SHARE

Tuesday, May 07, 2013

வலிகாமம் தமிழ் விவசாயிகளின் 6381 ஏக்கர் நிலம் படைகளால் உத்தியோகபூர்வமாக பறிப்பு

வலிகாமம் தமிழ் மக்களின் 6381 ஏக்கர் நிலம் படைகளால் உத்தியோகபூர்வமாக பறிப்பு

[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 04:39.13 PM GMT ]


வலி. வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தமிழ் மக்களின் 6 ஆயிரத்து 381 ஏக்கர் உறுதிக் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளன. இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் நேற்று ஒட்டப்பட்டுள்ளன.

யாழ்.மாமாவட்டக் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தினால், காணி சுவீகரிப்பு அதிகாரி ஆ.சிவசுவாமியின் கையொப்பத்துடன், காணி எடுத்தல் சட்டத்தின் (அத் 460) 2 ஆம் பிரிவின் கீழான அறிவித்தல் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலை 8.30 மணியளவில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திலிருந்து புறப்பட்ட கிராம சேவையாளர்கள் மற்றும் பட்டதாரி பயிலுநர்கள், மாவிட்டபுரம் சந்திக்கு அண்மையிலுள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லையில் வைத்து இராணுவ வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

இவர்கள் காணிகள் சுவீகரிக்கப்படுவது தொடர்பான அறிவித்தல்களை அந்தந்த இடங்களில் ஒட்டினார்கள்.

யாழ்.பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்துக்கு பலாலி, காங்கேசன்துறை ஆகிய உயர்பாதுகாப்பு வலயப் பகுதியை முறைப்படி கையளிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Modi meets Yunus in Bangkok

PM Modi meets Bangladesh Chief Adviser Yunus, raises India’s concerns over safety of Hindus External Affairs Minister S Jaishankar and Natio...