SHARE

Tuesday, August 12, 2014

``போர்க்குற்றம் புரிய 20 நாடுகளுக்கு இலங்கையில் பயிற்சி!``

போர் இரகசியங்களை 20 நாடுகள் இலங்கையிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளன!- பாதுகாப்பு அமைச்சு

[ செவ்வாய்க்கிழமை, 12 ஓகஸ்ட் 2014, 02:58.09 AM GMT ]

போர் இரகசியங்களை 20 நாடுகள் இலங்கையிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கொடிய பயங்கரவாதிகளை இலங்கை படையினர் தோற்கடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

போர் தந்திரோபயங்கள் மற்றும் போர் இரகசியங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் இராணுவத்தினர் இலங்கைக்கு விஜயம்செய்த வண்ணம் இருக்கின்றார்கள்.

பயங்கரவாத ஒழிப்பு தொடர்பிலான பாடங்களை கற்றுக்கொள்ள பல நாடுகள் விரும்புகின்றன.

சர்வதேச போர்ச் சட்டங்களுக்கு புறம்பாகா வகையில் போர்த் தந்திரோபாயங்களை படையினர் பயன்படுத்தியிருந்தனர்.

பிரிட்டனின் போர் உபாயங்களையே படையினர் பயன்படுத்தி வந்தனர். 2000ம் ஆண்டுக்கு பின்னர் புதிய போர்த் தந்திரோபாயங்கள் பயன்படுத்தப்பட்டன.

இருபது நாடுகளைச் சேர்ந்த படை அதிகாரிகள் இலங்கை இராணுவ முகாம்களில் பயிற்சி பெற்றுக்கொள்கின்றனர்.

எதிரிகளிடம் சிக்கிக்கொண்ட படையினரை மீட்டல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயிற்சி அளிக்கப்படுகின்றது.

மாதுருஓயா முகாம், கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவ்வாறு பயிற்சி அளிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyISWLdlu0.html#sthash.H6KB7sgS.dpuf
===============

No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...