SHARE

Monday, June 09, 2014

பாடசாலைக் காணியில் வர்த்தகக் கட்டிடங்கள் தலாவாக்கலையில் மாணவர் போராட்டம்.

பாடசாலைக் காணியில் வர்த்தகக் கட்டிடங்கள்,  தலாவாக்கலையில் மாணவர் போராட்டம்.
Submitted by P.Usha on Fri, 06/06/2014 - 10:57

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்குரிய காணியில், தலவாக்கலை லிந்துலை நகரசபையினால் வர்த்தக கட்டிடங்கள் அமைக்கபட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் குறித்த படசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 4000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த பாடசாலையின் காணியில் தலவாக்கலை லிந்துலை நகரசபையினால் வர்த்தக கட்டிடங்கள் அமைக்கபட்டு வருவதாகவும் அதனை உடனடியாக அகற்றுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் முழங்கினர்

எங்களின் பாடசாலை கட்டிடம் குறித்து நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இடத்துக்கு உடனடியாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வருகை தந்து எங்கள் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரினர்.




No comments:

Post a Comment

China rolls out the red carpet for Keir Starmer

China rolls out the red carpet for Keir Starmer PM holds three hours of ‘warm and constructive’ talks with Xi Jinping in bid © Carl Court/AF...