Monday, 9 June 2014

எமது மகளின் சாவுக்கு நீதி வேண்டும் கொன்சலிற்றாவின் பெற்றோர் போராட்டம்.




எமது மகளின் சாவுக்கு நீதி வேண்டும் கொன்சலிற்றாவின் பெற்றோர் போராட்டம்
வெள்ளி, ஜூன் 6, 2014 - 18:55 மணி தமிழீழம் |

எமது மகளின் சாவுக்கு நீதி வேண்டும் ஆனால் அது கிடைக்காமல் போய்விடுமோ என்று தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளதாக கொன்சலிற்றாவின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

யாழ். குருநகர் பெரிய கோயிலுக்கு பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து கடந்த ஏப்பிரல் மாதம் 14ம் திகதி சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா தொடர்பிலான வழக்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி பி.சிவகுமார் முன்னிலையில் இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது வழக்கினை விசாரணை செய்த நீதவான் மீண்டும் வழக்கினை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு உத்தரவிட்டார். இன்றைய விசாரணையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பாரிய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மன்றில் சாட்சியமளித்திருந்தார்.

வழக்கு விசாரணைகளின் பின்னர் கொன்சலிற்றாவின் பெற்றோர்களிடம் இன்றைய வழக்கு விசாரணை தொடர்பாக கேட்ட போது,

இன்று எங்களை விசாரணைக்கு அழைக்கவில்லை பொலிசாரே சாட்சியம் அளித்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைகளில் எமக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என தற்போது எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எமது மகளின் மறைவுக்கு பின்னர் வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது தானாக முன்வந்த யாழில் உள்ள பிரபல சட்டத்தரணி ஒருவர் தான் இந்த வழக்கில் ஆஜராகி உங்களுக்கு நீதியை பெற்று தருவேன் என்று கூறினார்.

அதனை நாங்கள் நம்பி அவரை ஏற்றுகொண்டோம். அதன் பின்னர் அவர் கடந்த இரண்டு தவணைகளுக்கும் மன்றுக்கு சமூகமளிக்க வில்லை. நாம் அவரை தொடர்பு கொண்டபோது தனக்கு வேறு வழக்கு இருபதாகவும் தான் இந்த வழக்குக்கு சட்ட தரணியையும் ஒழுங்கு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அவரால் ஒழுங்கு செய்யப்பட சட்டதரணியே கடந்த தவணைகளில் எமக்காக மன்றில் ஆஜராகியிருன்தனர்.

குறித்த சட்டத்தரணி எமக்காக வாதாடுவது தொடர்பில் எமக்கு தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த தவணையின் போது வழக்கு விசாரணை முடிந்த பின்னர் எம்மை அழைத்த அவர் ஊடகங்களுக்கு இந்த வழக்கு தொடர்பாக எதனையும் தெரிவிக்க வேண்டாம் என மிரட்டும் பாணியில் எமக்கு கூறி இருந்தார்.

அது மட்டுமின்றி நீங்கள் இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவித்தால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடும் அதன் பின்னர் எதிராளிகள் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்ய கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.

அதனை நம்பி நாம் கடந்த தவணை விசாரணைகள் முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் நீதிமன்றின் மற்றைய வாசலால் வெளியேறி சென்றோம்.

அதன் பின்னர் நேற்று இன்றைய தினம் வழக்கு இருக்கிறது நீங்கள் நாளை நீதிமன்றில் எமக்காக ஆஜராகுவீர்கள் தானே என குறித்த பிரபல சட்டத்தரணியுடன் தொடர்பு கொண்டபோது தனக்கு வழக்கு இருபதாகவும் தான் முதலில் ஒழுங்கு செய்த சட்டத்தரணி இன்றும் உங்களுக்காக ஆஜர் ஆவார் எனவும் தெரிவித்தார்.

அவரால் ஒழுங்கு செய்யப்பட்ட சட்டத்தரணி மீது எமக்கு நம்பிக்கை இல்லாதா காரணத்தால் நாம் வேறு ஒரு சட்டத்தரணியை ஒழுங்கு செய்திருந்தோம். அதனை அடுத்து அவரால் ஒழுங்கு செய்யப்பட்ட சட்டத்தரணி ஏன் வேறு ஒருவரை ஒழுங்கு செய்தீர்கள் என எம்முடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் எமக்கு அவர் மீது இன்னும் அதிகமாக நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த தவணை வழக்கு விசாரணைகளின்போது கொன்சலிற்றாவின் தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாக அறிக்கை சமர்பிக்கும் படி பொலிசாருக்கு நீதவான் உத்தரவு இட்டு இருந்தார்.

அதன் பிரகாகரம் இன்றைய தினம் பொலிசாரால் கொன்சலிற்றாவின் இறப்புக்கு முன்னரான ஒரு மாத கால தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாகவே அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

அது தொடர்பில் கொன்சலிற்றாவின் பெற்றோரால் இன்று ஒழுங்கு செய்யப்பட்ட சட்டத்தரணி கொன்சலிற்றாவின் இறப்புக்கு முன்னரான 3 மாத கால தொலைபேசி அழைப்பு தொடர்பான அறிக்கையை மன்றில் சமர்பிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

ஏனெனில் கொன்சலிற்றாவின் இறப்புக்கு ஒரு மாத காலத்திற்கு முதலே கொன்சலிற்றாவின் பெற்றோரால் அவருடைய தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. அதன் பிறகு அவருக்கு தொலைபேசி அழைப்புக்கள் வரவில்லை என கூறியதை ஏற்றுக்கொண்ட நீதவான் கடந்த 3 மாத கால தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவு இட்டார்.

கொன்சலிற்றாவின் இறப்புக்கு யாழ். ஆயர் இல்லத்தை சேர்ந்த இரு பாதிரிமார்கள் தான் காரணம் என கொன்சலிற்றாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
==============
ஜெரோம் கொன்சலிற்றாவின் வழக்கு ஜுலை மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Posted By Thara On June 6th, 2014 12:14 PM | செய்திகள்

யாழ்.குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 22 வயதான ஜெரோம் கொன்சலிற்றாவின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (06.06.14)  இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் ஜுலை மாதம் 10 ஆம் திகதி யாழ். நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமாரினால் ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய வழக்கில், இரு மதகுருமாரின்; ஒரு மாத கால தொலைபேசி பதிவுப் பட்டியலை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

கொன்சலிற்றா, ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி காணாமற்போயிருந்த போதும், அவர் மறுநாள் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இறந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் இருக்கின்றது. இடைப்பட்ட நேரத்தில் அவர் எங்கிருந்தார் என்பது

தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கொன்சலிற்றாவின் பெற்றோர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணி கோரிநின்றார்.
அதுமட்டுமன்றி இரு மதகுருமார்களின் தொலைபேசி பதிவு தொடர்பில் மூன்று மாதகால பதிவுப் பட்டியல் எடுக்கப்பட்டாலே விசாரணைக்கு ஏதுவாக இருக்கும் என்றும்  நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இந்நிலையிலேயே இரு பாதிரியார்களின் தொலைபேசி பதிவுகள் தொடர்பிலான மூன்று மாதப் பதிவுப் பட்டியலினை பெற்று சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான், வழக்கை ஜூலை 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

யாழ்.குருநகர்ப் பகுதியினைச் சேர்ந்த 22 வயதுடைய ஜெரோம் கொன்சலிற்றா கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இவருடைய மரணத்திற்கு ஆயர் இல்லத்தில் இருக்கும்

இரண்டு மதகுருமாரே காரணம் என அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டதுடன் 16 ஆம் திகதித எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

மறைக்கல்வி கற்பிப்பதற்குச் சென்ற கொன்சலிற்றாவினை மதகுருமார்கள் இருவரும்  பாலியல் தொந்தரவு செய்து கொன்லிற்றாவின் மரணத்திற்கு காரணமாகினர்கள் என அவருடைய பெற்றோரும் உறவினர்களும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இதேவேளை இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ‘எனது மகளின் மரணத்திற்கு ஆயர் இல்லத்தில் மதகுருமார் இருவரே காரணம்’ என கொன்சலிற்றாவின் தாயாரும் , ‘எனது மகள் கொலை செய்யப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருக்கலாம்’ என தாம் சந்தேகிப்பதாக அவருடைய தந்தையும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
==============
http://senthanal.blogspot.co.uk/2014/04/blog-post_21.html

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...