Tuesday, 26 November 2013

`` மாவீரர் தினம் மக்கள் உரிமை `` : யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் மீது பாய்ந்தது பயங்கரவாதக் குற்றத்தடுப்பு பிரிவு

யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் மீது பாய்ந்தது பயங்கரவாதக் குற்றத்தடுப்பு பிரிவு
[ செவ்வாய்க்கிழமை, 26 நவம்பர் 2013, 10:33.21 AM GMT ]

யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இ.இராசகுமாரன் பயங்கரவாதக் குற்றத் தடுப்பு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த விசாரணை இன்று மாலை யாழ்ப்பாணத்திலுள்ள பயங்கரவாதக் குற்றத் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள பத்திரிகை ஒன்றில் இருந்து வெளியான செய்தி தொடர்பிலேயே தம்மிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக தலைவர் முன்னர் தெரிவித்திருந்தார்.

ஆனால் யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறலாம் என்ற அச்சம் காரணமாகவே அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் இவ்வாறு மேற்கொள்ளப்படுவதாக ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக ஆசியரியர் சங்கத்தின் தலைவர் அ.இராசகுமாரான் இன்று மாலை சிறிலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இரண்டாம் இணைப்பு

யாழ்.பல்கலைக்கழக ஆசியரியர் சங்கத்தின் தலைவர் அ.இராசகுமாரான் இன்று மாலை சிறிலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினரும், காவலதுறையினரும் மாவீரர் தினத்தினை மக்கள் அனுஸ்டிப்பதை தடுத்து நிறத்த முடியாது என்று கூற முடியாது என்றும், அனைத்து தமிழ் மக்களுக்கும் மாவீரர்களை நினைவுகூற உரிமை உள்ளது என்றும் நேற்று முன்னதினம் யாழ்.ஊடகங்களில் அறிக்கை விடுத்திருந்தார்.

இதன் எதிரோலியாகவே அவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு காவல்துறையினரால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மாலை 3 மணியளவில் யாழ்.நாவலர் வீதியில் அமைந்துள் பயங்கரவாத குற்றத்தடுப்பு காவல்துறை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட அவர், இரவு 7 மணியாகியும் விடுவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் நாளை மாவீரர் தினத்தினை அனுஸ்டிப்பதை தடுத்து நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையே இது என்று தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...