.ஆயர் இல்லத்தில் மறைக்கல்வி போதித்து வந்த ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...