SHARE

Tuesday, March 25, 2014

இனப்படுகொலைப் போர்க்குற்றச் சாட்சி: ஆயர் இராயப்பு ஜோசப்

இனப்படுகொலைப் போர்க்குற்றச் சாட்சி

ஆயர் இராயப்பு ஜோசப்
இனப்படுகொலைப் போர்க்குற்றம்

இரசாயனக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன

``ஆகவே, தான் போர்க்காலத்தில் நடைபெற்ற சர்வதேச போர் குற்றங்கள் என
சொல்லப்பட்ட குறிப்பாக கொத்துக்குண்டுகள் இரசாயன குண்டுகளை கடைசி
நேரத்தில் பயன்படுத்தினர். ``

2
கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டன

``அத்துடன் ஒரு இடத்தில் வெடித்து பல இடத்திற்கு பரந்து கூடிய தீமைகளை தரக்கூடிய குண்டுகளை பயன்படுத்தியமை எல்லாம்  மக்களையும் விடுதலைப்புலிகளையும் கொல்வதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.``

3
இவற்றை நிரூபிக்க ஆதாரம் உண்டு

``இரசாயன குண்டுகளை இராணுவம் பாவித்தது என்று நீங்கள் சொன்னீர்களா? இவ் விடயமாக கொழும்பில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றார். ஆம் நான் சொன்னேன் என்று உடன் கூறினேன். அத்துடன் நிரூபிக்க தெரியும் என்றும் கூறினேன்.``

4
யுத்த சூனியப் பிரதேசத்தில் சாதாரண மக்களே அரசபடைகளால் கொல்லப்பட்டனர்

``ஆனால் அவர்கள் கொன்றது சாதாரண மக்களையே. யுத்த சூனிய பிரதேசத்தில் யாரையும் சுடக்கூடாது ஆனால் சனல் 4 காட்டிய காணொளியில் காட்டியது என்ன. அந்த இடத்தில் தான் அனைத்து குண்டுகளும் போடப்பட்டன. அப்போது மக்கள் படும் பாட்டை பார்க்க முடிகின்றது.இவ்வாறிருக்கையில் மகிந்த சமரசிங்க நாம் ஒரு பொது மகனும்
கொல்லப்படாமல் போரை முடித்துள்ளோம் என்று கூறுகின்றார்.``

5
சர்வதேச சட்ட நெறிமுறைகளை மீறியே இந்த யுத்தம் நடத்தப்பட்டது.
``அவர்கள் செய்த அனைத்து காரியங்களும் சர்வதேச சட்டங்களுக்கு மாறானதாகவும் போர் குற்றங்களாகவும் செய்து குவித்தார்கள்.``
6
மருத்துவர்களும் மருத்துவப் பணிமனைகளும் தாக்கப்பட்டன

``இறுதிவரை அங்கு மருத்துவர்கள் தங்கியிருந்து மக்களுக்காக பணி செய்தார்கள். நல்ல மனிதர்கள் அவர்கள்.``

7
மருந்தும் உணவும் போராயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.

``யுத்தம் இடம்பெற்ற இடத்தில் மருந்து இருக்கவில்லை. உண்பதற்கு உணவு இருக்கவில்லை. இவ்வாறான நிலையில் உணவையும் மருந்தையும் போர் ஆயுதமாக அவர்கள் பாவித்தார்கள்.``

8
பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டு வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தோர் கொல்லப்பட்டனர்.

``இது மட்டுமல்ல நடேசன், புலித்தேவன் ஆகியோரின் கடைசி முடிவை நாம்
அறிவோம். மறுநாளே தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்கள்
கைகளையெல்லாம் உயர்த்தியவாறு வெள்ளைக்கொடியை ஏந்தியவாறு
ஐ.நா.வின் உத்திரவிற்கு அமைய ஒன்றும் செய்யமாட்டோம் வர சொல்லுங்கள் என்றனர்.ஆனால் அவர்கள் அங்கேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள்.``
9
பாலகர்களைக் கொன்றார்கள். 

``அதே போலவே பாலச்சந்திரன் என்ற பிரபாகரனின் மகனுக்கு பிஸ்கட்டை கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றார்கள். ``

10
பெண்கள் மீதான பாலியல் பலாத்காரத்தை போர் ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள்.

இது குறித்து பேசுவதை ஆயர் மத நோக்கில் தவிர்த்திருக்கலாம், எனினும் அவரது பொது போர்க்குற்ற நோக்கில் இதை நாம் இணைத்திருப்பது தவறாகாது என்றும், வலுச்சேர்க்கும் என்றும் நம்புகின்றோம்.ENB


11
சரணடைந்தோரைக் கொன்றார்கள்

``எத்தனையோ விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைந்த போது கண்ணால் கண்டவர்கள் உள்ள நிலையில் சரணடைந்தவர்கள் தற்போது இல்லை.
ஆகவே இவ்வாறு சரணடைந்தவர்களை இவ்வாறு கொலை செய்வது உலகத்தை அழிக்கும் போர்க் குற்றமாகும்``

12
கொன்றவர்களை காணாமல் போனோர் பட்டியலில் சேர்த்தார்கள்.

``அதேபோல் காணாமல் போனோர் பட்டியலில் சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர். நல்லதொரு சொல் எல்லாவற்றுக்கும் காணாமல் போனோர் பட்டியல்.``

13

இனப்படுகொலை
146,679

``போரின் இறுதி எட்டு மாதங்களில் `ஒக்ரோபர்-மே` காணாமற்போன 146,679 பேர் தொடர்பில் நியாயம் வேண்டும்!- மன்னார் ஆயர் கோரிக்கை ``

குறிப்பு: ஒக்ரோபர் 2008 ஆண்டு வன்னி மக்களின்  உணவுத் தேவைக்காக  அரசாங்க அதிபர்களின் கைவசம் இருந்த தோராயமான மக்கள் தொகைப் புள்ளிவிபரத்துக்கும், முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேறி அரசாங்கத்திடம் சரணடைந்து முகாம்களில் அடைக்கப்பட்ட மக்கள் தொகைப் புள்ளிவிபரத்துக்கும், இடையான வேறுபாடே ஆயர் கோரும் 
146,679 ``காணாமல் போனோர் ஆகும்.

14
தலையிட மறுத்தது சர்வதேச சமூகம்

``இங்கிருந்த வெளிநாட்டு தூதுவர்கள் இதனை கேட்டும் கண்ணை
மூடிக்கொண்டே இருந்தார்கள். இந்திய தூதுவரிடம் ஏன் எம்மை கைவிடுகின்றீர்கள் எனக் கேட்டோம்........ இந்திய தூதுவர் இந்த கதையெல்லாவற்றையும் நாம் எடுக்க முடியாது. செய்வதையே செய்வோம். ஆனால் அதிகளாவன மக்களை இறக்க விடமாட்டோம் அத்துடன் உணவை போர் ஆயுதமாக பயன்படுத்த விடமாட்டோம் எனவும் தெரிவித்தனர். ஆனால் இது இரண்டுமேதான் நடந்தது. ஆனால் அவர்கள் வாயை மூடி இருந்தனர்.``


15
நல்லிணக்க ஆணைக்குழு போலி நாடகம்

 ``அமைச்சர் மகிந்த சமரசிங்க  கடந்த வருடம்(2013), ஜெனீவாவில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 92 வீதமானவற்றை நாம் நிறைவேற்றி விட்டோம் எனக் கூறியிருந்தார்.  ஆனால் அரை வீதம் கூட செய்யவில்லை (2014).``
16
2014 ஜெனிவாத் தீர்மானம் போதுமானதல்ல.

``சர்வதேச மேற்பார்வையோடு விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற அர்த்தத்திலேயே தற்போது எம் முன்னால் வைக்கப்படவுள்ள ஜெனீவா பிரேரணை அமைந்துள்ளது. ஆயினும் இது போதாது. இது எங்களுக்கு தேவையும் இல்லை.யாரை வைத்தாலும் இவர்கள் அவ்வாறே போவதற்கு விரும்புவார்கள்.சர்வதேச ரீதியாக ஒருவர் வந்து இவ்வாறு நடத்துங்கள் என்று கூறினாலும் அவர்களையும் தம் வசப்படுத்த வல்லமையுள்ளவர்கள். ஆகவே இதில் என்ன முடிவு வரும் என எனக்கு தெரியாது. ஆனால் எல்லோரும் சொல்கின்றார்கள் கொஞ்சம் நன்மை உள்ளது என. ஆனால் கொஞ்ச நன்மை எமக்கு போதாது.``

17
பொய்ப் பிரச்சாரத்தால் தென்னிலங்கை மக்கள் ஏமாற்றப்பட்டு இருட்டில் உள்ளனர்.

``அரசாங்கத்திற்கு சார்பான பத்திரிகைகள் எல்லாம் பொய்களையே
சொல்கின்றன. இதன் காரணமாக தென்னிலங்கை மக்கள் எல்லாம்
ஏமாற்றப்பட்டவர்களாக உண்மை என்றால் என்ன என்று தெரியாமல்
இருட்டுக்குள் இருந்து தடவிக் கொண்டிருக்கின்றார்களே தவிர இந்த நாட்டை
முன்னேற்றவோ வழிநடத்தவோ முடியாமல் உள்ளது.``

18
ஜனாதிபதியும் இருட்டிலேயே உள்ளார்.

``இது தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுதிய கடித்தில் உங்களை இருட்டுக்குள்
வைத்துள்ளனர். நீங்கள் வெளிச்சத்திற்கு வந்தாலே நாட்டை முன்னேற்ற முடியும். புதிய பாதையில் கொண்டு செல்ல முயும் என நான் தெரிவித்திருந்தேன்.இதற்கான நியாயத்தையும் நான் காட்டியே எழுதியுள்ளேன்.ஆனாலும் இன்னும் அதே இருட்டிலேயே அவர்கள் தற்போதும் இருக்கின்றார்கள்.``

19
சர்வதேச விசாரணை தேவை

பொய்யர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர். எனவே நாம் இவ்வாறானவர்களை நம்பி உண்மையை கண்டு பிடிப்பர்கள் என இருந்து விட முடியாது. ஆகவேதான் சர்வதேச விசாரணை எமக்குத் தேவை

மன்னார் கத்தோலிக்க ஆயர் இராஜப்பு ஜோசப்

அவர்களது கருத்துக்களில் இருந்து தொகுக்கப்பட்ட போர்க் குற்றப் பத்திரிகை
============================================
செய்தி:

பெரிய சாத்தானை விட அதிகமாக பொய் கூறுபவர்களே இந்த அரசில் உள்ளனர்;  மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்
2014-03-23 08:51:18 | General

மன்னார் , தலைமன்னார் , வவுனியா நிருபர்கள்

இந்த அரசாங்கத்தில் பெரிய சாத்தானை விட பொய்ச் சொல்கின்றவர்களே
அதிகளவில் உள்ளனரென மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்
தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சிவில்
அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து
கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு  தெரிவித்த ஆயர்  அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்  ;

இந் நாட்டின் ஆட்சியாளர்களுக்கு இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வருவதற்கு விருப்பமில்லை. இருட்டுக்குள் செய்யும் காரியங்களையே செய்கின்றனர். மெய்யை சொல்வதற்கு அற்பமேனும் சக்தி அவர்களுக்கு வரவில்லை. இவ்வாறு இருட்டுக்குள் இருக்கும் மனிதர்கள் கைகளால் தடவிக்கொண்டே இருப்பார்கள்.

வெளிச்சம் இருக்குமாக இருந்தாலே முன்னேறலாம். ஆகவே இந்த நாடு
முன்னேற வேண்டுமாக இருந்தால் சர்வதேச விசாரணை இன்றியமையாததாகும்.ஆனால், ஆட்சியாளர்கள் இருட்டுக்குள் இருந்து கொண்டே ஆட்சிபுரிய நினைக்கின்றனர்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுதிய கடித்தில் உங்களை இருட்டுக்குள்
வைத்துள்ளனர். நீங்கள் வெளிச்சத்திற்கு வந்தாலே நாட்டை முன்னேற்ற முடியும்.

புதிய பாதையில் கொண்டு செல்ல முயும் என நான் தெரிவித்திருந்தேன்.
இதற்கான நியாயத்தையும் நான் காட்டியே எழுதியுள்ளேன்.

ஆனாலும் இன்னும் அதே இருட்டிலேயே அவர்கள் தற்போதும் இருக்கின்றார்கள்.

அவ்வாறே மக்களை ஆளலாம் எனவும் எண்ணுவதுடன் மக்களை பொய்மையில் அழைத்து சென்று தென்னிலங்கை மக்களை அறியாமையில் வைத்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு சார்பான பத்திரிகைகள் எல்லாம் பொய்களையே
சொல்கின்றன. இதன் காரணமாக தென்னிலங்கை மக்கள் எல்லாம்
ஏமாற்றப்பட்டவர்களாக உண்மை என்றால் என்ன என்று தெரியாமல்
இருட்டுக்குள் இருந்து தடவிக் கொண்டிருக்கின்றார்களே தவிர இந்த நாட்டை
முன்னேற்றவோ வழிநடத்தவோ முடியாமல் உள்ளது.

இதனால் தான் இத்தனை பிரச்சினைகளும் நம்மிடத்தில் உள்ளன. ஆகவே தான் பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான சர்வதேச விசாரணை தேவை என அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.

எனினும் சர்வதேச மேற்பார்வையோடு விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற அர்த்தத்திலேயே தற்போது எம் முன்னால் வைக்கப்படவுள்ள ஜெனீவா பிரேரணை அமைந்துள்ளது. ஆயினும் இது போதாது. இது எங்களுக்கு தேவையும் இல்லை.யாரை வைத்தாலும் இவர்கள் அவ்வாறே போவதற்கு விரும்புவார்கள்.

சர்வதேச ரீதியாக ஒருவர் வந்து இவ்வாறு நடத்துங்கள்  என்று கூறினாலும்
அவர்களையும் தம் வசப்படுத்த வல்லமையுள்ளவர்கள். ஆகவே இதில் என்ன
முடிவு வரும் என எனக்கு தெரியாது. ஆனால் எல்லோரும் சொல்கின்றார்கள்
கொஞ்சம் நன்மை உள்ளது என. ஆனால் கொஞ்ச நன்மை எமக்கு போதாது.

ஏன் நாம் கொஞ்சம் கொஞ்சமாக நன்மையை பெற வேண்டும். நாம் முழு
நன்மையை பெறுவற்கும் வழி உள்ளது தானே. ஆகவே அந்த வழியை நாம்
கடைப்பிடித்தால் என்ன?. அவ்வாறான தைரியம் சர்வதேசத்திற்கு தேவை. அதே போல் இந்த நாடும் திருந்துவதற்கு அதுவே ஒரேயொரு வழியாகவும் உள்ளது.

ஆகவே, தான் போர்க்காலத்தில் நடைபெற்ற சர்வதேச போர் குற்றங்கள் என
சொல்லப்பட்ட குறிப்பாக கொத்துக்குண்டுகள் இரசாயன குண்டுகளை கடைசி
நேரத்தில் பயன்படுத்தினர். அத்துடன் ஒரு இடத்தில் வெடித்து பல இடத்திற்கு
பரந்து கூடிய தீமைகளை தரக்கூடிய குண்டுகளை பயன்படுத்தியமை எல்லாம்  மக்களையும் விடுதலைப்புலிகளையும் கொல்வதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் கொன்றது சாதாரண மக்களையே. யுத்த சூனிய பிரதேசத்தில் யாரையும் சுடக்கூடாது ஆனால் சனல் 4 காட்டிய காணொளியில் காட்டியது என்ன. அந்த இடத்தில் தான் அனைத்து குண்டுகளும் போடப்பட்டன. அப்போது மக்கள் படும் பாட்டை பார்க்க முடிகின்றது.

அதனை பார்த்தால் இவ்வாறு செய்பவர்கள் மனிதர்கள் தானா என கண்ணீர் விட வேண்டியுள்ளது. இக் காணொளியை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒருவர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு  இரசாயன குண்டுகளை இராணுவம் பாவித்தது என்று நீங்கள் சொன்னீர்களா? இவ் விடயமாக கொழும்பில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றார். ஆம் நான் சொன்னேன் என்று உடன் கூறினேன். அத்துடன் நிரூபிக்க தெரியும் என்றும் கூறினேன்.

அது மட்டுமல்ல அவர்கள் செய்த அனைத்து காரியங்களும் சர்வதேச
சட்டங்களுக்கு மாறானதாகவும் போர் குற்றங்களாகவும் செய்து குவித்தார்கள்.இறுதிவரை அங்கு மருத்துவர்கள் தங்கியிருந்து மக்களுக்காக பணி செய்தார்கள். நல்ல மனிதர்கள் அவர்கள்.

அந்நிலையில் அவர்கள் இங்கு வந்தவுடன் என்ன நடந்தது என்று எமக்கு தெரியும். யுத்தம் இடம்பெற்ற இடத்தில் மருந்து இருக்கவில்லை. உண்பதற்கு உணவு இருக்கவில்லை. இவ்வாறான நிலையில் உணவையும் மருந்தையும் போர் ஆயுதமாக அவர்கள் பாவித்தார்கள்.

இங்கிருந்த வெளிநாட்டு தூதுவர்கள் இதனை கேட்டும் கண்ணை
மூடிக்கொண்டே இருந்தார்கள். ஏனெனில் அரசாங்கம் தாம்
செய்வதெல்லாவற்றையும் அதிகளவாக பிரசாரம் செய்தவுடன் தமிழர்கள்
எல்லாம் தற்போது பொய் செல்வார்கள் என எண்ணி அவர்கள் கண்மூடித்தனமாக இருந்ததை நான் அறிவேன்.

இந்திய தூதுவரிடம் ஏன் எம்மை கைவிடுகின்றீர்கள் எனக் கேட்டோம். நம் தாய் நாடு இந்தியாவாக உள்ளது. அங்கிருந்தே நம் முன்னோர் இங்கு வந்தனர்.

அவ்வாறு இருக்கும் போது தாய்க்குரிய பாசத்தையல்லவா  நீங்கள் விடுதலைப் புலிகள் மீதும் காட்டவேண்டும். விடுதலைப்புலிகள் செய்த குற்றங்களை மன்னித்து அவர்களை ஏற்க உங்களால் முடியாதா. உங்கள் தாய்க்குரிய பண்பை வெளிக்காட்ட முடியாதா என கேட்டோம்.

அப்போதும் இந்திய தூதுவர் இந்த கதையெல்லாவற்றையும் நாம் எடுக்க
முடியாது. செய்வதையே செய்வோம். ஆனால் அதிகளாவன மக்களை இறக்க
விடமாட்டோம் அத்துடன் உணவை போர் ஆயுதமாக பயன்படுத்த விடமாட்டோம் எனவும் தெரிவித்தனர். ஆனால் இது இரண்டுமேதான் நடந்தது. ஆனால் அவர்கள் வாயை மூடி இருந்தனர்.

இது மட்டுமல்ல நடேசன், புலித்தேவன் ஆகியோரின் கடைசி முடிவை நாம்
அறிவோம். மறுநாளே தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்கள்
கைகளையெல்லாம் உயர்த்தியவாறு வெள்ளைக்கொடியை ஏந்தியவாறு
ஐ.நா.வின் உத்திரவிற்கு அமைய ஒன்றும் செய்யமாட்டோம் வர சொல்லுங்கள் என்றனர்.

ஆனால் அவர்கள் அங்கேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள். அதே போலவே பாலச்சந்திரன் என்ற பிரபாகரனின் மகனுக்கு பிஸ்கட்டை கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றார்கள். எத்தனையோ விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைந்த போது கண்ணால் கண்டவர்கள் உள்ள நிலையில்
சரணடைந்தவர்கள் தற்போது இல்லை.

ஆகவே இவ்வாறு சரணடைந்தவர்களை இவ்வாறு கொலை செய்வது உலகத்தை அழிக்கும் போர்க் குற்றமாகும். அதேபோல் காணாமல் போனோர் பட்டியலில் சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர். நல்லதொரு சொல் எல்லாவற்றுக்கும் காணாமல் போனோர் பட்டியல்.

இவ்வாறிருக்கையில் மகிந்த சமரசிங்க நாம் ஒரு பொது மகனும்
கொல்லப்படாமல் போரை முடித்துள்ளோம் என்று கூறுகின்றார். இதனைப்போல் மனிதன் வாயை திறந்து சொல்வான என பாருங்கள். சாத்தானை விடவும் பெரிய சாத்தான் கூட சொல்லமாட்டான். அந்த அளவிற்கு பொய் கூறுகின்றார்கள்.

இதே அமைச்சர் கடந்த வருடம் ஜெனீவாவில்  நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 92 வீதமானவற்றை நாம் நிறைவேற்றி விட்டோம் எனக்
கூறியிருந்தார்.  ஆனால் அரை வீதம் கூட செய்யவில்லை.

ஆகவே இவ்வாறான பொய்யர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர். எனவே நாம் இவ்வாறானவர்களை நம்பி உண்மையை கண்டு பிடிப்பர்கள் என இருந்து விட முடியாது. ஆகவேதான் சர்வதேச விசாரணை எமக்குத் தேவை என்றார்.

- See more at: http://www.thinakkural.lk/article.php?local/dqtxuw1loj4234fd45ebc1e111412pcrebd76bc1fe0ba933e60e9957shpbb#sthash.8GW4LHJB.
dpuf

இறுதிப்போரில் காணாமற்போன 146,679 பேர் தொடர்பில் நியாயம் வேண்டும்!- மன்னார் ஆயர் கோரிக்கை

போரின் இறுதி எட்டு மாதங்களில் காணாமல் போனதாக கூறப்படும் 146 ஆயிரத்து 679 பேர் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்  கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பின் ஊடகம் ஒன்று இந்த கோரிக்கை குறித்த செய்தியை பிரசுரித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை முன்வைக்கவேண்டும்.

அத்துடன் தமிழர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளை மாற்றும் முயற்சியை கைவிடவேண்டும் என்றும் ஆயர் கேட்டுள்ளார்.

தாம் வன்முறைகளை எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ள ஆயர், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வன்முறைகளையும் தாம் கண்டித்தமையை சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் பொதுமக்களை கொலை செய்தமையையும் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ஆயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கம், தமிழர்களை தண்டிக்கும் வகையில் அவர்களை தோல்வியடையச் செய்யும் வகையில், தமிழ் பிரதேசங்களின் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
 அவர்களின் பிரதேசங்களில் சிங்களக்குடியேற்றங்களை மேற்கொள்கின்றது என்றும் ஆயர் குற்றம் சுமத்தியுள்ளார்.

போரின் போது அரச பயங்கரவாதம் மற்றும் தமிழர்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது.

அரசாங்கத்தில் உள்ள சிலர் ஒரே மக்கள் ஒரே நாடு என்று கூறுகிறார்கள், இதில் ஒரே நாடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் தமிழர்கள் தனியான இனம், தனியான கலாசாரத்தை கொண்டவர்கள், அவர்களின் அரசியல் அபிலாசைகள் வேறானவை என்று மன்னார் ஆயர் குறிப்பிட்டுள்ளார்
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=656032381420791914#sthash.eFes7vQL.dpuf

No comments:

Post a Comment

“Nowadays, many people wondering how even to celebrate Christmas and find their daily meals,” Cardinal

Speaking to the media ahead of Christmas on Dec. 19, the cardinal urged Catholics to remember the less fortunate this Christmas, encouraging...