SHARE

Thursday, September 11, 2014

வடக்கு மாகாணசபை அமைச்சர்களின் வாகனக் கொள்வனவுச் செலவு 50 மில்லியன் ரூபாய்!

சி.வி.க்கு வாகனம் கையளிப்பு

செவ்வாய்க்கிழமை, 09 செப்டெம்பர் 2014 12:24 0 COMMENTS
-பொ.சோபிகா

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோருக்கான வாகனங்களை ஆளுநர் அலுவலத்தில் வைத்து வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, செவ்வாய்க்கிழமை (09) வழங்கினார்.

வாகனங்களை, முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரின் செயலாளர்கள் பெற்றுக்கொண்டனர்.

வடமாகாண சபையால் கடந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 50 மில்லியன் ரூபா நிதி, முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் நான்கு அமைச்சர்களுக்கு வாகனங்கள் வாங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வர்த்தக வாணிப மீன்பிடி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் ஆகியோருக்கு தலா 7 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, ஆளுநரால் கடந்த ஜூலை 5 ஆம்
திகதி வழங்கப்பட்டன.

அத்துடன், முதலமைச்சருக்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான கார் ஒன்றும் வழங்கப்பட்டது.






No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...