SHARE

Tuesday, August 12, 2014

இராயப்பு ஜோசப்பை கைது செய்ய வேண்டும்!- பொதுபல சேனா


 பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்

நாட்டை காட்டிக் கொடுக்கும் இராயப்பு ஜோசப்பை கைது செய்ய வேண்டும்!- பொதுபல சேனா
[ செவ்வாய்க்கிழமை, 12 ஓகஸ்ட் 2014, 05:20.44 AM GMT ]

நாட்டையும், படையினரையும் காட்டிக் கொடுக்கும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், அவரைக் கைது செய்வதற்கு அரசாங்கம் பின்னடிப்பது எதற்காக என்றும் கேள்வியெழுப்பினார்.
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட  ஆணைக்குழு மீது நம்பிக்கை இல்லையென்றும், அக் குழுவிற்கு சாட்சியமளிக்க தயாரில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

அத்துடன், இது தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதாகவும் மன்னாரில் இடம்பெற்ற விசாரணையின் போது ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தமை தொடர்பாக தமது பக்க நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய போதே கலகொட அத்தே ஞானசாரதேரர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக தேரர் மேலும் தெரிவிக்கையில்;

ஆயர் இராயப்பு ஜோசப் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிராகவும் எமது படையினருக்கு எதிராகவும் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு அரசாங்கம் மௌனமாக இருக்கின்றது.

இராயப்பு ஜோசப் இலங்கையின் அரசியலமைப்பையும் சட்டங்களையும் மீறி செயற்படுகின்றார்.

இறுதிக் கட்ட யுத்தத்தில் எமது படையினர் கொத்து குண்டுகளை மக்கள் மீது பொழிந்தனர் என்றும் சர்வதேச ரீதியில் பிரசாரத்தை இவரே முன்னெடுத்தார்.

பாம்பு கடிக்கிறது என கூச்சலிட்டுக் கொண்டிருக்காமல் அப் பாம்மை அடித்துக் கொல்ல வேண்டும். அதேபோன்று தேசத்துரோக செயலில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் இராயப்பு ஜோசப்பை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyISWLdlu2.html#sthash.awGmv9lb.dpuf

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...